வெள்ளி, 13 மார்ச், 2009


நேற்று
வழக்கம் போலவே நமது சந்தைகள் எழுச்சிக்கு மட்டும் உலக சந்தைகளின் போக்கை பின் தொடர்ந்து ஏறுமுகத்தில் 3 % up 'இல் துவங்கின.

பின்னர் இன்பிலேசன் மற்றும் ஐ ஐ பி டேட்டா வர தொடங்கியதும் சந்தையில் ஊசலாட்டம் தொடர்ந்தன .. இன்பிலேசன் (2002 ) ஏழு வருடத்திய குறைந்த அளவான 2.43 vs 3.3 என வந்தது .

ஆனால் ஐ ஐ பி டேட்டா -0.5 vs -0.6 (jan) என வந்தது . நேற்றைய சந்தையில் நிபிட்டி 2600 இல் நிலை கொண்டது .. சந்தை முடிவில் ஏற்றத்தில் சில புள்ளிகளை இழந்து இடையில் சில ஊசலாட்டமும் தொடர்ந்தன ...

நேற்றைய அமெரிக்கசந்தைகள் திடீரென அதிக எழுச்சியை கண்டது .. இதற்கு முன்னால் வந்த வீழ்ச்சிக்கு பிந்தைய எழுச்சியாக இது இல்லை .. அங்கு ஏதோஊக செய்தி பரவி இருக்கலாம் என கருதுகிறேன் ...

இனி இன்று .........

நேற்றைய அமெரிக்க சந்தைகளை தொடர்ந்து ஆசியசந்தைகளும் இனிதே " gap up " இல் தொடங்கி உள்ளன .இன்றைய சந்தைகள் ஆசிய சந்தைகளின் நகர்வினை ஒட்டியே இருக்கும் . மேலும் சந்தைகள் இன்று வார இறுதி என்பதால் நகர்வுகள் அதிகமாஇருக்கும் .. நேற்றைய சந்தைகள் 2645 என்ற எதிர் நிலையினை கடக்காமல் கீழே வந்து ஆதரவு நிலையான 2610 நிலைகளுக்கு கீழ் முடிவுற்றது .

நமது சந்தைகளை பொறுத்த வரையில் தற்சமயம் பலம் எது பலவீனம் எது என தெரியாத நிலையில் உள்ளன .. இன்றைய சந்தைகள் 2645 நிலைகளுக்கு மேலே செல்லும் பட்சத்தில் 2685, 2700 , வரை செல்லலாம் ...

இருப்பினும் நாளின் முடிவில் தன் நமது சந்தைகளின் போக்கை ஓரளவாவது கணிக்க முடியும் என நினைக்கிறேன் ..

முடிந்த வரை புட் ஆப்சன் ' இல் இருக்கவும் ....

to day pick's ......
======= nil ========

நன்றி !!!!!