வெள்ளி, 10 ஏப்ரல், 2009


நேற்றைய
சந்தைகள் உலக சந்தைகளின் போக்கினை ஒட்டி 2 % உயர்வில் துவங்கின . ஆசிய சந்தைகள் 2 % வரை உயர்வில் துவங்கின . ஆசிய மற்றும் இதர சந்தைகள் நேற்று முன்தினம் 3 % to 4 % வரை சரிவில் முடிந்தன .


அதனால் உயர்வில் துவங்கின . ஆனால் நமது சந்தைகள் நேற்று முன்தினம் வர்த்தகம் முடிவில் 3 % வரை உயர்வில் முடிந்தது குறிப்பிடத்தக்கது . மற்றும் நமது சந்தைகளின் உயரங்களை உலக சந்தைகள் எதுவும் இன்னும் எட்டவில்லை என்பது நினைவில் வைக்கவும் ..

நேற்று நமது சந்தைகள் வந்த உயர்வு சற்று ஆச்சர்யம் தான் .. ஏன் எனில் இன்பிலேசன் 0.26 vs 0.31 என அறிவிப்பு வந்தது . ஆனால் அதற்க்கு முன் வர வேண்டிய ஐ ஐ பி அறிவிப்பு சற்று தாமதம் ஆனது ..

கடந்த சில மாதங்களாக ஐ ஐ பி அறிவிப்பு சந்தைக்கு அதரவாக இருப்பின் 11 .30 மணிக்கெல்லாம் சரியாக வரும் .. ஆனால் ஐ ஐ பி அறிவிப்பு சற்று தாமதமாக வந்தால் மோசமாக இருக்கும் . இதனால் சந்தைக்கு பாதிப்பு என புரிந்து கொள்ளும் படி இருந்தது .

நேற்றும் அதே போல சற்று தாமதம் ஆனது . ஆனால் ஐ ஐ பி - 1.2 என வந்தது . இது சந்தைக்கு மிகவும் பாதகம் தான் . ஆனால் அறிவிப்பு வந்தது வந்ததும் சந்தைகள் நாளின் உயரங்களுக்கு அருகில் செல்ல ஆரம்பித்து சில புள்ளிகளுக்கு முன் வரை சென்று பின்னர் கீழிறங்கின ..

நாளின் வர்த்தகத்தின் இடையில் சந்தைகளின் போக்கு சற்று அதிகப்படியாக அதிக உயர்வு மற்றும் அதிக சரிவு என வர்த்தகம் ஆனது இதை வைத்து பார்க்கும் பொழுது சந்தைகள் முழுவதும் இன்னும் ஆபரேடர் கைகளில் சந்தைகள் உள்ளதாக கருதுகிறேன் .

மற்றும் நமது சந்தைகள் ௨00 வர்த்தக தினங்களின் சராசரி விலைகளை( 3400 ) நேற்று தொட்டன . ஆனால் சந்தைகள் தொடர்ச்சியாக அந்த நிலைகளில் நிற்க முடிய வில்லை ஆதலால் சந்தைகள் கீழிறங்க ஆரம்பித்தன .,

மேலும் அந்த நிலைகளுக்கு மேல் சந்தைகள் செல்ல இயலவில்லை அந்த நிலைகளில் " short selling " அதிகமாக உள்ளது .. ஆகையால் வரும் நாட்களில் சந்தைகளில் சரிவுகள் வரலாம் . நமது சந்தைகள் முடிவில் ஆசிய சந்தைகள் 3 % to 4 % வரை அதிகரித்து முடிந்தன . நமது சந்தைகள் நேற்று முன் தினம் முடிந்த அதே நிலைகளில் " 3355 " முடிந்தன .

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் வர்த்தக அறிவிப்பு மற்றும் வேலை இல்லாதோர் பற்றிய அறிவிப்புகள் மந்தமாக வந்த போதிலும் சந்தைகள் உயர்வினை கண்டன . அமெரிக்கா சந்தைகள் முடிவில் 3 % to 4 % வரை உயர்ந்தன .


------------- இன்று நமது சந்தைகள் விடுமுறை ----------------------
*******************************************************************************

இன்றைய ஆசிய சந்தைகள் 0.5 % to 1 % வரை உயர்வில் துவங்கி உள்ளன . வார இறுதி மற்றும் அனைத்து சந்தைகளின் உயரங்கள் எல்லாம் சேர்ந்து உலக சந்தைகளில் லாபத்தினை உறுதி செய்யும் நிலைகள் வரலாம் . வரும் வாரங்களில் உலக சந்தைகளில் சில சரிவுகள் வரலாம் .

நன்றி !!!


ஒருவன் வெற்றிக்கு அடிப்படையாக இருப்பது ஒழுக்கம் மட்டுமே !