திங்கள், 23 மார்ச், 2009

பங்கு சந்தை ஒரு அலசல்

வணக்கம் நண்பர்களே !!!

பங்கு சந்தை என்றால் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது -- பங்கு சந்தை பற்றி தெரிந்தவர்களுக்கு ஹர்சர் மேத்தா - தெரியாதவர்களுக்கு இது ஒரு சூதாட்டம் -- இப்படி தான் நம் மக்கள் தவறாக எல்லாவற்றையும் புரிந்து கொள்வது போல இதையும் புரிந்து வைத்துள்ளனர் . ஆனால் அப்படி அல்ல பங்கு சந்தை என்பது ஒரு ஊகவணிகம் . ஊக வணிகம் என்றால் தகவல் மற்றும் செய்திகள் அடிப்படையிலான வணிகம் ஆகும் . சந்தை மற்றும் அதன் அனைத்து விபரங்களையும் கீழே வரிசையாக பார்க்கலாம் .

முதலில் பங்குகள் என்றால் என்ன ?
**************************************

எந்த ஒரு தனியார் நிறுவனமும் தனது விரிவாக்க பணிகளுக்காக தேவைப்படும் தொகையினை மக்களிடம் பெற்று அதை கொண்டு தனது விரிவாக்க பணிகளை செய்யலாம் . அந்நிலையில் மக்களுக்கு அவர்களின் முதலீட்டுக்கு உண்டான அளவுக்கு பங்குகள் வழங்கப்படும் . இந்த பங்கு வெளியீடுக்கு அந்த நிறுவனங்கள் முறையான நிர்வாகம் மற்றும் வரவு செலவுகள் பிற செயல்பாடுகளையும் குறித்து செபிக்கு விண்ணப்பிக்க வேண்டும்..

அந்த விபரங்களை பரிசீலித்து செபி அவர்களுக்கு பங்கு வெளியீட்டுக்கு அனுமதி வழங்கும் . அந்த பங்குகள் எல்லாம் முகமதிப்பின் அடிப்படையில் வழங்கப்படும் . அவை நிறுவனத்தின் மொத்த மதிப்பில் இருந்து (இருப்பு ,சொத்து , கடன் , இதர இருப்புகள் ஆகியவற்றை கொண்டு) மொத்த மதிப்பில் இருந்து 10 ரூபாய் மதிப்பிற்கு கணக்கிட்டு பங்குகளை முகமதிப்பில் வெளியிடுவார்கள் . வெளியீட்டுக்கு பிறகு அந்த நிறுவனக்கள் பப்ளிக் லிமிடெட் நிறுவனமாக மாற்றப்படும் .

IPO ( INITIAL PUPLIC OFFER )---
***********************************
புதிய பங்கு வெளியீட்டில் இறங்கும் நிறுவனங்கள் செபி அமைப்பில் முறையான அனுமதி பெற்று பின்பு நேசனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ் , மற்றும் மும்பை ஸ்டாக் எக்ஸ்சஞ் ஆகிய எக்ஸ்செஞ்ச்களில் அறிவிப்பு செய்து பின்னர் பங்கு வெளியீட்டு விண்ணப்பங்களை மக்களுக்கு வழங்கும் அதன் விண்ணப்ப படிவங்கள் அனைத்து ஸ்டாக் புரோக்கர் மற்றும் வங்கிகளிலும் கிடைக்கும் .

அதற்க்கு குறிப்பிட்ட நாளில் விண்ணப்பிக்க வேண்டும் என்ற முடிவு தேதியும் அறிவிப்பார்கள் . விலைகள் விண்ணப்ப படிவத்தில் இருக்கும் பங்குகளின் முகமதிப்பு 10 - ஆனால் விலை சந்தையில் அதன் தொடர்புடைய நிறுவனங்களின் விலைகளை வைத்து( பிரிமியம் ) இருக்கும் . ஆனால் 10 ரூபாய்க்கு கிடைக்காது . நாம் முதலீடு செய்வது என முடிவு செய்ததும் விண்ணப்ப படிவத்தில் நமது விபரங்களை தந்து முதலீட்டு தொகைக்கான காசோலை அல்லது வங்கி டிமாண்டு டிராப்ட் தர வேண்டும் . வரப்பெற்ற மொத்த விண்ணப்பங்களையும் கொண்டு அனைவருக்கும் வழங்குவார்கள் . விண்ணப்பங்கள் அதிகமாக இருந்தால் பிரித்து வழங்குவார்கள் .

ஸ்டாக் எக்ஸ்சேஞ் ---
***************************
நமது நாட்டில் இரண்டு பங்கு சந்தைகள் நல்லமுறையில் இயங்கி வருகின்றன . இவற்றில் தினமும் பங்குகள் வாங்கி விற்று வர்த்தகம் நடை பெரும் இதற்க்கு இரண்டாம் தர சந்தை என அழைக்க படுகிறது . இவற்றில் பங்குகளை வாங்குபவர் மற்றும் விற்பவர் இடையே நடை பெரும் பரிமாற்றத்தை மட்டும் பங்கு சந்தைகள் செய்து தருகின்றன . அதனால் எக்ஸ்சேஞ் களுக்கு பரிமாற்ற கமிசன் மற்றும் நிறுவனக்கள் செலுத்தும் ஆண்டு சந்தா கிடைக்கிறது . அரசாங்கத்திற்கு வரி கிடைக்கிறது .

செபிக்கு பங்குகள் அனுமதியின் பொழுது செலுத்தும் கட்டணம் மற்றும் விதிமுறை மீறுபவர்கள் செலுத்தும் அபராதங்கள் செபிக்கு கிடைக்கிறது .

பங்குகள் அந்தந்த நிறுவனங்கள் முறைப்படி குறிப்பிட்ட அளவிலான பங்குகளை லிஸ்ட் செய்து இருப்பார்கள் அதற்க்கு எக்ஸ்சேஞ் இக்கு குறிப்பிட்ட தொகையினை செலுத்த வேண்டும் . இதற்க்கு முன்னர் கூறிய ஐ பி ஒ என்பது முதல் தர சந்தை , இது இரண்டாம் தர சந்தை புரிகிறதா நண்பர்களே . இது போல முதல் தர சந்தையில் வெளியிடப்பட்ட பங்குகள் முதல் நாளில் மட்டும் லிஸ்டிங் என்ற பெயரில் வணிகம் செய்யப்படும் . அடுத்த நாள் முதல் தொடர்ச்சியாக வர்த்தகம் சந்தையில் அந்த பங்குகளின் மீது மேற்க்கொள்ளப்படும் .

பங்கு சந்தையில் எப்படி வியாபாரத்தை ஆரம்பிப்பது ???
***********************************************************

பங்கு சந்தையில் வியாபாரம் செய்ய முதலில் சந்தை பற்றிய சிறிதளவாவது அனுபவம் தேவை . பின்னர் வருமான வரி அட்டை மற்றும் உங்களது முகவரி சான்று பாஸ்போர்ட் போட்டோ ஆகியவற்றை தந்து டிமாட் கணக்கினை உங்கள் பகுதியில் உள்ள ஸ்டாக் ஆபீஸ் இல் துவங்க வேண்டும் பின்னர் வணிகத்தில் ஈடுபடலாம் . அந்த கணக்கில் தொகையினை செலுத்தி பங்குகள் வாங்க விற்க பயன் படுத்தலாம் . கணக்கினை சம்பந்தப்பட்ட நிறுவனம் பார்த்து கொள்ளும் . கணக்கின் விபரங்களை தினமும் மின் அஞ்சல் முறையில் உங்களுக்கு வழங்கும் .

முறையீடு ----
*****************
மேற்குறிப்பிட்ட தங்களது கணக்கில் கோளாறுகள் ஏதேனும் ஏற்ப்பட்டால் நீங்கள் பங்கு சந்தையில் அதற்கென நியமிக்கப்பட்ட நபர்களிடம் மின் அஞ்சல் மற்றும் கடிதம் வாயிலாக முறையிடலாம் . சந்தைகள் பற்றி குறைபாடு என்றால் செபியில் முறையிடலாம் .

நன்றி !!!

அடுத்த பதிவில் மிச்சம் உள்ளதை கூறியுள்ளேன் ..

தொடர அடுத்த பதிவினை ---