திங்கள், 23 மார்ச், 2009

பங்கு சந்தை ஒரு அலசல் 1

வணக்கம் நண்பர்களே !!!

பங்கு சந்தை ஒரு அலசல் தொடர்ச்சி ------

பங்கு பிரிப்பு
**************
சந்தையில் தொடர்ந்து விலை அதிகரித்து கொண்டே செல்லும் பங்குகளை மக்கள் விலை அதிகம் என வியாபாரம் செய்ய மாட்டார்கள். இந்நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வியாபாரம் அதிகமாக ஆகாத பட்சத்தில் பங்குகளின் முக மதிப்பை பிரிப்பார்கள். உதாரணம் : விலை 2500 இந்த அளவில் இருக்கும் போதுபங்கு பிரிப்பார்கள் . அவை முக மதிப்பில் 2 : 5, 1: 10, 5 : 2, ஆகிய முறைகளில் பிரிப்பர் . பங்கு பிரிப்பிற்கு பிறகு பங்குகளின் விலைகள் முறையே 500 , 250, 1250 என வந்து விடும். அனைவருக்கும் வியாபாரம் , செய்ய வசதியாக இருக்கும்.

வியாபார வகைகள் ----------
**********************
தினசரி வணிகம் -----
*******************
பங்கு சந்தையில் காலை 9 : 55 க்கு தொடங்கியதும் பின்பு இடையில் எந்த நேரத்திலும் வாங்கலாம் , விற்கலாம் . ஆனால் மாலை 3 : 30 க்குள் அனைத்து பங்குகளின் கணக்கை சரி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யா விட்டால் வாங்கி இருந்தால் உங்கள் கணக்கிற்கு டெலிவரி ஆகி விடும். அந்த பங்கிற்கு உண்டான முழு தொகையும் மறுதினம் சம்பந்தப்பட்ட தரகு அலுவலகத்திற்கு காசோலை வழங்க வேண்டும். விற்று இருந்தால் ஆக்சன் சந்தைக்கு சென்று வாங்கி விடுவார்கள். நமக்கு நஷ்டம் ஆனாலும்...

SHORT SELLING ----
*******************
இது சற்று ஆபத்தானது. பங்கு சந்தையில் பங்கு வியாபாரம் சுணக்கமாக உள்ள சூழ்நிலையில் தவறான தகவல்கள் மற்றும் சந்தையை பாதிக்கும் காரணிகளால் சந்தை இறங்கும். அல்லது பங்குகளின் விலை சரியும் என்ற ஊகத்தில் கையில் பங்குகள் இல்லாமலேயே பங்குகளை விற்று வைப்பது . அதிக விலையில் விற்று வைத்து பின்பு இறங்கி வரும் போது வாங்கி விட வேண்டும். லாபம் கிடைக்கும். அதே சமயம் மாலை 3 : 30 க்குள் லாப நஷ்டம் எது ஆனாலும், என்ன விலை ஆனாலும் வாங்கி கணக்கை சரி செய்ய தவறினால் அடுத்த நாள் "SHORT FALL " ஆகி விடும்.

பின்னர் அதற்கு அடுத்த நாள் எக்ஸ்சேஞ்சில் ஆக்சன் மார்கெட்டில் என்ன விலைக்கு விற்பவர் இருக்கிறாரோ அந்த விலைக்கு வாங்கி கணக்கை சரி செய்யும் . இதில் வரும் லாப நஷ்டம் அல்லாமல் எக்ஸ்சேஞ் அபராத தொகை விதிக்கும். இதை தங்கள் கணக்கில் இருந்து எடுத்து கொள்வார்கள். சமயத்தில் குறைவாக அபராதம் விதிக்கலாம். அல்லது இது போல இனி நடக்க கூடாது என அதிகமாகவும் அபராதம் விதிக்க வாய்ப்பு உண்டு. இது முழுவதும் எக்ஸ்சேஞ்சின் செயல்பாடு மட்டும் தான் .

டெலிவரி செல்லிங் -------
**********************
இந்த முறை மிகவும் சிறப்பானது . பங்குகளை வாங்கி உண்டான தொகையினை செலுத்தி பங்குகளை கணக்கில் வைத்து கொள்ளலாம். பங்குகளின் விலை அதிகமாகும் போது விற்று லாபம் அடையலாம்.

சந்தையை பாதிக்கும் காரணிகள் ------
************************************
* உலக நாடுகளில் நிகழும் அசம்பாவிதங்கள்.
* உலக நாடுகளின் பங்கு சந்தைகளின் போக்கு
* உள்நாட்டு அசம்பாவிதங்கள் மற்றும் அது சம்பந்தமான வதந்திகள்
* நிலையற்ற அரசியல் மற்றும் அரசியல் பிரச்சினைகள்
* ரிசர்வ் வங்கி பற்றிய அறிவிப்புகள்
* இன்பிலேசன் அதிகமாகுதல்
* ஜி டி பி மற்றும் ஐ ஐ பி டேட்டா சரியில்லாமல் போதல்.
* கச்சா என்னை விலை ஏற்றம்
* அந்நிய முதலீட்டாளர்கள் மற்றும் பரஸ்பர நிதியகங்கள் திடீரென பங்குகளை விற்பது .
* முக்கிய நிறுவனங்களின் காலாண்டு அறிக்கைகள் சரியில்லாமல் போதல்.

இதை தவிர பங்கு வர்த்தகத்தில் ஏழு விதமான வியாபாரிகள் உள்ளனர்.
*******************************************************************************
அவர்கள்,
************
* INVESTOR - இவர்கள் நிறுவனத்தின் மதிப்பறிந்து முதலீடு மட்டும் செய்வர்.
விற்பனை செய்வதை சில காலம் என்ன மாட்டார்.
* TRADER - இவர் தொழிலே இது தான். இன்று வாங்கி இன்றே விற்று லாபத்தை எடுத்து கொள்வார்.
* SPECULATOR - இவர் எல்லோரையும் (பங்கு வர்த்தகத்தில் ) ஏமாற்றுபவர். சம்பந்தம் இல்லாமல் பங்குகளின் விலைகளை வேகமாக ஏற்றுவதும் இறக்குவதும் தான் இவர்களது வேலை.இதில் தான் இவர்களுக்கு ஆதாயம். இவர்களால் சந்தை வேகமாக சரியும் மற்றும் ஏறும் வாய்ப்புகள் இருக்கும்.
* OPERATORS - இவர்கள் சில நிறுவன பங்குகளை மட்டும் வியாபாரம் செய்வர். அதிக ஏற்ற இறக்கங்களை சில பங்குகளில் மட்டும் எந்த வித செய்தியும் இல்லாமல் உண்டாக்குவார்.

இவர்கள் தவிர ,

QNI - QUALIFIED NETWORTH INDIVIDUAL INVESTOR
HNI - HIGH NETWORTH INDIVIDUAL INVESTOR
FII - FOREIGN INSTITUTIONAL INVESTOR

இவர்கள் அனைவரும் சந்தையில் அதிக ஏற்ற இரக்கத்தை கொண்டு வருவார்கள். காரணம் இவர்கள் தனிப்பட்ட முறையில் அதிக தொகையை சந்தைக்குள் கொண்டு வந்து வியாபாரம் செய்வார்கள்.

பரஸ்பர நிதியகங்கள் ------
************************
இதற்கு முன் கூறியது போல் எல்லாம் வணிகம் செய்தால் ரிஸ்க் அதிகம் என்று கருதினால் பரஸ்பர நிதியகங்களில் முதலீடு செய்யலாம். பரஸ்பர நிதியகங்கள் என்பது ஒரு பெரிய நிறுவனத்தால் நிர்வகிக்கபடுகிறது. அந்த நிறுவனங்கள் புழக்கத்தில் பரஸ்பர நிறுவனங்கள் ஆரம்பித்து மக்களிடம் பத்து ரூபாய் முக மதிப்பில் முதலீடு செய்ய சொல்வர். அதில் ஆரம்ப மற்றும் முடிவு தேதிகளை அறிவிப்பார்கள்.

மக்கள் முதலீடு செய்யும் தொகையை " FUND MANAGER " என்பவர் பங்கு சார்ந்த வியாபர திட்டங்களில் முதலீடு செய்து வரும் லாபத்தை தனது பங்கு தாரர்களுக்கு பிரித்து கொடுப்பார். அந்த லாப தொகையை பொறுத்து பரஸ்பர நிதியகங்களின் யூனிட் விலை ஏறும். அதன் விவரங்களை செய்தி தாள்கள் மூலமாகவும் வலை தளங்கள் மூலமாகவும் தினசரி பார்க்கலாம்.


முதலீட்டளர்களுக்கு கிடைக்கும் பயன்கள் ??
***********************************************
ஈவு தொகை -----
*************************
பங்குகள் முன்பு சொன்னது போல நிறுவனங்கள் முகமதிப்பில் வழங்குகின்றன. நாம் முதலீடு செய்யும் ஒவ்வொரு பத்து ரூபாய்க்கும் ஈவு தொகை கிடைக்கும். அந்த ஈவு தொகை முக மதிப்பில் எத்தனை மடங்கு என்பதை நிறுவனம் தான் முடிவு செய்யவேண்டும். நிறுவனங்களின் நிகர லாபத்தில் இருந்து குறிப்பிட்ட அளவு ஈவு தொகைகள் கிடைக்கும். அவற்றை மொத்த பங்குகளால் வகுத்து வழங்குவர்.
இலவச பங்குகள் (போனஸ்)
********************************
நிறுவனத்திற்கு அதிகபடியான லாபம் கிடைத்தால் இலவச பங்குகள் வழங்குவர். ஆனால் அந்த நிறுவனம் குறிப்பிடும் தேதியில் உங்களது டீமாட் கணக்கில் உங்கள் தேவைக்கேற்ப பங்குகள் இருக்க வேண்டும். அந்த பங்குகளின் எண்ணிக்கையின் மடங்கில் இலவச பங்குகள் வழங்கப்படும். (உதாரணம் : 1 : 1, 1:5 , 10 : 1, 5 : 2, 10 : 2......) ஆனால் இலவச பங்குகள் வழங்கியதும் பங்குகள் விலை பாதியாக குறைந்துவிடும்.
உரிமை பங்குகள் (RIGHT'S ISSUE)
************************************
உரிமை பங்குகள் என்பது ஏற்கனவே பங்கு வெளியிட்ட நிறுவனங்கள் அதன் விரிவாக்க நடவடிக்கைக்காக தன் பங்கு தாரர்களுக்கு மட்டும் சந்தை விலையை விட குறைந்தா விலையில் பங்குகள் வழங்கும். இதற்கும் இலவச பங்குகளுக்கு கூறியதை போல வைத்துள்ள பங்குகளுக்கு ஏற்ப வழங்குவார்கள்.

நன்றி !!!

பதிவு
முடிந்தது அடுத்த நல்ல பதிவில் பார்க்கலாம் .....