உலகம் முழுவதும் சத்யம் பங்குகள் விலை சரிந்த பொழுது தங்களது பணம், சொத்து , ஏன் வாழ்க்கையே தொலைத்தவர்கள் பல பேர்?
அப்படி என்னதான் நடந்தது? -------------
சத்யம் தொடக்கம்:
சத்யம் நிறுவனம் ராமலிங்க ராஜுவால் ஆந்திராவை தலைமையிடமாக கொண்டு 1991 - ல் தொடங்கப்பட்டது. அவரது தம்பி ராமராசு CEO - ஆக செயல்பட்டார். நிறுவனம் நன்கு செயல்பட ஆரம்பித்தது. அதன் வளர்ச்சியை கண்ட ஆந்திர அரசு 1996 - 1997 ஆண்டுகளில் சத்யம் நிறுவனத்திற்கு பல சலுகைகள் வழங்கியது . தகவல் தொழில் நுட்ப துறையில் தமது மண்ணின் மைந்தராக ராமலிங்க ராஜுவிற்கு அதிகபடியான சலுகைகள் வழங்கியது. இதை அடுத்து 1998 - ல் முறையாக IPO அனுமதி பெற்று பங்கு சந்தையில் நிறுவன பங்குகள் வர்த்தகம் தொடங்கின.
அடுத்த 2001 - 2002 வருடங்களில் பலர் ஆச்சரியப்படும் விதத்தில் தகவல் தொழில் நுட்ப துறை நிறுவனங்களின் வளர்ச்சி விகிதம் கணக்கில்லாமல் அதிகரித்து வந்தது. பின்னர் 2002 - 2008 இத்துறையில் சிற்சில பிரச்சினைகள், புதிய வியாபார ஒப்பந்தங்கள் வந்தது .
இந்த காலங்களில் தகவல் தொழில் நுட்ப துறை நிறுவனங்களின் வரிசையில் நான்காம் இடத்தை பிடித்தது . மேலும் தமது நிறுவனத்தின் வளர்ச்சியை வைத்து நமது நாடு மட்டும் அல்லாமல் 17 - 24 நாடுகளில் வணிகம் செய்வதாக தகவல்கள் உள்ளன. இதை கண்ட அந்நிய முதலீட்டாளர்கள், பரஸ்பர நிதியகங்கள், சில வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு நபர்கள் நிறுவனத்தில் இணைந்தனர். இவர்கள் அனைவரும் பங்குதாரர்களாக.
சத்யம் ராமலிங்க ராஜுவிற்கு இரண்டு மகன்கள் . அவர்கள் மேதாஸ் இன்பிரா என்னும் நிறுவனத்தை நடத்தி வந்தனர் . சத்யத்தின் செல்வாக்கை பயன்படுத்தி ஆந்திராவில் கட்டுமான பணிகள் செய்து வந்தனர் . நிறுவனம் வளர்ச்சி அடைய பெரிதும் சத்யத்தின் ஆதரவு கிடைத்தது . இந்நிலையில் 2007 இறுதியில் IPO வெளியிட்டது.
இவர் சென்ற வருடத்தின் இறுதியில் நடந்த சத்யம் நிருவர்கள் கூட்டத்தில் ராஜு , நிறுவன அதிகாரிகள் மற்றும் பங்குதாரர்களிடம் கட்டுமான பணியில் ஈடுபடலாம் . அதற்காக மெய்டஸ் இன்பிரா நிறுவனத்தை வாங்கலாம் என்று கூறி உள்ளார் .
அதற்கு அவர்கள் நமது நிறுவனம் நன்றாக நடந்து வருகிறது . இந்நிலையில் புதிதாக இன்பிரா தொழில் தேவை இல்லை . மேலும் அந்நிறுவன பங்கின் விலைகள் 600 - க்கும் அதிகமாக உள்ளது. அதனால் வேண்டாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் ராஜு அந்நிறுவனத்தை வாங்கியே தீருவது என கூட்டத்தில் கூறிவிட்டார்.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் நடந்த கூட்டத்தில் இது பற்றிய பேச்சு எழுந்தது. அதன் பின்னர் முக்கிய முதன்மை அதிகாரிகள் பதவி விலக ஆரம்பித்தனர் . இதன் பின்னர் சத்யம் நிறுவனத்தை பற்றிய சில உண்மை தகவல்கள் வெளிவர ஆரம்பித்தன . வெளிநாட்டு முக்கிய முதலீட்டாளர்கள் , உள்நாட்டு பங்குதாரர்கள் ஒருவர் பின் ஒருவராக வெளிவர ஆரம்பித்தனர் .
இந்த சம்பவத்திற்கு பிறகு திடீரென ராஜு நிறுவனர் பதவியில் இருந்து தாம் விலகி விடுவதாகவும் மேலும் நிறுவனத்தின் இருப்பு தொகையில் கையாடல் செய்து விட்டதாகவும் கூறி நிறுவனத்தில் இருந்து விலகினர் .
இந்த தகவல் வெளியானதும் சந்தையில் சத்யம் பங்குகள் 260 விலையில் இருந்து 30 ரூபாய் வரை சரிவடைந்தன.
அதன் பின்னர்தான் சத்யத்தின் உண்மைகள் முழுவதும் அம்பலம் ஆனது.
* ராம லிங்க ராஜு நடந்து கொண்ட விதத்தை வைத்து பார்க்கும் பொழுது மெய்டஸ் நிறுவனத்தை வாங்கி இருந்தால் எடுத்த எல்லா தொகையும் சரி செய்து இருப்பார் போல தெரிகிறது.
* மெய்டஸ் இன்பிரா சத்யத்தின் துணை நிறுவனம்போல் செயல்பட்டு வங்கியில் கடன் பெற்றதும், சில ஒப்பந்தங்கள் பெற்றதும் தெரிய வந்துள்ளது.
* ராஜு சத்யம் பங்குகளில் பெருமளவில் uyarndha விலையில் விற்றுள்ளார்.
* மேலும் சில டீமாட் கணக்குகள் தமக்கு தெரிந்தவர்கள் பெயரில் வைத்து பங்குகள் தினசரி வணிகம் செய்யப்பட்டுள்ளன.
* ராஜு தனது promotor பங்குகளின் விகிதங்களை ஒவ்வொரு வருடமும் குறைத்து கொண்டு வந்துள்ளார் . இறுதியாக அவர் இடம் இருந்த promotor பங்குகள் 17.80 % மட்டுமே . அவையும் வங்கிகளில் அடமானம் வைக்கபட்டிருந்தன.
* மெய்டாஸ் நிறுவனத்தின் பங்குகளும் பெருமளவில் வங்கியில் அடமானம் வைக்கப்பட்டு இருந்தன.
* சத்யத்தில் நடந்த பிரச்சினைக்கு பின்னர் அடமானம் வைக்கப்பட்ட பங்குகளை வங்கிகள் விற்பனை செய்துள்ளன .அதன் பின்னர் அந்நிய முதலீட்டாளர்கள், பரஸ்பர நிதியகங்கள் அனைத்தும் பங்குகளை விற்றன. அதனால் விலை கட்டுக்கடங்காமல் சரிந்தன.
இவை எல்லாம் நடந்து முடிந்த பின்னர் நிறுவனத்தின் பிற அதிகாரிகள் நிறுவனத்தை பற்றி பேச அவர்களும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர் . இந்நிலையில் இப்பிரச்சினையை முடிவிற்கு கொண்டு வர மத்திய அரசு 1000 கோடி ரூபாய் நிதி உதவியை அளிப்பதாக கூறியது.
மீதம் இருந்த அதிகாரிகளும் மாறுபட்ட கருத்துக்கள் மற்றும் சில அதிகாரிகளின் மாயம் ஆகியவற்றால் அரசு அளிக்க இருந்த நிதி உதவியை ரத்து செய்தது . மேலும் சத்யத்தை நிர்வகிக்க , சத்யத்தை சீர்படுத்த ஒரு குழுவை அமைத்தது . அவர்கள் பிரச்சினையை சரி செய்தார்களோ இல்லையோ உடன் சத்யத்தை வாங்க பல பெரிய நிறுவனங்கள் களத்தில் குதித்தன.
ஆனாலும் நிறுவனத்தின் இருப்பு மற்றும் கணக்கு விபரங்கள் யாருக்கும் தெரியவில்லை மற்றும் வெளிவரவும் இல்லை. இந்நிலையில் நடந்த டெண்டர் முறையில் சத்யம் நிறுவனத்தை மகிந்த்ரா நிறுவனர் ஆனந்த் மகிந்திரா வாங்கியுள்ளார் . மேலும் சத்யம் நிருவனத்தின் மீது அமெரிக்காவில் சில வழக்குகள் தொடரப்பட்டுள்ளது .அதுமுடிவிற்கு வந்தால் சுமார் 2900 கோடி வரை செலவாகும் என கணக்கிட பட்டுள்ளது.
தற்சமயம் சத்யத்தின் சந்தை மதிப்பு 5668 crores ஆகும் . நிறுவனத்தின் 5 1 % பங்குகளை ஆனந்த் மகிந்திரா vaanki உள்ளார்.
வரும் காலங்களில் நிறுவனத்தின் செயல்பாடு மற்றும் பிரச்சினைகள் எப்படி இருக்கும் என தெரியாது . புதிய நிர்வாகத்தினரின் பொறுப்பில் சத்யம் ? ? ? ?
இவை அனைத்தும் உங்கள் தகவலுக்காக மட்டுமே...
நன்றி ..!!!!!