நேற்றைய சந்தைகள் முந்தய பதிவில் குறிப்பிட்டது போல துவக்கத்தில் மேல் நிலைகளில் துவங்கி பின்னர் சரிய ஆரம்பித்தன . நமது சந்தைகளை பொறுத்த வரை உலக சந்தைகளில் உயர்வுகள் வரும் பொழுது சரிவுகள் வரும் என நான் முன்பு குறிப்பிட்டது நினைவு உள்ளதா நண்பர்களே !!!
நேற்றைய சந்தையில் நிப்டி முக்கியமான ஆதரவு நிலையான 3450 , 3405 , 3380 என மூன்று நிலைகள் உடை பட்டு முடிவுற்றது குறிப்பிட தக்கது . மேலும் 3435 to 3450 நிலைகளுக்குள் மூவிங் சராசரி உள்ளது . வரும் வர்த்தக தினங்களில் சந்தைகள் 3410 நிலைகளுக்கு மேல் சென்றால் தான் காளையின் ஆதிக்கம் சற்று வெளிப்படும் என கருதுகிறேன் .
நேற்றய ஆசிய சந்தைகள் அனைத்தும் " FLAT " நிலைகளிலே தங்கள் வர்த்தகத்தினை முடித்து கொண்டன . சந்தைகள் முடிவில் சிறிது உயர்வில் முடிந்தன . சீனாவில் எதிர் பார்த்தபடி வந்த ஜி டி பி டேட்டா சற்றே குறைந்துள்ளது அந்த சந்தைகளில் சிறிது தாக்கத்தை ஏற்படுத்தி சீன சந்தைகள் சற்று சரிவில் முடிந்தன .
நேற்றய அமெரிக்கா சந்தைகள் சிறிதளவு உயர்வில் துவங்கின பின்னர் இடையில் சந்தைகள் சிறிதளவு சரிவினை கண்டன . முடிவில் சந்தைகள் 1 % - 2 % வரை உயர்வினை கண்டன .
இன்றைய ஆசிய சந்தைகள் துவக்கத்தில் 2 % உயர்வில் துவங்கி உள்ளன , நமது சந்தைகளும் 30 TO 40 புள்ளிகள் வரை உயர்வில் துவங்க வாய்ப்பு உள்ளன . 3410 நிலைகளுக்கு மேல் சந்தைகள் நிற்காத பட்சத்தில் சந்தையில் விற்பனை அதிகரிக்கலாம் . இன்றைய சீன சந்தைகள் 2 % வரை சரிவில் துவங்கி வர்த்தகம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது . ஆசிய மற்றும் ஜப்பானிய சந்தைகள் முழுவது அமெரிக்கா சந்தைகளை பின் பற்றி வருகிறது . நமது சந்தைகள் தவிர !!!
நிப்டி நிலைகள் -----
அதரவு --- 3342 , 3301 , 3275 ...
எதிர்ப்பு --- 3400 , 3410 , 3450 ....
நன்றி !!!
நண்பர்களே !!!
இளம் வயதில் கவனமின்றி துள்ளினால் , வயதான களத்தில் வருந்த வேண்டி வரும் .........