இது பங்கு சந்தையா அல்லது கண் கட்டி வித்தையா என்பது போல் நமது சந்தைகளின் வர்த்தகம் தற்பொழுது நடை பெறுகிறது . நுட்ப வரைபடங்களையும் சாராமல் மற்றும் பண்டமண்டல் செய்திகள் சாராமலும் கிட்டத்தட்ட கடந்த " 35 " தினங்களில் " 23 " வர்த்தக தினங்கள் நிப்டி ஏறு முகமாகவே இருந்தது . ஒரே ஒரு வர்த்தக தினம் மட்டும் சரிவில் முடிந்துள்ளன . " 22 " வர்த்தக தினங்கள் உயர்வில் முடிந்துள்ளன .
இது சாத்தியம் தானா ???
தற்பொழுது சந்தைகள் அந்நிய முதலீட்டாளர்கள் மற்றும் ஆபரேடர் கைகளில் உள்ளது . இதை சந்தைகள் அடிக்கடி உயர்வில் முடிந்து நமக்கு அறிவுறுத்துகிறது .. சந்தைகள் தற்போது உள்ள நிலைகளில் சில்லறை முதலீட்டாளர்கள் சந்தைக்குள் வரவில்லை என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது .
என்ன தான் சந்தைகள் உயர்ந்தாலும் சிறிதளவாவது சரிவுகள் வந்து தான் சந்தைகள் திரும்ப ஏறு முகத்தில் செல்ல வேண்டும் . இதை நுட்ப வரை படங்களின் படி " technical correction " என்று கூறப்படுகிறது . எவ்வித சரிவுகள் மற்றும் இறக்கங்கள் இல்லாமல் செல்வது சந்தைகளை பொறுத்த வரை ஆபத்துதான் ..
நமது சந்தைகள் கிட்டத்தட்ட "22 " வர்த்தக தினங்கள் அது போல உயர்த்தி செல்லப்பட்டுள்ளது . அதன் உயரங்களின் அளவு கீழ் நிலைகளில் இருந்து சுமாராக 30 % அளவிற்கு உயர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது . "retracement " அளவுகளின் படி 0 வில் இருந்து (0 என்பது சரிவின் இறுதி நிலை ) தொடர்ச்சியாக 23.60 % , 38.20 % ,50 % , 61.80 % , 100 % என்று உயர்விலும் சரிவிலும் ஒரு கணக்கு உண்டு . அதை வைத்து பார்க்கும் பொழுது சந்தைகள் கீழ் நிலைகளில் இருந்தது தற்போதைய நிலைகள் 80 % உயர்வு ஆகும் .
உலக சந்தைகள் அனைத்தும் அவைகளின் ஆயுட்கால குறைந்த பட்ச விலைகளுக்கு கீழ் சென்று பின்னர் திரும்பி அதிலிருந்து மீண்டு வந்து உள்ளன ..
அதுவும் சுதாரித்து வெகு நாட்களுக்கு பிறகு ...
நமது சந்தைகளை பொறுத்த வரை பண்ட மண்டல் காரணங்களின் பொழுது சந்தையை சிறு பாதிப்படைந்ததாக காட்டி விட்டு பின்னர் ஆபரேடர் மற்றும் அந்நிய முதலீட்டாளர்கள் சந்தையை மேலே கொண்டு செல்கின்றனர் .
உதா --
* உலக சந்தைகளின் சரிவின் பொழுது நமது சந்தைகள் துவக்கம் மட்டும் கீழே பின்னர் உடனடி இழப்பினை சரி செய்தல் ..
* அத்துடன் அல்லாமல் நாளின் உயரங்களில் முடிவடைதல் ..
* நமது நாட்டின் ஏற்றுமதி குறித்த அறிவிப்பு சமீபத்தில் 30 % சரிவு . அன்றைய தினம் சந்தைகள் 4 % உயர்வு ..
* ஐ ஐ பி டேட்டா -1 . 2 % சரிவு .
அன்றைய தினம் சந்தைகள் 2. 5 % to 3 % வரை உயர்வு
* பெரிதும் எதிர் பார்த்த இன்போசிஸ் காலாண்டு அறிக்கையில் இது வரை நிறுவனம் தராத வருவாய் இழப்பு , இனி வரும் காலங்கள் வருவாய் குறைய வாய்ப்பு உள்ளது .என தெரிந்து அன்றைய தினம் சந்தைகள் 3.5 % to 4 % வரை உயர்ந்துள்ளது .
சாதரணமாக நமது சந்தைகள் 20 to 40 புள்ளிகள் அதிகரித்தால் குறைந்தது 10 புள்ளிகள் சரிவுகள் வரும் . ஆனால் கடந்த ஒன்றரை மாதங்களாக சிறிய அளவிலான சரிவுகள் கூட வரவில்லை . நிப்டி மொத்தம் 900 புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது ..
எனது கணிப்பின் படி சந்தைகளில் பெரிய அளவில் ஏதோ ஒன்று நடக்க உள்ளதாக தோன்றுகிறது .. சுதாரித்து கொள்ளுங்கள் .முதலீட்டாளர்கள் ஓரளவு நஷ்டம் உள்ள பங்குகளையும் இந்நிலையில் விற்று வெளிவருவது நலம் ,,
சந்தைகள் கீழே வரும் பொறுங்கள் ....
நன்றி !!!