வெள்ளி, 20 மார்ச், 2009


கடந்த
இரு தினங்களாக எதிர் பார்த்த ஆசிய சந்தைகளின் " profit booking " நேற்றும் வரவில்லை . ஆசிய சந்தைகள் அனைத்தும் " FLAT " ஆகமுடிந்துள்ளன .

இன்பிலேசன் வரவிற்காக நமது சந்தைகள் ஏறுமுகத்தில் இருந்தன . இன்பிலேசன் எப்போதும் இல்லாத அளவாக 0.44 vs 2.43 என்று வந்துள்ளது . வரும் நாட்களில் இன்பிலேசன் போய் டெபிலேசன் கூட வரலாம் என வல்லுனர்கள் கணித்து உள்ளனர்..

இன்பிலேசன் அறிவிப்பிற்கு பின்னர் சந்தைகள் சிறிதளவு இறங்கின .சந்தைகள் முடிவில் ஏற்றத்தில் சில புள்ளிகளை இழந்து 2800.75 (+ 11) இல் நிலை கொண்டன .

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் 1 % அளவிற்கு இறங்கி உள்ளது . நேற்றய வேலை இல்லாதோர் அறிவிப்பில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது .. இது முந்தய அளவை விட அதிகம் ..

ஜப்பானிய சந்தைகள் இன்று விடுமுறை ஆதலால் ஆசிய சந்தைகள் இன்றைய துவக்கம் சற்று " FLAT " ஆக இருந்தன . ஆசிய சந்தைகளின் போக்கும் சற்று மந்தமாகவே இருக்கும் என நினைக்கிறேன் ..
வரும் வாரம் " FUT " சந்தைகளின் முடிவு வருவதால் சந்தையில் வரும் நாட்களில் சரிவுகள் மற்றும் PROFIT BOOKING வரலாம் என நினைக்கிறேன் .

சந்தைகளை பொறுத்தவரை இப்போதைய சூலில் லாபத்தினை உறுதி செய்வது தான் நல்லது .........

AKRUTI NIRMAN --------

தேசிய பங்கு சந்தையில் வணிகமாகி வரும் இந்த பங்கு கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் . 125 % பங்கின் விலை( 2350 vs 1000 )அதிகரித்துள்ளது ..இந்த பங்கின் பெயரை கேட்டாலே சந்தையே அலறுகிறது இதுதான் இன்றைய நிலை ஏன் என புரியாத சூலில் இதுவரை எந்தபங்கும் இது போல் ஏறியதாக தெரியவில்லை .(சந்தை இறங்கு முகத்தில் )..

நேற்றைய சந்தையில் செபி தனது பார்வையை அக்ருதி பக்கமாக திருப்பியது .. உடன் அந்த பங்கின் வணிகத்தை உற்று கவனித்து பின்னர் உடனடியாக அந்த நிறுவன பங்கை "FUT " வர்த்தகத்தில் மார்ச் மாதத்துடன் தடை செய்தது . பின்னர் EQ பிரிவில் இருந்து BE TRADE TO TRADE என்ற முறைக்கு மாற்றியது .. செபியின் இந்த செயல் பாராட்டப்பட வேண்டியதுதான் .....

ஆனால் சில பங்குகளின் விலைகள் ஒரே நாளில் 20 % TO 60 % வரை அதிகரிப்பது சந்தையில் தற்சமயம் நடந்து வருகிறது ..

செபி இதையும் கவனித்தால் நல்லது !!!

நிப்டி நிலைகள் இன்று ---=

SUP ; 2780 , 2750 , 2720 ..
RES ; 2810 , 2830 , 2850 ...

நன்றி !!!