செவ்வாய், 14 ஏப்ரல், 2009

நேற்றைய சந்தையில் நிப்டி எதிர்பார்த்தபடி குறிப்பிட்ட நிலைகளுக்குள் வர்த்தகம் நடந்தன . ஆனால் சந்தைகள் இடையில் திடீரென நாளின் உயரங்களை கடந்து மேலே கொண்டு செல்லப்பட்டதற்க்கான காரணம் தான் தெரிய வில்லை .. ஆனால் செயற்கையாக உயர்த்தி செல்லப்பட்டது மட்டும் தெரிந்தது .

பின்னர் சந்தைகள் முடிவில் வேகமாக சரிவடைந்து முந்தைய முடிவு புள்ளிகளை விட + 35 புள்ளிகள் அதிகரித்து 3390 புள்ளிகளில் நிலை பெற்றன . இதில் குறிப்பிடும் படியான விஷயம் என்னவென்றால் நாளின் உயரத்திற்கு ( 3432 ) சென்ற சந்தைகள் அங்கிருந்து 60 புள்ளிகள் இறங்கி 3374 வரை இறங்கி வந்தன . இதன் அளவு கிட்டத்தட்ட 2 % ஆகும் ..

முந்தய பதிவில் குறிப்பிட்டது போல் நாளை வெளியாக இருக்கும் இன்போசிஸ் காலாண்டு முடிவிற்கு பிறகு தான் சந்தையின் தெளிவான போக்கினை காண இயலும் என நினைக்கிறேன் . மேலும் இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு அறிக்கையில் நிறுவனத்தின் நிகர லாபம் குறைய அதிக வாய்ப்புகள் உள்ளதாக வல்லுனர்கள் கணிக்கின்றனர் .

நேற்று ஆசியா சந்தைகள் மற்றும் உலக சந்தைகள் இல்லாமல் நமது சந்தைகளில் இத்தகைய உயர்வு தேவையற்றது என கருதுகிறேன் .

நேற்று அமெரிக்கா சந்தைகள் " FLAT " நிலைகளில் தங்களது வர்த்தகத்தினை முடித்து கொண்டன . மேலும் அங்கு நாளை மற்றும் நாளை மறுதினம் வரவுள்ள காலாண்டு அறிக்கைக்கு பிறகு தான் அமெரிக்கா சந்தைகளின் போக்கு உறுதி செய்யப்படும் .

நமது சந்தைகள் இன்று விடுமுறை .. நமது சந்தைகளை பொறுத்த வரையில் சரிவுகளுக்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன் .

நன்றி !!!

பொய் என்பது ஒற்றை காலில் நிற்பது @@
மெய் என்பது இரட்டை காலில் நிற்பது .....