செவ்வாய், 28 ஏப்ரல், 2009

நேற்றைய சந்தையில் நிப்டி " 40 " புள்ளிகள் சரிவில் துவங்கி பின்னர் உடனடியாக மீள ஆரம்பித்தது . நாளை பியுச்சர் சந்தைகளின் ஒப்பந்தம் முடிவுக்கு வருவதாலும் மேலும் சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்களின் முதலீடு அதிகரித்து வருவதாலும் முந்தய பதிவில் குறிப்பிட்டது போல சில காரணங்களாலும் சந்தைகள் கீழிறங்க மறுக்கின்றன .

மேலும் ஆசிய சந்தைகள் நேற்றைய சந்தையில் துவக்கம் முதல் முடிவு வரை 3 % சரிவிலேயே வர்த்தகத்தினை முடித்து கொண்டன . பின்னர் நமது சந்தைகள் இடை வேளையின் போது அமெரிக்கபியுச்சர் சந்தைகள் 1 % - 1.5 % வரை சரிவில் வர்த்தகம் ஆனது . அதனை தொடர்ந்த ஐரோப்பிய சந்தைகளும் 1 % - 1.5 % வரை சரிவில் தொடங்கி வர்த்தகம் ஆனது .


ஆனால் நமது சந்தைகள் இவை எதனையும் பின் தொடராமல் ஒரே நிலைகளில் நின்று மீண்டு வர வர்த்தகம் ஆனது . மீண்டும் வந்தது இடையில் சந்தைகள் சில சரிவுகள் காட்டியது .

நேற்றைய அமெரிக்க சந்தைகள் 1.5 % அளவிற்கு சரிவில் துவங்கி வர்த்தகம் ஆனது . முடிவில் அமெரிக்க சந்தைகள் 1/2 % அளவிற்கு சரிவில் முடிந்தன .

இன்றைய ஆசிய சந்தைகள் நேற்றைய வீழ்ச்சியின் எழுச்சியாக 1/2 % அளவிற்கு மட்டும் உயர்வில் துவங்கி உள்ளன . நமது சந்தைகளை பொறுத்த வரை 20 - 25 புள்ளிகள் அதிகரித்து துவங்க வாய்ப்புகள் உள்ளன . மேலும் இவ்வார இறுதி வியாழன் மற்றும் வெள்ளி விடுமுறை மற்றும் நாளை பியுச்சர் ஒப்பந்த முடிவு என எல்லாம் ஒன்று சேர்ந்து சந்தைகளின் நகர்வுகளை அதிகப்படுத்தலாம் .

சாதரணமாக சந்தைகளை கீழிறங்க ஆபரேட்டர்கள் விட மாட்டார்கள் .

ஆகவே கவனமாக வர்த்தகம் செய்யுங்கள் முடிந்தவரை சந்தையின் போக்கில் வணிகம் செய்யுங்கள் .

நிப்டி நிலைகள் ----

அதரவு --- 3460 , 3410 , 3380 ...
எதிர்ப்பு --- 3491 , 3510 , 3550 ...

உண்மையே பேசுங்கள் ! ஏனெனில் உண்மை தான் பக்திக்கு வழி கட்டுகிறது .

நன்றி !!!