வியாழன், 19 மார்ச், 2009


சந்தையில்
நாளுக்கு நாள் உயரங்களை பார்க்கும் வாய்ப்புகள் தற்சமயம் கிடைத்துள்ளது .

நேற்றைய சந்தையில் நிப்டி அமெரிக்க மற்றும் ஆசியசந்தைகளின் "gap up " ஐ ஒட்டி " gap up " இல் துவங்கியது .முக்கியமான எதிர் நிலையாக கருதப்பட்ட 2691 புள்ளிகளை எளிதில் கடந்து அதற்கு மேலும் அங்கிருந்து 2810 கடின நிலையையும் கடந்து 2830 வரை சென்றன .

ஏற்கனவே கூறியது போல் 2810 நிலைகளிலேயே "selling pressure " ஆரம்பம் ஆகி விட்டது .பின்னர் மதியத்திற்கு மேல்சந்தைகள் சரிய ஆரம்பித்தது . இறுதியாக சந்தைகள் 2779. 80 புள்ளிகளில்முடிவுற்றன .

நேற்றைய அமெரிக்க சந்தைகள் " FED " அமைப்பின் வட்டி அறிவிப்புக்காக ஒய்வு எடுத்தன .அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை என்பதால் சந்தைகள் சற்று மேலே வர தொடங்கின . ஏற்கனவே வட்டி விகிதம் அங்கு 0.0 vs 0.25 என்ற அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது .

மேலும் நேற்றைய அறிவிப்பில் வட்டி அதிகரிக்க கூடும் என எதிர் பார்த்தார்கள் ." FED " அமைப்பு பொருளாதார பிரச்சனைகள் ஓரளவு கட்டுபாட்டுக்குள் வந்து கொண்டுள்ளதாகவும் இன்னும் சிறிது நாளுக்கு இதே வட்டி தான் என்றும் அறிவித்தது . முடிவில் அமெரிக்க சந்தைகள் 1 % to 2 % வரை உயர்ந்தன .

இன்றைய சந்தைகள் ஆசிய சந்தைகளை போக்கினையே பிரதிபலிக்கும் .நேற்று முடிந்த ஐரோப்பிய சந்தைகள் 1% அளவுக்கு சரிவில் முடிந்துள்ளன .ஆதலால் இன்று மதியத்திற்கு மேல் ஐரோப்பிய சந்தைகள் துவங்கிய பின்னர் சந்தையின் வேகம் அதிகரிக்கும் என எதிர் பார்க்கிறேன் .தற்சமயம் சந்தையில் உள்ள குறுகிய கால முதலீட்டாளர்கள் வெளியேறி லாபத்தினை உறுதி செய்யலாம் ..

இன்றைய சந்தையில் நிப்டி 2750 to 2810 க்கும் இடையில் வர்த்தகம் நடக்கும் என எதிர் பார்க்கலாம் .. எதில் எந்த நிலைகள் பக்கமாக சந்தைகள் செல்கிறதோ அந்த நிலையில் எனது அதரவு மற்றும் தடை நிலைகள் வரை செல்லலாம் ..

நிபிட்டி நிலைகள் ;-------

sup ; 2778 , 2750 , 2720 ...
res ; 2790 , 2810 , 2830 ...

today pick's
--

நண்பர்களே இந்த பகுதியில் நான் கொடுக்கும் பங்கு பரிந்துரைகளை சில நாட்களுக்கு மட்டும் நிறுத்த உள்ளேன் ..

சில சமயங்களில் " GAP UP " துவக்கம் மற்றும் " GAP DOWN " துவக்கம் இரண்டும் வரும் பொழுது சில நாட்களில் துவக்கத்திலேயே ஸ்டாப் லாஸ் மற்றும் இலக்குகள் வந்து விடுகிறது .

அதலால் ஏப்ரலில் இருந்து முடிந்த வரை சரிவர தர முயற்சிக்கிறேன் .

நன்றி !!!