செவ்வாய், 17 மார்ச், 2009


கடமையை
செய் பலனை எதிர் பார்க்காதே இது தான் இப்போதைய நிப்டி" இன் தாரக மந்திரம் போல் !!!

நேற்றைய சந்தைகள் எல்லோரையும் திசை திருப்பி விட்டது .எனது எதிர் பார்ப்பையும் பொய்யாக்கிவிட்டது .கீழே வர வேண்டிய சந்தைகள் ஆசியசந்தைகளின் போக்கினை பின் பற்றி மூன்றாவது நாளாக நேற்றும் 58 புள்ளிகள் அதிகரித்து 2774 ' இல் நிலையை அடைந்தன .

இனி ஒரே ஒரு எதிர் நிலை " 2810 "மட்டும்தான் உள்ளது . 2810 நிலைகளுக்கு மேல் செல்ல தற்சமயம் வலுவான காரணிகள் இருப்பதாக தோன்ற வில்லை ..அந்த நிலைகளில் " fresh short " செல்லலாம் ..

நேற்று அமெரிக்கஅதிபர் திரு ; ஒபாமா அவர்கள் அறிவித்த இன்சூரன்ஸ் போனஸ் பற்றிய அறிவிப்புகள் சந்தையை பெரிதாக மேலே கொண்டு சென்றது .

ஆனால் நாளின் நெடுகில் சந்தைகள் சரிவினை கண்டு " flat " ஆக முடிந்தன . இதற்கிடையில் அமெரிக்க பொருளாதார அறிவிப்புகள் மோசமாக வந்துள்ளது...

இனி இன்று !

மூன்று நாட்களாக சந்தைகள் ஏறுமுகத்தில் உள்ளன . நான் முன்பு கூறியது போல் கவனமாக இருங்கள் ஆபரேடர் உதவியால் சந்தைகள் நிலை நிறுத்தப்பட்டுள்ளது ... சரிவுகள் வரும் வேளைகளில் சரிவுகள் அதிகமாக இருக்கும் ..

நிப்டி நிலைகள் : ------

su
p : 2750 , 2720 , 2690 ..
res : 2778 , 2810 . 2830 ..

today pick's -----

----------nil ---------------

நன்றி !