நேற்றைய சந்தைகள் 2 % க்கும் ( - 65 புள்ளிகள் )அதிகமாக சரிவில் தொடங்கின . ஆனால் மேலும் மேலும் சரிவில் வர்த்தகம் ஆனது . முன்பே கூறியது போல் துவக்கத்தின் போதே 3100 , 3070 , ஆகிய இரண்டு முக்கிய அதரவு நிலைகளும் உடைபட்டன . இருந்தாலும் சந்தைகள் திரும்ப அந்த புள்ளிகளை எட்டி பிடிக்க முயற்சி மேற் கொண்டன .. ஆனால் முடியவில்லை . பின்னர் அங்கிருந்து கீழிறங்க ஆரம்பித்தன .
நமது சந்தைகள் துவக்கத்துக்கு பின்னர் மற்றும் ஆசியசந்தைகளின் இடைவேளையின் போது அமெரிக்க பியுச்சர் சந்தைகள் 200 புள்ளிகள்வரை சரிவில் வர்த்தகம் ஆனது . அமெரிக்காவில் GENERAL MOTOR'S நிறுவனம் பற்றிய திவால் அறிவிப்பே சந்தைகளின் சரிவிற்கு காரணம் ஆகும் ..
பின்னர் இந்த சரிவு ஆசிய மற்றும் நமது சந்தைகளையும் சரிவிற்கு கொண்டு சென்றது ..
நமது சந்தைகள் ஆசிய சந்தைகளின் போக்கினை தொடர்ந்து சரிவில் சென்றது . முடிவில் சந்தைகள் " 130 " புள்ளிகள் இழந்து " 2978 " புள்ளிகளில் சந்தைகள் நிலை பெற்றன ..
நேற்று முடிந்த அமெரிக்க சந்தைகள் "GENERAL MOTOR'S " இன் திவால் அறிவிப்பால் ஆட்டோ துறை பங்குகள் மற்றும் அனைத்து பங்குகளையும் சரிவிற்கு கொண்டு சென்றது . அமெரிக்க சந்தைகள் மற்றும்
ஐரோப்பிய சந்தைகள் முடிவில் 3 % TO 4 % வரை சரிவில் முடிந்தன ..
இன்றைய ஆசிய சந்தைகள் மற்றும் நமது சந்தைகள்சற்று " GAP UP "
இல் துவங்கலாம் . நேற்றைய வீழ்ச்சிக்கு பிந்தைய எழுச்சி இன்று அல்லது
நாளை எதிர் பார்க்கலாம் .
நிப்டி நிலைகள் ;-----
அதரவு - 2970 , 2950 , 2920 ....
எதிர்ப்பு - 3000 , 3020 , 3038 ...
நன்றி !!!
கடவுள் தந்த அழகிய வாழ்வு உலகம் முழுதும் அவனது வீடு கண்கள் மூடியே வாழ்த்து பாடு !!!!