நேற்றைய சந்தைகள் ஆசிய சந்தைகள் போக்கினை ஒட்டிய துவக்கமாக இருந்தாலும் சந்தைகள் பின்னர் அதிலிருந்து விலகி விட்டன .. அதன் பின்னர் ஆசிய சந்தைகள் சரிவு அடைந்த போதும் நமது சந்தைகளில் அதன் தாக்கம் இல்லை ..
நாளின் இடையில் சந்தைகள் திடீரென உயரங்களை கடந்து " 3050 " புள்ளிகளை கடந்து சென்றது .. பின்னர் சந்தைகள் வேகமான ஒரு சரிவினை கண்டன .ஆசிய சந்தைகள் முடிவில் 1 % to 1.5 % வரை அதிகரித்து முடிந்தன .
நமது சந்தைகள் 42 புள்ளிகள் அதிகரித்து " 3020 " புள்ளிகளில் முடிந்தன ..
நேற்றைய அமெரிக்கசந்தைகள் 1 % to 2 % வரை அதிகரித்து முடிந்தன ..
இன்றைய ஆசிய சந்தைகள் "FLAT " இல் துவங்கி உள்ளன . ஆக நமது சந்தைகள் 30 TO 40 புள்ளிகள் அதிகரித்து துவங்க வாய்ப்பு உள்ளது .. சந்தைகள் 3000 , 2992 .
நிலைகள் உடைபடாத வரை சந்தைகள் கீழே வருவது சந்தேகமே . ஆக சந்தைகள் இந்த நிலைகள் உடைபட்டால் " LONG " நிலைகளில் உள்ளவர்கள் வெளியே வருவது உத்தமம் .
அதிக பட்சம் சந்தைகள் மேல் நோக்கி கடின எதிர் நிலையான " 3070 " வரை செல்ல வாய்ப்புகள் உள்ளன .. இருபுறமும் கவனம் இருக்கட்டும் ( நிலையினை உறுதி செய்து வணிகத்தில் ஈடு படுங்கள் .. நாளை " G 20" மாநாடும் உள்ளது .)
நிப்டி நிலைகள் ;----------
அதரவு --- 3000 , 2970 , 2950...
எதிர்ப்பு --- 3038 , 3070 , 3100 ...
நன்றி !!!
தீமையை எதிர்த்து போராடுவது நம் அனைவரின் கடமையாகும் ...