திங்கள், 22 ஜூன், 2009

பதிவு நிறுத்த அறிவிப்பு

வணக்கம் நண்பர்களே !!!

சில தவிர்க்க முடியாத காரணங்களினால் இந்த பதிவினை தொடர இயலவில்லை . மீண்டும் தொடர வாய்ப்புகள் குறைவாக உள்ளது .


முடிந்த வரை தொடர முயற்சிக்கிறேன்

மன்னிக்கவும்

நன்றி !!!

ஞாயிறு, 21 ஜூன், 2009

கடந்த வார சந்தைகள் !!!

INDICES == WKLY CLS = C HANGE ( - OR + )
**************** ******************
NIKKIE = 9786 = - 348.71 .
FTSE = 4345.93 = -96.02 .
DAX = 4839.46 = -229.78.
CAC = 3221.27 = -104.87 .
STRAITES = 2273.18= 103.89.
DOW JONES = 8539.73 = 259.53 .
NASDAQ = 1823.03 = -35.07 .
HANG SENG = 17920.93= -969 .
KOSPI = 1383.34= - 45.25 .
NIFTY = 4313.60 =- 270 .
SENSEX = 14521.89 = -715.11.
SGX NIFTY = 4585 = -2 .

*********************************************************
வெள்ளியன்று சந்தைகள் துவக்கம் சற்று உயர்வாக இருந்தது . பின்னர் சந்தைகளில் வந்த அதிக செல்லிங் காரணமாக சந்தைகள் தொடர்ச்சியாக சரிந்தன .மேலும் முக்கிய தடை நிலையான 4325 - 4280 ஆகிய இரண்டு நிலைகள் உடைந்ததால் சந்தைகளில் மேலும் மேலும் செல்லிங் அதிகரித்தது .

ஆசிய சந்தைகள் 1 % வரை அதிகரித்து முடிந்தன .ஆனாலும் ஆசிய சந்தைகள் வர்த்தகத்தின் இடையில் நாளின் குறைந்த பட்ச புள்ளிகளில் வர்த்தகம் ஆனது ஆசிய சந்தைகள் முடிவில் தான் உயர்வினை அடைந்தன என்பது குறிப்பிடத் தக்கது .

வெள்ளியன்று அமெரிக்கா சந்தைகள் துவக்கம் பெரிய எதிர் பரப்பில் இருந்தது ஆனால் முந்தய மூன்று தினங்களின் சரிவுக்கு பிந்தைய மீட்சியை சந்தைகளில் காண முடியவில்லை . மேலும் அமெரிக்கா சந்தைகள் டவ் ஜோன்ஸ் 8600 நிலைகளுக்கு மேல் சந்தைகளை நிலை நிறுத்த முடிய வில்லை மேலும் சந்தைகள் கடைசி இரு தினங்கள் மேற்குறிப்பிட்ட நிலைகளுக்கு கீழே முடிவடைந்துள்ளன . அநேகமா எனது கணிப்பின் படி அமெரிக்கா சந்தைகள் திங்களன்று இந்த நிலைகளை தாண்ட விலை என்றால் 8300 வரை சந்தைகள் உடனடியா ஒரு சரிவுகள் வரலாம் என கருதுகிறேன் .

மேலும் வியாழனன்று வந்த இன்பிலேசன் அறிவிப்புகள் சற்று குழப்பத்தினை சந்தைகளில் ஏற்படுத்தி உள்ளது . ஆனால் கட்டாயம் இது டேப்லேசன் இல்லை என புரிந்து கொள்ளுங்கள் . இன்பிலேசன் - 1.61 வஸ் 0.13 என்று வந்துள்ளது .

இந்த ஒரு நெகடிவ் இன்பிலேசன் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வந்துள்ளதாக தெரிகிறது .மேலும் இது வரும் வாரங்களில் சந்தைகளில் கடும் சரிவினை கொண்டு வரலாம் .

மேலும் வெள்ளியன்று வந்துள்ள செபி இன் அறிவிப்பில் அந்நிய முதலீட்டாளர்களுக்கு கட்டணத்தில் பாதியாக குறைத்துள்ளது . மேலும் பரஸ்பர நிதியகங்கள் வசூலிக்கும் நுழைவுக்கட்டணம் முழுவதும் ரத்து செய்துள்ளது இது முதலீட்டளர்களுக்கு சற்று சந்தோசமான செய்தி தான் .

இப்படி ஒரு நல்ல மற்றும் கெட்ட செய்திகள் வந்தாலும் upa அரசு இனி மேற்க்கொள்ள இருக்கும் பட்ஜெட் அறிவிப்பிற்கும் மற்றும் இதர விசயங்கள் மற்றும் அரசு முதலீடை சிறிதளவு குறைப்பது என்ற முடிவுகள் சந்தைகளில் பின் நாளில் பெரிய தாக்கத்தினை ஏற்ப்படுத்த வாய்ப்புகள் அதிகமாக உள்ளது .

நன்றி !!

வெள்ளி, 19 ஜூன், 2009

வணக்கம் ..

சில முக்கிய பணிகளின் காரணமாக இன்றைய பதிவினை விரிவாக எழுதிட இயலவில்லை .

முந்தய பதிவுகளில் குறிப்பிட்டது போல உலக சந்தைகளில் எழுச்சி என்பது மருந்துக்கு கூட இல்லாமல் வர்த்தகம் ஆகி வருகிறது . ஆகவே நண்பர்களே இந்தவார இறுதி வர்த்தக தினம் மற்றும் நேற்றைய மைனஸ் இன்பிலேசன் ஆகிய வற்றை கணக்கில் கொண்டு உயர்வில் செல்லிங் செய்யலாம் மற்றும் நேற்றைய செபி கூட்டத்தில் சில சலுகைகள் அந்நிய முதலீட்டாளர்கள் மற்றும் நமது முதலீட்டளர்களுக்கு சில சலுகைகள் வழங்க்கப்பட்டுள்ளது


இதை பற்றி விரிவாக நாளைய பதிவில் ......

நிலைகள்
----

அதரவு --- 4250 , 4220 , 4190 .

எதிர்ப்பு --- 4290 .4325 ,4365 .

நன்றி !!!

வியாழன், 18 ஜூன், 2009

நேற்றைய சந்தைகள் இருநாட்களுக்கு முன்னர் உலக சந்தைகளின் சரிவுகளை நேற்று நமது சந்தைகள் சரி செய்தன . நமது சந்தைகளின் துவக்கம் சற்று சரிவுகளின் போக்கில் துவங்கியது . சரிவு 30 புள்ளிகளாக இருந்தது .

ஆசிய சந்தைகள் முழுவதும் அமெரிக்கா பியுச்சர் சந்தைகளை பார்த்தபடி வர்த்தகம் ஆனது .ஆனால் அமெரிக்கா பியுச்சர் சந்தைகள் பெரிய அளவில் ஒரு உயர்வில் வர்த்தகம் ஆகவில்லை .ஆகவே ஆசிய சந்தைகள் பிளாட் நிலைகளில் சரிவில் வர்த்தகம் ஆனது .ஜப்பானிய சந்தை மட்டும் ஓரளவு நன்றாக உயர்ந்து வர்த்தகம் ஆனது .

நமது சந்தைகளில் முந்தய தினங்களில் எதிர் பார்க்கப்பட்ட சரிவுகள் சந்தைகள் த்கதுவைக்கத்தில் வரவில்லை .மாறாக சந்தைகள் முன்தினம் உயர்வினை அடைந்தது போல நேற்றும் சற்று ஆபரேட்டர்களின் முயற்சியால் சந்தைகள் ஓரளவு உயர்விற்கு கொண்டு செல்லப்பட்டது .

அதன் பின்னர் நமது சந்தைகளில் அந்நிய முதலீட்டலார்களின் அதிக அளவு செல்லிங் காரணமாக சந்தைகளில் சரிவுகள் மேலும் மேலும் வந்தன .பின்னர் முடிந்த ஆசிய சந்தைகள் பெரிய அளவில் முந்தய சரிவின் எழுச்சி இல்லை .ஆகவே நமது சந்தைகளும் முடிவு வரை சிறிய எழுச்சியும் இல்லாமல் சரிவை நோக்கியே வர்த்தகம் ஆனது . முடிவில் நமது சந்தைகள் நிப்டி 161 புள்ளிகள் சரிவடைந்து முடிந்தன .

இந்த நேற்றைய சரிவு ஜனவரி மாதத்திற்கு பிறகு வந்த தினசரி வர்த்தகத்தின் அதிக புள்ளிகள் இழப்பாகும் என்பது குறிப்பிட தக்கது .

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் இருதினங்களாக வந்த சரிவுகள் இல்லை .ஆனால் எழுச்சியும் இல்லை . சந்தைகளில் மேலும் செல்லிங் தான் வந்துள்ளதாக தெரிகிறது . அமெரிக்கா சந்தைகள் முடிவில் பிளாட் நிலைகளில் முடிந்தன .

இன்றைய ஆசிய சந்தைகள் நேற்றைய பிளாட் வர்த்தகத்தின் காரணமாக இன்று துவக்கம் 1 % மேலாக சரிவில் துவங்கி உள்ளன . மேலும் நேற்றைய ஐரோப்பிய சந்தைகள் சற்று அதிகமாக சரிவடைந்து முடிந்தன . ஐரோப்பிய சந்தைகள் அனைத்தும் 1 1/2 % - 2 % வரை சரிவடைந்து முடிந்தன .

நமது சந்தைகள் இன்று ஆசிய சந்தைகளை பிரதிபலிக்க வாய்ப்புகள் இல்லை நமது சந்தைகளின் சரிவின் வேகம் நேற்று சற்று அதிகம் என்று கருதுகிறேன் .

நமது சந்தைகள் துவக்கம் 20 -30 புள்ளிகள் அதிகரித்து துவங்க வாய்ப்புகள் உள்ளன . சந்தைகளின் தற்போதைய நிலையை வைத்து பார்க்கும் பொழுது கடந்த இருதினங்களாக உலக சந்தைகளின் சரிவுக்கு அடுத்த மீட்சி வர நாளை வாய்ப்புகள் உள்ளன .

எதற்கும் ஸ்டாப் லாஸ் உடன் வர்த்தகம் செய்யவும் . ரிஸ்கி வர்த்தகர் மட்டும் பொசிசன் எடுக்கலாம் .

நிப்டி நிலைகள் -

ஆதரவு ---- 4325 , 4280 , 4250 .

எதிர்ப்பு ---- 4405 , 4445 , 4490 .

நன்றி !!!

கண் தானம் செய்யுங்கள் . நீங்கள் இல்லாவிட்டலும் உங்கள கண்கள் இந்த உலகை ஆளட்டும் .....