வெள்ளி, 20 மார்ச், 2009

விழிப்புணர்வு இடுகை

விழிப்புணர்வு இடுகை !!! 2
----- இனி முக்கியமான விசயங்கள் பற்றி பார்போம் !!!

உலக அளவில் சந்தைகள் பற்றி பங்கு சந்தை நிபுணர்கள் மற்றும் பொருளாதார வல்லுனர்கள் கூறும் சில --

அமெரிக்கா --------

*இங்கு தொடர்ச்சியான பொருளாதார மந்தநிலை உள்ளது .இந்த நிலைமாறி நல்ல நிலைக்கு திரும்ப சில ஆண்டுகள் பிடிக்கும் என்கிறார்கள் .

* இங்கு வேலை இல்லாதோர் எண்ணிக்கை 26 வருடத்திய அதிகப்படியாக உள்ளன ..

* தொடர்ச்சியாக அதிக வங்கிகள் திவால் நிலைக்கு தள்ளப்பட்டு வங்கிகள் மூடப்பட்டன ..

* பல தரப்பட்ட நிறுவனங்கள் ஆட்குறைப்பு எனும் பணியாளர் நீக்கம் தொடர்ச்சியாக நடந்து வருகிறது .

சீனா !!! -------

* இங்கு உள் நட்டு உற்ப்பத்தி முந்தய வருடத்தை விட குறைந்துள்ளது

* இன்பிலேசன் மிக அதிகமாக உள்ளது .

* பொருளாதார வளர்ச்சி மந்தமாகி வருகிறது ..

* உலகம் முழுவதும் பல இடங்களில் சீன விளையாட்டு உபகரணங்களை தடை செய்துள்ளனமற்றும் ஒலிம்பிக் நடத்திய பொழுது அதிக அளவு கட்டுமான பணிகள் மேற் கொண்டது .
ஹோட்டல் , லாட்ஜ் ஆகியவை தற்போது உபயோகமின்றி கிடக்கின்றன வந்தவரவை விட செலவு அதிகம் ..
கட்டு மான துறைக்கு நிறைய சலுகைகள் வழங்கி அதிகப்படியான பொருளை உற்பத்தி செய்து விட்டது ..
சம்பந்தப்பட்ட துறைகள் திரும்ப பழைய நிலையை அடைய சில ஆண்டுகள் கூட ஆகலாம் என்ற கருத்து நிலவுகிறது ..

இந்தியா ;-----

*பொருளாதார வளர்ச்சி 08 -09 இல் 7 % தான் என உள்துறை அமைச்சகமும் மற்றும் நிதி அமைச்சகமும் கூறுகிறது .. ஆனால் பொருளாதார நிபுணர்கள் கணிப்பின் படி 5 % to 6 % தான் வரும் என என்கிறார்கள் ..

*இன்பிலேசன் குறைந்து 3% அளவிற்கு வந்துள்ளது ஆனால் விலைவாசி அப்படியே உள்ளது .. இது பின்னாளில் ஒரு பிரச்சனை தான் ..

*பங்கு சந்தைகளில் ஏற்ப்பட்டுள்ள வீழ்ச்சி இந்த வீழ்ச்சியால் பல பரஸ்பர நிதி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன ..பங்குகளின் விலை வீழ்ச்சியால் மக்கள் பணம் கணக்கில்லாமல் இழப்பு ஏற்படுகிறது.இந்த சூழலில் இனி வரும் காலங்களில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் மக்களிடம் புதிய முதலீடு வாய்ப்புகளை பெற முடியுமா என தெரியவில்லை ..

*இனி வரும் காலங்களில் உள் நட்டு கட்டமைப்பிற்கு எவ்விதங்களில் முதலீடுகள் வரும் என உறுதியாக தெரியவில்லை இந்த துறை கடுமையான இழப்புகளை சந்தித்து வருகிறது .

*இந்தியாவை பொறுத்த வரை அனைத்து துறைகளும் தற்சமயம் மிகவும் நலிவடைந்த சூழலில் உள்ளது ..

*இங்கு இன்னும் அதிக பணியாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது .

ஜப்பான் ------

* இங்கும் பொருளாதார மந்தநிலை ஆரம்பமாகிவிட்டது ஆனால் பெரியதாக எதுவும் வரவில்லை . கடந்த வருடம் பொருளாதார வளர்ச்சி 3.27 % அளவிற்கு சரிவடைந்துள்ளது .வரும் காலாண்டில் அது இன்னும் சரிவடைந்து சரிவு 5.7 % இருக்கும் என கணக்கிட்டுள்ளனர் .

* ஆனால் இன்னும் சில மாதங்களில் மந்த நிலை வரலாம் என வல்லுனர்கள் கூறுகின்றனர் .

*அங்கு வங்கிகளுக்கு பெரிதாக எதுவும் பதிப்பு இல்லை .

*பேங்க் ஆப் ஜப்பான் சில கட்டு பாடுகள் விதித்த பொழுதும் , சந்தையும் அங்குள்ள சூழ்நிலைகளும் தற்சமயம் சீராகி வருகிறது .

*ஆனால் அடுத்த வருடத்தில் அங்கும் மிகப்பெரிய பொருளாதார மந்தநிலை மற்றும் பிரச்சனைகள் உருவாகும் என்பது வல்லுநர் களின் கருத்து ...

@@ இந்த இடுகை இத்துடன் முடிந்தது @@

நண்பர்களே இதுபோல உலக நாடுகளின் நிகழ்வுகள் மற்றும் சந்தை பற்றிய இடுகைகளை விழிப்புணர்வு இடுகை என்ற பெயரில் அடிக்கடி எழுத உள்ளேன் .

முடிந்தால் ஊக்குவியுங்கள்

நன்றி !!

என்றும் உங்கள் நண்பன்

ரமேஷ்