வியாழன், 2 ஏப்ரல், 2009

நேற்றயசந்தைகள் முன்பு கூறியது போல " 3070 " என்ற நிலைகளை சந்தைகள் நேற்று நாளின் இறுதியில் அடைந்தன . மேலும் வர இருக்கும் " G 20 " மாநாட்டின் தாக்கத்தின் காரணமாக சந்தைகளில் பெருமளவு " SHORT COVERING" செய்யப்பட்டுள்ளதாக கருதுகிறேன் ..

நேற்றைய சந்தைகளில் நிப்டி " 3060 " புள்ளிகளில் முடிந்தன . மேலும் வர இருக்கும் இன்றைய இன்பிலேசன் அறிவிப்புகள் " G 20 " ஆகிய காரணங்களே சந்தையின் உயர்வுக்கு காரணம் என நினைக்கிறேன் .

" G 20 " மாநாட்டில் திரு ஒபாமா அவர்களின் பேசுவதும் நமது பாரத பிரதமர் திரு மன்மோகன் சிங் அவர்கள் பேசுவதும் முக்கியத்துவம் வாய்ந்த்ததாக கருதப்படுகிறது . மேலும் பொருளாதார சிக்கல் குறித்தும் அனைத்து நாடுகளும் இந்தியா மற்றும் அமெரிக்காவின் ஆலோசனைகளை எதிர்பார்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது ..

நேற்றைய ஆசிய சந்தைகள் மந்தமாகவே வர்த்தகம் நடந்தன வர்த்தகம் முடியும் தறுவாயில்" FLAT " நிலையில் முடிந்தன .. ஆனால் ஜப்பான் சந்தைகள் 3 % அளவிற்கு ஏறுமுகத்தில் முடிவடைந்தன .. நமது சந்தைகள் மற்றும் ஆசிய சந்தைகள் வேறு வேறு பாதைகளில் கொண்டு செல்லப்படுகின்றன என்பதை உணர்கிறேன் ..

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் நன்றாக வர்த்தகம் நடந்தன .. சந்தைகள் முடிவில் 1.5 % to 2 % வரை எழுச்சி அடைந்தன ...

இன்றைய நாளின் உயரங்களில் நின்று நிதானித்து வர்த்தகம் நடந்து கொண்டுள்ள ஆசிய சந்தைகள் 3 % to 4 % வரை " GAP UP " இல் துவங்கி உள்ளன .. நமது சந்தைகள் இன்றைய சந்தையில் " 3070 " இக்கும் மேலே செல்லும் பட்சத்தில் " 3130 " புள்ளிகள் வரை சந்தைகள் மேலே செல்லும் வாய்ப்புகள் உள்ளன ..

நிப்டி நிலைகள் ;------

அதரவு --- 3040 , 3000 , 2970 ....
எதிர்ப்பு --- 3100 , 3130 , 3150 ...

நன்றி !!!

கடுமையான வார்த்தைகளை கொட்டுவதில் உங்களின்
பலவீனம் வெளிப்படும் ....