திங்கள், 23 மார்ச், 2009
கடந்த வெள்ளியன்று சந்தைகள் அதரவு நிலையான 2780 நிலைகள் உடை பட்டும் பின்னர் சந்தைகள் மீண்டு வந்தது இல்லை இல்லை மீண்டு வர செய்துள்ளனர் ...
கடந்த சில வாரங்களாக நிப்டி இன் இந்த போக்கு ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. அதுவும் இந்த வாரம் 2800 to 2700 நிலைகளுக்குள் சந்தைகள் தொடர்ச்சியாக வர்த்தகம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது .. ஆசிய மற்றும் அமெரிக்க சந்தைகள் கூட சிறிதளவு இறங்கி பின்னர் ஏறுகிறது.. ஆனால் நமது சந்தைகளை பொறுத்த வரையில் சில அரசியல் காரணக்களுக்காக நிறுத்தி வைத்துள்ளனர் ..
இந்நிலையில் சந்தையில் தற்சமயம் ஏறுமுகமே காணப்படுவது சில அந்நிய முதலீட்டாளர்கள் மற்றும் சில இன்சூரன்ஸ் நிதியகங்கள் சந்தையை மேலேற்றுகின்றன .
வெள்ளியன்று ஆசிய சந்தைகள் அனைத்திலும் சரிவுகளே வந்தன ..
குறைந்தபட்சம் 3 % வரை சந்தைகள் சரிவடைந்தன. ஆனால் நமது சந்தைகள்
2800 என்ற பழைய நிலையிலேயே வர்த்தகம் முடிந்தன ..
அமெரிக்க சந்தைகள் 2 % அளவிற்கு சரிவில் முடிந்தன ............
உலக சந்தைகள் எல்லாம் சரிவில் நமது சந்தைகள் மட்டும் மேலே
என்ன கொடுமை நண்பர்களே !!!
இனி இன்று
இன்றைய ஆசிய சந்தைகள் அபாரமாக ஏறு முகத்தில் துவங்கி உள்ளன
வழக்கம் போல இதற்க்கு காரணம் இல்லை ..
கடந்த வார ஆசிய சந்தைகளின் நாடகம் இந்த வாரம் முடிவிற்கு வரலாம் என நினைக்கிறேன் .. நமது சந்தைகளை பொறுத்த வரை இன்று" gap up " துவக்கமாக இருக்கலாம் ...
ஆனால் இந்த நிலையில் லாபத்தினை உறுதி செய்யலாம் .. இந்த வார வியாழன் f& o முடிவு தினம் ஆகையால் சந்தையில் பெரியதாக நகர்வுகளை எதிர் பார்க்கலாம் என நினைக்கிறேன் ..
முக்கிய தடை நிலையான " 2830 " இம் அதரவு நிலையான " 2790 " இக்கும் இடையில் இன்று வர்த்தகம் நடக்கலாம் .. அதரவு நிலைகள் உடைய இன்றைய சந்தையில் வாய்ப்புகள் குறைவு என்றே நினைக்கிறேன் .. இருந்தாலும் கவனமாக இருங்கள் !!!
சுவர் இருந்தால் தன் சித்திரம் .. நாம் சந்தையில் இருந்தால் தான் நாலு காசு பார்க்க முடியும் .............
நன்றி !
அன்புடன்
ரமேஷ்