நேற்று பலமாய் துவங்கிய ஆசியசந்தைகள் இது வரை இல்லாத அளவிற்கு எழுச்சியை ஒரே நாளில் கண்டு மீண்டு வந்தன .. ஒரே வர்த்தக தினத்தில் ஆசிய சந்தைகள் அனைத்தும் 5 % to 7 % வரை எழுச்சி கண்டுள்ளன . " G 20 " மாநாடு தொடங்குவதற்குள் இத்தனை வேகம் தேவையில்லாதது என்றே நினைக்கிறேன் .
மேலும் மாநாட்டில் பெரியதாக எதுவும் ஊக்க செய்திகள் வரவில்லை பழைய ஊக்க அறிவிப்புகளை ஒட்டியே செய்திகள் உள்ளன .நமது சந்தைகள் சற்று அதிகமாகவே 5 % வரை அதிகரித்துள்ளன . ஆனால் நமது சந்தைகள் கடைசி வரை அப்ரேட்டர்களால்கூடுமான வரை சந்தை உயர்த்தி செல்லப்பட்டுள்ளது ..
அதனால் சந்தையில் " SHORT " நிலைகளில் உள்ளவர்களை பெருமளவில் சந்தையில் இருந்து வெளியேற்றி விட்டனர் .. இந்த சூழல் நேற்று மட்டுமல்ல நேற்று முன்தினமும் இதே போல சந்தைகள் உயர்வினை கண்டன என்பது குறிப்பிடத்தக்கது .
அமெரிக்கா சந்தைகள் 3 TO 4 % மட்டுமே உயர்வினை கண்டுள்ளன . DOW முக்கியமான எதிர் நிலையான " 8000 " ஐ கடந்த ஐந்து மதங்களுக்கு பிறகு இப்பொழுது கடந்து இருப்பது குறிப்பிடத்தக்கது ..
வரும் நாட்களில் சந்தைகளில் தற்சமயம் ஏற்ப்பட்ட எழுச்சியை தக்க வைக்க சந்தைகள் சற்று போராடும் என கருதுகிறேன் . ஏன் எனில் " G 20 " மாநாட்டில் அறிவித்த அறிவிப்புகளை காட்டிலும் சந்தைகள் சற்று மேலே வந்து விட்டதாக கருதுகிறேன் .
இன்றைய ஆசிய சந்தைகள் " FLAT " ஆக துவங்கி உள்ளன . ஆகவே வரும் நாட்களில் சந்தையின் சரிவுகள் உறுதிப்படுத்த படலாம் என நினைக்கிறேன் . மேலும் இந்த நிலைகளில் " LONG " மற்றும் குறுகிய கால முதலீட்டாளர்கள் லாபத்தினை உறுதி செய்யலாம் . வரும் நாட்களில் உலக சந்தைகளில் விற்பனை அதிகரிக்கலாம் எனவும் எதிர் பார்க்கிறேன் . இனி வரும் நாட்களில் உலக சந்தைகளின் போக்கினை நிப்டி தொடரும் என நினைக்கிறேன் .
நிப்டி நிலைகள் ;-------
அதரவு ------ 3190 , 3150 , 3130 ...
எதிர் ------ 3230 , 3280 , 3340 ...
நன்றி !!!
மனிதனின் முதல் வெற்றி தன்னை தானே வெல்வது தான் ..
மனம் தளராதீர் நண்பர்களே !!!