வியாழன், 26 மார்ச், 2009
நேற்றைய சந்தையில் நிப்டி " 2950 " என்ற எதிர் நிலையினை கடந்து சந்தைகள் வலுவான வர்த்தகத்தை தொடங்கின . சந்தையில் கடந்த சில நாட்களாக உயர்ந்து வரும் வர்த்தகத்தின் அளவும் , வர்த்தகத்தின் மதிப்பும் சற்று அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது . ( கடந்த இரு வாரங்களுக்கு பிறகு )
நேற்றய ஆசிய சந்தைகள் குழப்பமான சூழலில் தங்களது வர்த்தகத்தினை முடித்து கொண்டன .அமெரிக்க சந்தைகளை பொறுத்த வரை கருவூல பில் சம்பந்தமான அறிவிப்பினால் மட்டும் சந்தைகள் மேலே வந்துள்ளன .. நேற்று சந்தைகள் 1 % அளவிற்கு எழுச்சி அடைந்தன ..
இன்றைய ஆசிய சந்தைகள் சற்று உற்சாகத்துடன் ஆரம்பித்துள்ளன .. நமது சந்தைகள் இன்று முக்கிய எதிர் நிலையான "3020 " ஐ காலையிலேயே எதிர்கொள்ளலாம் என நினைக்கிறேன் . மேலும் சந்தைகள் முன்னேறும் பட்சத்தில் கடைசி எதிர் நிலையான " 3038 " கடக்க முயற்சிக்கலாம் ..
மேலும் இன்றைய இன்பிலேசன் அறிவிப்பு சந்தைகளுக்கு சாதகமாக இருந்தால் சந்தைகள் அந்த கடைசி எதிர் நிலையை கடந்து மேலே செல்லும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன . இன்று முடியவுள்ள பியுச்சர் வர்த்தகம் சந்தையினை முடிந்தவரை நிலைநிறுத்தவே பார்க்கும் @ ஆபரேட்டர்கள் சந்தையினை ஓரளவு உயர்த்தி செல்ல முனைவர் ..
அப்படிப்பட்ட சூழலில் சந்தைகளில் " SHORT COVERING " அதிக அளவில் வரலாம் .. சந்தையில் " SHORT " நிலைகளில் உள்ளன நண்பர்கள் இறுதியான SL 3043 ஐ உபயோகிக்கலாம் ..
நிபிட்டி நிலைகள் =
அதரவு - 2980 , 2950 , 2920 ....
எதிர்ப்பு - 2980 , 3020 , 3040 ...,
நன்றி !!!
அன்பு ஒன்று தான் உலக மக்களின் ஒரே சமாதான ஆயுதம் !!!