செவ்வாய், 31 மார்ச், 2009

நேற்றைய சந்தைகள் 2 % க்கும் ( - 65 புள்ளிகள் )அதிகமாக சரிவில் தொடங்கின . ஆனால் மேலும் மேலும் சரிவில் வர்த்தகம் ஆனது . முன்பே கூறியது போல் துவக்கத்தின் போதே 3100 , 3070 , ஆகிய இரண்டு முக்கிய அதரவு நிலைகளும் உடைபட்டன . இருந்தாலும் சந்தைகள் திரும்ப அந்த புள்ளிகளை எட்டி பிடிக்க முயற்சி மேற் கொண்டன .. ஆனால் முடியவில்லை . பின்னர் அங்கிருந்து கீழிறங்க ஆரம்பித்தன .

நமது
சந்தைகள் துவக்கத்துக்கு பின்னர் மற்றும் ஆசியசந்தைகளின் இடைவேளையின் போது அமெரிக்க பியுச்சர் சந்தைகள் 200 புள்ளிகள்வரை சரிவில் வர்த்தகம் ஆனது . அமெரிக்காவில் GENERAL MOTOR'S நிறுவனம் பற்றிய திவால் அறிவிப்பே சந்தைகளின் சரிவிற்கு காரணம் ஆகும் ..

பின்னர் இந்த சரிவு ஆசிய மற்றும் நமது சந்தைகளையும் சரிவிற்கு கொண்டு சென்றது ..

நமது சந்தைகள் ஆசிய சந்தைகளின் போக்கினை தொடர்ந்து சரிவில் சென்றது . முடிவில் சந்தைகள் " 130 " புள்ளிகள் இழந்து " 2978 " புள்ளிகளில் சந்தைகள் நிலை பெற்றன ..

நேற்று முடிந்த அமெரிக்க சந்தைகள் "GENERAL MOTOR'S " இன் திவால் அறிவிப்பால் ஆட்டோ துறை பங்குகள் மற்றும் அனைத்து பங்குகளையும் சரிவிற்கு கொண்டு சென்றது . அமெரிக்க சந்தைகள் மற்றும்
ஐரோப்பிய சந்தைகள் முடிவில் 3 % TO 4 % வரை சரிவில் முடிந்தன ..

இன்றைய ஆசிய சந்தைகள் மற்றும் நமது சந்தைகள்சற்று " GAP UP "
இல் துவங்கலாம் . நேற்றைய வீழ்ச்சிக்கு பிந்தைய எழுச்சி இன்று அல்லது
நாளை எதிர் பார்க்கலாம் .

நிப்டி நிலைகள் ;-----

அதரவு - 2970 , 2950 , 2920 ....
எதிர்ப்பு - 3000 , 3020 , 3038 ...

நன்றி
!!!

கடவுள் தந்த அழகிய வாழ்வு உலகம் முழுதும் அவனது வீடு கண்கள் மூடியே வாழ்த்து பாடு !!!!

திங்கள், 30 மார்ச், 2009

நண்பர்களே சனிக்கிழமை இடுகையை படித்து விட்டு தொடரவும் !!!

இன்றைய ஆசிய சந்தைகள் 2 % அளவிற்கு சரிவடைந்து துவங்கி உள்ளன . நமது சந்தைகளும் 1.5 % to 2 % வரை சரிவில் துவங்கும் .. அவ்வாறு நிகழும் பட்சத்தில் முக்கிய அதரவு நிலையான " 3100 " புள்ளிகளுக்கு கீழே சந்தைகள் துவக்கத்திலேயே உடைபடலாம் ..

பின்னர் அடுத்த முக்கிய அதரவு நிலையான 3070 . 3038 . இரண்டு நிலைகள் இருக்கும் . அந்த நிலைகளும் உடைபட்டால் சந்தைகள் மேலும் பலவீனம் அடைய வாய்ப்புகள் உள்ளது .

வரும் வியாழன் நடைபெறவுள்ள " G 20 " மாநாட்டில் பொருளாதார பிரச்சனைகள் குறித்து அனைத்து நாடுகளும் விவாதிக்க உள்ளன . மாநாட்டுக்கு பிறகு சந்தைகள் போக்கில் பெரிய மாற்றம் உண்டாகும் .

மேலும் அனைத்து நாடுகளும் பொதுவன் ஒரு கரன்சி ஐ அறிமுகப்படுத்த முனைப்பு காட்டி வருகின்றன ( அவர்களின் முனைப்பு கரன்சி வர்த்தகத்தில் இருந்து அமெரிக்கா டாலர் ஐ முன்னிலை படுத்தக்கூடாது) என்பது குறிப்பிடத்தக்கது ..

ஆகையால் வர இருக்கும் நாட்கள் சந்தைகள் சற்று வித்யாசமாகவே வர்த்தகம் நடக்கும் என நினைக்கிறேன் . முடிந்த வரை சந்தையின் போக்கில் சென்று வணிகம் செய்ய முயற்சி செய்யுங்கள் ..

எதிர் நீச்சல் வேண்டாம் .. நிலைகள் எடுத்து வைப்பதை தவிர்க்கவும் ..

நிப்டி நிலைகள் ;---------------

அதரவு ; 3100 , 3070 , 3040 ......
எதிர்ப்பு ; 3130 , 3150 , 3170 .......

நன்றி !!!

ஞாயிறு, 29 மார்ச், 2009

அரசு அறிவிப்புகள் மற்றும் சந்தை

வணக்கம் நண்பர்களே !
பங்கு சந்தையை பொறுத்த வரையில் சந்தையில் வாங்குபவர் மற்றும் விற்ப்பவர்களை பொறுத்து சந்தையின் ஏற்ற தாழ்வு இருக்கும் என்பது நாம் அறிந்த ஒன்று . ஆனால் சந்தைகள் மற்ற சில சமயங்கள் அரசு அறிவிப்பு மற்றும் அரசாங்கத்தின் நிதி சம்பந்தமான அறிவிப்புகள் மற்றும் நிதியமைச்சகத்தின் செயல்பாடு ஆகியவற்றை பற்றிய அறிவிப்புகள் மற்றும் முக்கிய டேட்டா வெளியிடும் போது சந்தைகள் மிகப் பெரிய எழுச்சி அல்லது சரிவுகளை சந்திக்கின்றன ..

இது இன்று புதிதாக வந்தது அல்ல .. நடை முறையில் உள்ளது தான் அதைப்பற்றி இந்த பகுதியில் பார்ப்போம் ...

* இன்பிலேசன்

* ஜி டி பி

* வர்த்தக அறிவிப்பு ( ட்ரேடு டேட்டா )

* ஐ ஐ பி டேட்டா

ஆகியவற்றை பற்றி விரிவாக பார்ப்போம் ...

* இன்பிலேசன் ...
********************
WHOLE SALE PRICE INDEX ---- WPI

மக்கள் பயன் படுத்தும் அத்தியாவசிய பொருட்களில் " 435 " பொருட்களை கணக்கில் எடுத்து கொண்டு அதன் தற்போதைய சந்தை விலை மற்றும் போன வாரத்தின் விலை ஆகிவற்றை கணக்கிட்டு சந்தை விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினை கணக்கிட்டு அறிவிப்பது தான் இன்பிலேசன் .. இது வாரம் ஒரு முறை வியாழன் அன்று வெளியாகும் .. இது அதிகரித்தால் சந்தைகள் பாதிக்கும் .. குறைந்தால் சந்தைகள் உயரும் .

காரணம் இன்பிலேசன் ( பண வீக்கம் ) சரியான அளவில் இருந்தால் நாட்டில் உள்ள அனைத்து துறைகளிலும் வாங்கும் சக்தி சீரான அளவில் இருக்கும் . நாட்டில் எந்த வித பண தட்டு பாடும் இருக்காது .

ஜி டி பி ====
*********************
C + I + G + N + X ---

C --- ( CONSUMAR SPENDING ) மக்களிடம் உள்ள வாங்கும் சக்தி ..
I --- ( INVESTMEND ) முதலீடு வகையறாக்கள் ..
G --- ( GOVERMENT EXPENDITURE ) அரசாங்க வரவு செலவுகள் ...
NX --- ( NET EXPORT ) மொத்த ஏற்றுமதிகள் ..

* இந்த முறையில் ஜி டி பி ஐ கணக்கிடலாம் ..

**** ஜி டி பி ஐ இரண்டு முறைகளாக பிரிக்கலாம் .

1 . NORMAL GDP --- C + I + G + NX = இந்த முறைப்படி வருவது ..

2 . REAL GDP ----- ஒரு வருடத்தின் விலைகளை அடிப்படையாக கொண்டு பொருட்களின் ஏற்ற இறக்கங்களை வைத்து கணக்கிடுவது ..

டேபிலேசன் -- ( DEFLATION )
***************************************

DEFLATION என்பது காரணமில்லாமல் பொருட்களின் விலைகள் தொடர்ந்து இறங்கிக்கொண்டே வருவது . அவ்வாறு இறங்கிக்கொண்டே இருந்தால் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை மிகவும் குறைத்து விடும் அந்த சமயத்தில் நமது வங்கிகளும் இருப்புக்கான வட்டி விகிதத்தை மிகவும் குறைத்து விடும் ஏன் சமயத்தில் வட்டி கிடைக்காமல் கூட போகலாம் . ஆனால் இது வளர்ந்த நாடுகளில் சாத்தியம்..

நமது நாட்டுக்கு இந்த நிலை பொருந்தாது .. சில வருடங்களுக்கு முன் ஜப்பானில் இந்த நிலை இருந்தது குறிப்பிடலாம் .

ட்ரேடு டேட்டா ---- நாட்டின் வர்த்தகத்தின் அறிவிப்பு ..
***********************************************************
ஒரு நாட்டின் ஏற்றுமதி அதிகரித்து இறக்குமதி குறைந்து இருக்க வேண்டும் . அப்பொழுது தான் அந்த நாட்டின் ஜி டி பி அதிகரிக்கும் இவ்வாறு நடந்தால் " BALANCE OF TRADE " இன் இடைவெளி குறையும் .. இல்லையெனில் இறக்குமதி செய்யும் நாட்டின் ஜி டி பி தான் அதிகரிக்கும் . BALANCE OF TRADE " இன் இடை வெளி அதிகரிக்கும் ..

ஐ ஐ பி டேட்டா ------------
*********************************

ஐ ஐ பி டேட்டா என்பது ஒரு நாட்டின் உள்நாட்டு உற்பத்தி , தயாரிப்பு ஆகியவற்றின் வர்த்தக நடவடிக்கைகளின் அடிப்படையில் கணக்கிடப்படுவது ஆகும் . அதன் அளவு அதிகரிக்க அதிகரிக்க நாட்டின் பிற தொழில்துறை அமைப்புகளின் செயல் பாடுகள் சிறப்பாக இருக்கும் ..

நமது நாட்டை பொறுத்த வரை ஒரு தொழிலை சார்ந்து பல தொழில்கள் அடிப்படையாக வர்த்தகத்தில் உள்ளன .. அப்படி பார்த்தால் ஐ ஐ பி நன்றாக இருக்க தொழிற்சாலைகளில் உற்பத்தி , விவசாய உற்பத்தி , துணி வகைகள் உற்பத்தி , ஆகியவை நன்றாக இருந்தால் ஐ ஐ பி டேட்டா நன்றாக இருக்கும் ..

அடுத்தது முக்கிய கட்டமான அரசின்...

" FISCAL DEFICIT " --------- ( அரசின் நிதி பற்றாக்குறை ) ...
************************************************************
FISCAL DEFICIT ஐ இரண்டு விதமாக பிரிக்கலாம் .

- REVENUE DEFICIT --
************************

அரசு செய்யும் அத்தனை செலவுகளுக்கும் ( அன்றாட செலவு மற்றும் முதலீட்டு செலவு ) வரும் வருமானத்துக்கும் உள்ள இடை வெளி தான்.
அல்லது வரவுக்கு மீறிய செலவு என்றும் வைத்து கொள்ளலாம் ..

--REVENUE SURPLUS --
*************************
அரசு செய்யும் செலவுகளை விட வரவு அதிகமாக இருத்தல்

REVENUE DEFICIT ---
*************************
ஒரு நாட்டின் அரசிடம் " REVENUE DEFICIT " அதிகமாக இருந்தால் அந்த நாடு கஷ்டத்தில் உள்ளது அர்த்தம் .வரவுக்கு மீறிய செலவு என்றால் கடன் வாங்கி தான் நாட்டை நடத்த வேண்டும் .. மக்களிடம் அல்லது ஆசியாவளர்ச்சி வங்கி அல்லது உலக வங்கி அல்லது வெளிநாட்டில் கடன் வங்கி நாட்டினை நடத்த வேண்டிய சூழல் உருவாகும் ...

நாட்டில் " REVENUE DEFICIT " எப்பொழுதும் இருந்தே வந்துள்ளது . ஆனால் அது அளவோடு இருந்தால் பரவாயில்லை . மிக குறைவாகவும் அளவுக்கு அதிகமாகவும் போக கூடாது . அப்படி அளவோடு இருந்தால் வரும் பற்றாக்குறையை மக்களிடம் (வரி மூலம் ) பெற்று சரி செய்யலாம் ..

"REVENUE DEFICIT " அதிகமாக இருந்து மக்களிடம் சேமிப்பும் இல்லாமல் இருந்தால் வெளிநாட்டில் தான் கை நீட்ட வேண்டும் ..

REVENUE SURPLUS ---
************************
நாட்டின் செலவை விட வரவு அதிகமாக இருந்தால் அரசு பட்ஜெட்டில் புதிதாக வரிகள் எதுவும் போட வேண்டியது இல்லை .. " REVENUE DEFICIT " குறைவாக இருக்கும் . பிரச்சனை எதுவும் இல்லை . பொருளாதார சூழ்நிலை நன்றாக இருக்கும் ..


*** *** ** *** *********** *************** ********
நன்றி !!!!


டெக்னிகல்
அனலிஸ் என்பது சார்ட்டில் உள்ள ஏற்ற இறக்கங்களை வைத்து கணக்கிடும் முறை .. டெக்னிகல் அனலிஸ் இன் முக்கியமான பணி ஒரு பங்கினை எந்த விலையில் வாங்கலாம் எந்த நிலையில் விற்கலாம் என கூறும் முறை .. ஆனால் முதலீட்டளர்களுக்கு இந்த முறை சரி வராது டெக்னிகல் அனலிஸ் இல் காலநேர கெடுஎதுவும் கிடையாது .

பெரும்பாலும் இந்த முறை தினசரி வர்த்தகத்திற்கு மிகவும் உகந்தது . இதை நாம் கற்றுக்கொண்டால் தான் தினசரி வர்த்தகம் செய்யமுடியுமா என கேள்வி வேண்டாம் .

இதை தெரிந்தவர்களிடம் கேட்டும் ( அ ) வலை தளங்களில் கூறியுள்ள படி பார்த்து வணிகம் செய்யலாம் .. சில டெக்னிகல் அனலிஸ்டுகள் தினமும் சந்தைகள் பற்றியும் பங்குகள் நிலை பற்றியும் சில விவரங்களை வலை தளங்களில் இலவசமாக அளிக்கிறார்கள் .. இந்த டெக்னிகல் அனலிஸ் முறைப்படி தான் சில பங்குகள் விலைகள் அமோகமாக சில சமயங்களில் ஏறு முகமாக இருக்கும் பின்னர் இறங்கும் .

அதே போல பங்குகள் இதுவரை செல்லும் என கணித்தும் கூற முடியும் . இதில் காலநேரம் இல்லை என்றாலும் கட்டாயம் அந்த இலக்குகளை வந்து அடையும் .

மேலும் இந்த விலைகள் வரை மேலே வரலாம் இந்தவிலைகள் வரை கீழே செல்லலாம் என்றும் சரியாக கணிக்கும் முறை . இதை தெரிந்தவர் தான் மேற்கூறியவற்றை சரியாக கணிக்க முடியும் .. பங்குகளின் விலை சந்தையில் அதிகரிப்பது இறங்குவதும் எதனால் சப்ளை அதிகமாக இருப்பது மற்றும் குறைவது தான் .

இது என்ன சப்ளை ??

பொருள் வியாபாரத்தை போலவே பங்கு சந்தையும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் . அது போல சந்தையில் விற்பனை செய்பவர்கள் இருந்தால் வாங்கலாம் .. வாங்குபவர்கள் இருந்தால் விற்கலாம் .

இப்பொழுது புரிகிறதா நான் இதை ஏன் சப்ளை என கூறினேன் என்று ??.

ஆம் சப்ளை அதிகமாக இருந்தால் விற்பனை அதிகரிக்கும் விலை குறையும் , சப்ளை குறைவாக இருந்தால் வாங்குவது அதிகரிக்கும் விலை அதிகரிக்கும் ..

சந்தையில் காரணமில்லாமல் அதிக புள்ளிகள் அதிகரிப்பதும் இறங்குவதும் நீங்கள் தினம் பார்ப்பதே .. எந்த விசயமும் இல்லாமல் பங்குகள் முன்பை விட ( முந்தி நாள் வியாபார விலையை விட ) குறைவாக் கிடைக்கிறதே என வாங்க கூடாது . அடுத்த நாளும் இறங்கினால் நஷ்டம் உங்களுக்கு தானே . அது போல அதிக அளவு ஏற்றம் மற்றும் சரிவுகளை டெக்னிகல் அனலிஸ் தெரிந்தவர்கள் கணிக்க முடியும் .

கல்லூரி மற்றும் பள்ளிகளில் நீங்கள் உபயோகபடுத்திய கிராப் தான் இங்கும் டெக்னிகல் அனலிஸ் முறைக்கும் பயன் படுத்தப்படுகிறது . அது போல தான் இங்கும் பங்குகளுக்கென்று கிராப் உள்ளது .ஆனால் இதில் பல முறைகள் உள்ளன அவற்றை பின்னால் பார்ப்போம் .

( உதா ; ஒரு கிராப் கொண்டு ஒரு பங்கின் தினசரி வர்த்தக விலைகளை கிராப்பில் குறிக்க வேண்டும் .வர்த்தக முடிவில் புள்ளிகளை இணைத்து பார்த்தால் ஒரு முழு சார்ட் கிடைக்கும் ) .

சார்ட்" இல் மூன்று விதங்கள் உள்ளன -------- அவை ?

* பார் சார்ட்
* லைன் சார்ட்
* கேண்டில் சார்ட் .......

சார்ட் எப்படி இருக்கும் ?

இப்பொழுது உங்கள் கைகளில் ஒரு கிராப் பேப்பர் உள்ளது என வைத்து கொள்வோம் . பேப்பர் 'இன் நடுவில் இடது ஓரமாக ஒரு புள்ளி வைக்கவும் இருந்து ஒவ்வொரு சிறு கட்டத்திற்கும் ஒரு ரூபாய் என கணக்கு வைத்து கொண்டு சந்தை தொடங்கியதும் நல்லதொரு பங்கினை எடுத்துக்கொண்டு வணிகம் தொடங்கியது அந்தபங்கின் நகரும் அனைத்து விலைகளின் மாற்றத்தையும் கிராப்பில் புள்ளி வைக்கவும் .
பின்னர் சந்தைகள் முடிந்ததும் அனைத்து புள்ளிகளையும் கோடிட்டு இணைத்து விடவும் .. முழுமையான சார்ட் கிடைத்து விடும் .. இதில் வரும் குறைந்தபட்ச மற்றும் அதிக பட்ச விலைகளை வைத்து பங்குகளின் அடுத்த கட்ட நகர்வினை கணிக்கலாம் . இது சாதாரண பழைய முறை .

இப்பொழுது சில வலை தளங்களில் இலவசமாக அதில் சம்பந்தமான விவரங்கள் மற்றும் சார்ட் இருக்கும் அதை வைத்து தெரிந்து கொள்ளலாம் .

மேற் சொன்ன மூன்று சார்ட்'இம் இதே போல் நாம் இடும் கோடுகள் தான் .ஆனால் பார்க்கும் முறைகள் மட்டும் வேறு அவ்வளவு தான் .

* பார் சார்ட் என்பது பார் கம்பிகள் போல L வடிவத்தில் இருக்கும் .
* லைன் சார்ட் நாம் இடும் கோடுகள் தான் ..
* கேண்டில் சார்ட் என்பது மெழுகுவர்த்தி போன்ற தோற்றத்தில் இருக்கும் ..

சார்ட் அனலிஸ் இன் இதர விபரங்கள் -----
*******************************************
* டிரென்ட் அனலிஸ் ---

பங்குகளின் விலை ஏறு முகமா (அ ) இறங்கு முகமா என பார்த்து அதன் போக்கில் செல்ல வேண்டும் .

இதில் மூன்று விதங்கள் உள்ளன . அவை '
**********************************************
* உயரும் போக்கு
* வீழும் போக்கு
* பக்க வாட்டு நகர்வுகள்


நன்றி !!!

******** அடுத்த ***********

சனி, 28 மார்ச், 2009


புதிய
மாதத்தில் முதல் வர்த்தக தினம் நமது சந்தைகள் இன்னும் ஆபரேடர்களின் கையில் இருந்து விடுபடவில்லை என்பது மட்டும் நன்கு புரியும் வகையில் நேற்றைய சந்தையின் போக்கு இருந்தது .. ஆசிய சந்தைகள் " FLAT " நிலையிலேயே தங்கள் வர்த்தகத்தை முடித்துக்கொண்டன ..ஆசிய சந்தைகளின் முடிவில் நமது சந்தைகள் 1 % to 1.5 % வரை அதிகரித்து வர்த்தகம் நடந்து கொண்டு இருந்தன ..

ஐரோப்பிய சந்தைகள் துவக்கத்திற்கு பின் நமது சந்தைகள் அடுத்த அடுத்த உயரங்களை தொட முயற்சி செய்தன . வெற்றியும் கண்டன , முடிவில் தேசிய பங்கு சந்தை 26 புள்ளிகள் உயர்ந்து " 3108 " புள்ளிகளில் முடிவடைந்தன ..

நேற்றைய அமெரிக்கசந்தைகள் 2.5 % 3 % வரை சரிவினைக் கண்டன .. அமெரிக்க சந்தைகளை பொறுத்த வரையில் ஓரளவு மேல் நிலையை அடைந்து விட்டதாக கருதுகிறேன் .. இனி வரும் நாட்களில் லாப நோக்கில் பங்குகளின் விற்பனை சந்தையில் வரலாம் என நினைக்கிறேன் ..

நன்றி !!!

சிறப்பு தகவல் இடுகை !!!!!!!

இந்த வாரத்தில் சில பங்குகளின் விலைகள் மிகவும் அதிகரித்துள்ளன.

அவைகளை வரிசைப்படுத்தி உள்ளேன் ..

இது தங்களின் தகவலுக்காக -----------
*******************************************
பங்கின் பெயர் ---- உயர்வு %
*****************************
டாட்டா ஸ்டீல் - 25 %
ஸ்டெர்லைட் - 18 %
ஐ சி ஐ சி ஐ - 19 %
ஹச் டி எப் சி - 19 %
யுனிடெக் - 33 %
ரிலை கேப் - 18 %
ரிலை கம் - 12 %
சுஸ்லான் - 19 %
எஸ் பி ஐ - 18 %
எல் அண்ட் டி - 15 %
லா இன் கோ - 29 %
**************************************
மேலும் இந்த வாரம் மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகள் முறையே 12 % , 10 % அளவிற்க்கு சந்தைகள் எழுச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது . மேலும் ஐந்து மாதங்களுக்கு பின்னர் சந்தைகளின் ஒரு வாரத்தின் உயர்வு அதிகபட்சமாக இந்த் வாரம் சந்தைகள் தொட்டுள்ளது குறிப்பிடும் ஒரு அம்சமாகும் ......

கடந்த வார சந்தைகள்

கடந்த வார சந்தைகள் !!!

indices == wkly cls = change ( - or + )
**************** ******************
nikkie = 8626.90 = + 681.01 .
ftse = 3898.85 = + 56 .
dow = 7776.18 = + 497.80 .
nasdaq = 1545.20 = + 87.93 .
h .seng = 14119.50 = + 1285.99 .
kospi = 1237.51 = + 66.57 .
nifty = 3108.65 = + 301.60 .
sensex = 10048.49 = + 1081.81 .
*********** ************* ****************

வெள்ளி, 27 மார்ச், 2009


நேற்றைய
சந்தைகள் எதிர் பார்த்து போலவே " 3038 " என்ற நிலையை கடந்ததும் சந்தையின் வேகம் அதிகரித்து (my - short possition sl " 3043 " ) " SHORT " உள்ளவர்கள் தங்கள் நிலைகளில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் .. இன்பிலேசன் அறிவிப்பு 0.27 vs 0.44 என்று வந்ததும் சந்தைகள் மேலே செல்ல தொடங்கின . பின்னர் " short covering " வந்தது ... நிப்டி 3038 என்ற புள்ளிகளுக்கு மேல் நன்றாக மேலே சென்று 3098 புள்ளிகள் வரை சென்றது ..

நேற்றைய ஆசிய சந்தைகள் நன்றாக அதிகரித்து இருந்தது சந்தைகள் முடிவில் 2% to 3 % அளவில் எழுச்சி அடைந்தன ..ஆனால் ஆசிய சந்தைகள் உலக சந்தைகளின் போக்கினை ஒட்டி இல்லை என நினைக்கிறேன் ..

நேற்றைய அமெரிக்கா சந்தையை பற்றி பேச ஒன்றும் இல்லை என நினைக்கிறேன் .. அமெரிக்க தற்சமயம் வெளியிடும் அனைத்து டேட்டா வும் வலிமையிழந்து வருவது குறிப்பிடத்தக்கது .. இந்நிலையில் சந்தைகள் தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டு வருகிறது . நேற்றும் அமெரிக்க சந்தைகள் 2 % to 4% வரை உயர்ந்தன ..

இனி இன்று !!!

ஆசிய சந்தைகள் பொறுத்தவரை உற்சாக துவக்கம் .. 1 % to 2 % வரை " gap up " இல் துவங்கி உள்ளன . இன்றைய வர்த்தகத்தின் இறுதியில் உலக சந்தைகள் அனைத்திலும் " selling " அதிகரிக்கலாம் என நினைக்கிறேன் ..
வாய்ப்புகள் அதிகமாகவும் உள்ளன .. நமது சந்தைகள் பொறுத்த வரை 3030 என்ற கடினமான எதிர் நிலையை கடந்து இரண்டரை மாதங்களுக்கு பிறகு சந்தைகள் மேலே சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது ..

இன்று சந்தைகள் 1 % அளவிற்கு " gap up " இல் துவங்கலாம் ..ஆனால் சந்தைகளின் போக்கு சற்று வேகம் குறைவாகவே இருக்கும் .. ஐரோப்பிய சந்தைகளின் துவக்கத்திற்கு பிறகே நமது சந்தைகளில் பெரிய அளவிலான நகர்வுகள் வரலாம் .. கவனமாக இருங்கள் .........

கூடுமான வரை சந்தையில் வாங்குவது தற்சமய சூழலில் நல்லது அல்ல !!!

" SHORT "
SELLER'S மற்றும் தினசரி வணிகர்கள் கட்டாயம்
SL உபயோகப்படுத்த வேண்டும் ...

நிப்டி நிலைகள் ; ----


அதரவு - 3020 , 2985 , 2950 ...
எதிர்ப்பு - 3100 , 3150 , 3170 ...

நன்றி !!

அன்பால் சாதிக்க முடியாத ஒன்று , இந்த உலகிலேயே கிடையாது ..
முடிந்த வரை எல்லா உயிர்களிடமும் அன்பு கட்டுங்கள் ...
வணக்கத்துடன்

ரமேஷ் .........

வியாழன், 26 மார்ச், 2009


நேற்றைய
சந்தையில் நிப்டி " 2950 " என்ற எதிர் நிலையினை கடந்து சந்தைகள் வலுவான வர்த்தகத்தை தொடங்கின . சந்தையில் கடந்த சில நாட்களாக உயர்ந்து வரும் வர்த்தகத்தின் அளவும் , வர்த்தகத்தின் மதிப்பும் சற்று அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது . ( கடந்த இரு வாரங்களுக்கு பிறகு )

நேற்றய ஆசிய சந்தைகள் குழப்பமான சூழலில் தங்களது வர்த்தகத்தினை முடித்து கொண்டன .அமெரிக்க சந்தைகளை பொறுத்த வரை கருவூல பில் சம்பந்தமான அறிவிப்பினால் மட்டும் சந்தைகள் மேலே வந்துள்ளன .. நேற்று சந்தைகள் 1 % அளவிற்கு எழுச்சி அடைந்தன ..

இன்றைய ஆசிய சந்தைகள் சற்று உற்சாகத்துடன் ஆரம்பித்துள்ளன .. நமது சந்தைகள் இன்று முக்கிய எதிர் நிலையான "3020 " ஐ காலையிலேயே எதிர்கொள்ளலாம் என நினைக்கிறேன் . மேலும் சந்தைகள் முன்னேறும் பட்சத்தில் கடைசி எதிர் நிலையான " 3038 " கடக்க முயற்சிக்கலாம் ..

மேலும் இன்றைய இன்பிலேசன் அறிவிப்பு சந்தைகளுக்கு சாதகமாக இருந்தால் சந்தைகள் அந்த கடைசி எதிர் நிலையை கடந்து மேலே செல்லும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன . இன்று முடியவுள்ள பியுச்சர் வர்த்தகம் சந்தையினை முடிந்தவரை நிலைநிறுத்தவே பார்க்கும் @ ஆபரேட்டர்கள் சந்தையினை ஓரளவு உயர்த்தி செல்ல முனைவர் ..

அப்படிப்பட்ட சூழலில் சந்தைகளில் " SHORT COVERING " அதிக அளவில் வரலாம் .. சந்தையில் " SHORT " நிலைகளில் உள்ளன நண்பர்கள் இறுதியான SL 3043 ஐ உபயோகிக்கலாம் ..

நிபிட்டி நிலைகள் =

அதரவு - 2980 , 2950 , 2920 ....
எதிர்ப்பு - 2980 , 3020 , 3040 ...,

நன்றி !!!

அன்பு ஒன்று தான் உலக மக்களின் ஒரே சமாதான ஆயுதம் !!!

புதன், 25 மார்ச், 2009

நேற்றைய சந்தையில் நிப்டி 3000 புள்ளிகளை எளிதாக தொட்டும் தொடர்ந்து நிற்க முடியவில்லை .. முன்பு சொன்னது போல அந்த நிலைகளில் விற்பனை அதிகரித்து நமது சந்தைகள் கீழிறங்க தொடங்கின ..

ஆசிய
சந்தைகள் முடிவில் அபரீதமாக 3 .5 % வரை அதிகரித்து இருந்தது . இருந்தும் நமது சந்தைகளில் ஆசிய சந்தைகளின் ஏற்றம் பிரதிபலிக்கவில்லை ..
ஐரோப்பிய சந்தைகள் " FLAT " ஆகதுவங்கி பின்னர் சரிவினை நோக்கி செல்ல ஆரம்பித்தன .. பின்னர் நமது சந்தைகள் ஐரோப்பிய சந்தைகளின் போக்கினை பின்பற்றி கீழிறங்க ஆரம்பித்தன .. முடிவில் அதரவு நிலையான "2920 " நிலையும் உடைபட்டு வர்த்தகம் ஆனது .. பின்னர் முடிவில் சந்தைகள் " 2938 " இல் முடிவடைந்தன ..

நேற்றைய அமெரிக்க சந்தைகள் சிறிதளவு லாபத்தினை உறுதி செய்ததுபோல 2 % to 3% வரை சரிவு அடைந்தன .

இனி இன்று !!!

ஆசிய சந்தைகள் 1 % அளவிற்கு சரிவில் வர்த்தகத்தினை தொடங்கி உள்ளன . நமது சந்தைகளை பொறுத்த வரையில் " 2900 to 2950 " க்கு இடையே சந்தைகள் ஊசலாடும் என எதிர் பார்க்கிறேன் ..

நாளை பியுச்சர் முடிவு நாள் என்பதால் சந்தையில் சரிவுகள் அதிகரிக்க கூடும் என எதிர் பார்க்கிறேன் .
அவ்வாறு நிகழும் பட்சத்தில் ஆபரேட்டர்கள் சந்தையினை முடிந்த வரை உயர்த்தி செல்லவும் தயாராக இருப்பார்கள் என நினைக்கிறேன் .. அவ்வாறு நிகழும் பட்சத்தில் சந்தைகள் "2950 " என்ற முக்கிய மான நிலையை கடக்க முயற்சிக்கலாம் .

நிபிட்டி நிலைகள் -----

அதரவு - 2920 , 2900 , 2830 ....

எதிர்ப்பு -2950 , 2980 , 3020 ....

நன்றி !

செவ்வாய், 24 மார்ச், 2009

நேற்றைய சந்தைகள் வெள்ளியன்று முடிவடைந்ததை விட நிப்டி 40 புள்ளிகள் அதிகரித்து துவங்கியது .. ஆசிய சந்தைகள் அனைத்தும் ஏறுமுகத்தில் துவங்கின . பின்னர் ஆசிய சந்தைகள் முடிவில் 3 % to 4 % வரை அதிகரித்து முடிவடைந்தன .

அமெரிக்க சந்தையில் புதிதாக கருவூல பில் சம்பந்தமான ஊக்க தொகை அறிவிப்பு வரலாம் என அரசு அறிவித்தது .. பின்னர் அந்த பில் சம்பந்தமான அறிவிப்பு வெளியானால் சந்தைகள் சற்று மேலே வரும் எனவும் EQ சந்தைகளுக்கு இது சாதகமான அம்சமாக கருதப்பட்டது .

இத்தனை கருத்தில் கொண்டு அமெரிக்க பியுச்சர் சந்தைகள் காலை முதல் ஏறு முகத்திலே இருந்தன . காலை நமது சந்தைகள் துவங்கும் பொழுது + 50 புள்ளிகள் இருந்த DOW மதியத்தின் போது + 200 புள்ளிகளை எட்டியது .
இந்த ஏற்றம் ஆசிய சந்தைகளின் முடிவினையும் மாற்றியது . ஆசிய சந்தைகள் அனைத்தும் உயர் நிலைகளுக்கு அருகாமையில் முடிவடைந்தன ..

நமது சந்தைகள் காலையிலேயே மிக முக்கிய எதிர் நிலையான 2830 என்ற நிலைகளை தாண்டி துவங்கிய சூழலில் அடுத்த கட்ட நகர்வுகள் எதிர் பார்த்து போல கீழே உடைய வில்லை . மேலும் 2830 ஐ அடுத்த நகர்வுகள் சந்தையில் பெருமளவு " SHORT COVERING RALLY " யை உருவாக்கியது .. சில நிறுவன பங்குகள் பல மடங்கு விலை ஏற்றம் கண்டன ..

மேலும் " 2850 " புள்ளிகளைக் கடந்ததும் சந்தைகள் மின்னல் வேகத்தில் ( நமது சந்தைகளுக்கு நல்லதொரு செய்தியை மத்திய அரசு வெளியிட்டதை போல ) மிக எளிதாக 2920 , 2950 , ஆகிய முக்கிய எதிர் நிலைகளை கடந்து நாளின் உயரங்களுக்கு அருகாமையில் சந்தைகள் முடிவடைந்தன ....

அமெரிக்க சந்தைகள் கருவூல பில் சம்பந்தமான அறிவிப்பிற்காக சந்தை எழுச்சி அடைய துவங்கின . முடிவில் அமெரிக்க சந்தைகள் 6 % to 7% வரையிலான ஏற்றம் பெற்று முடிவடைந்தன ..

ஆசிய சந்தைகளை பொறுத்த வரையில் நேற்றே முடிந்த வரை எழுச்சி அடைந்து விட்டன .. அந்த அளவிற்கு மேல் சற்று 2 % வரை இன்றைய சந்தையில் எழுச்சி அடையலாம் என நினைக்கிறேன் . மேலும் இன்றைய ஆசிய சந்தையில் முடிவில் லாப நோக்கில் சற்று சந்தையில் விற்பனை அதிகரிக்கலாம் எனவும் எதிர் பார்க்கிறேன்

நமது சந்தைகளை பொறுத்தவரை எந்த ஒரு நிலைப்பாட்டிற்கும் வர முடியாத சூழலில் உள்ளோம் . ஏனெனில் டெக்னிகல் " ஐயும் சாராமல் , பண்டமன்டலையும் சாராமல் முடிந்த வரை தலை கீழாக வர்த்தகம் நடந்து வருகிறது .. இது சில ஆபரேட்டர்களின் கையில் சந்தை இருப்பதை உணர்த்துகிறது.. அவர்கள் கையில் இருந்து சந்தைகள் வெளிவந்தால் தான் சந்தைகளின் கணிப்பு சரியாக இருக்கும் ..

எனது எதிர் பார்ப்பின் படி சந்தைகள் இன்று 1 % to 2% வரையிலான உயர்வுகள் மட்டுமே சந்தையில் சாத்தியமாகும் என நினைக்கிறேன் ..

மேலு சந்தைகள் வலுவான எதிர் நிலையான 2980 to 3000 புள்ளிகளை கடக்க சற்று வாய்ப்புகள் குறைவே .. அப்படி சிரமப்படும் பட்சத்தில் அந்த நிலைகளில் சந்தையில் சற்று லாபம் கருதி விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது ..

என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் சந்தையின் ஒவ்வொரு உயரங்களிலும் முடிந்த அளவு தங்கள் நிலைகளில் இருந்து வெளியேறுவது மற்றும் லாபத்தினை உறுதி செய்வது தான் சால சிறந்ததாகும் .. ( பின்னாளில் வருத்தப்பட வேண்டியது இல்லை ).

நிபிட்டி நிலைகள் ;;

அதரவு ---- 2920 , 2900 ,2830 .....
எதிர்ப்பு ---- 2950 , 2980 , 3000 .....


நன்றி !!

திங்கள், 23 மார்ச், 2009

விழிப்புணர்வு இடுகை !!!


நண்பர்களே
!!!

இது தங்களின் கவனத்திற்கு மட்டுமே @

பங்குசந்தை குருதிரு மார்க் பேபர் அவர்கள் கணிப்பின் படி ஆசியமற்றும் அமெரிக்க , ஜரோப்பிய சந்தைகள் 25 % to 35 % வரை சரிவுகள் வரும் என குறிப்பிட்டுள்ளார் ..

இந்திய சந்தைகள் சென்செக்ஸ் 6000 புள்ளிகள் வரை வர வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார் ..

அமெரிக்க சந்தையில் s & p 600 புள்ளிகளுக்கு கீழே செல்லும் எனவும் ..

ஆசிய மற்றும் ஜரோப்பிய சந்தைகள் மேற்கண்ட சரிவுகள் வரலாம் என்றும் கூறுகிறார் ..

தங்கம் $ 700 (per oz) வரை வர வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார் ..

மேலும்
இந்தியாவில் தேர்தல் நடைபெறவுள்ளதால் சரிவுகள் மார்ச் ஏப்ரல் அல்லது ஜுன் மாதத்தில் வரலாம் என்றும் கூறுகிறார் ....

நன்றி !

கடந்த
வெள்ளியன்று சந்தைகள் அதரவு நிலையான 2780 நிலைகள் உடை பட்டும் பின்னர் சந்தைகள் மீண்டு வந்தது இல்லை இல்லை மீண்டு வர செய்துள்ளனர் ...

கடந்த சில வாரங்களாக நிப்டி இன் இந்த போக்கு ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. அதுவும் இந்த வாரம் 2800 to 2700 நிலைகளுக்குள் சந்தைகள் தொடர்ச்சியாக வர்த்தகம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது .. ஆசிய மற்றும் அமெரிக்க சந்தைகள் கூட சிறிதளவு இறங்கி பின்னர் ஏறுகிறது.. ஆனால் நமது சந்தைகளை பொறுத்த வரையில் சில அரசியல் காரணக்களுக்காக நிறுத்தி வைத்துள்ளனர் ..

இந்நிலையில் சந்தையில் தற்சமயம் ஏறுமுகமே காணப்படுவது சில அந்நிய முதலீட்டாளர்கள் மற்றும் சில இன்சூரன்ஸ் நிதியகங்கள் சந்தையை மேலேற்றுகின்றன .

வெள்ளியன்று ஆசிய சந்தைகள் அனைத்திலும் சரிவுகளே வந்தன ..
குறைந்தபட்சம் 3 % வரை சந்தைகள் சரிவடைந்தன. ஆனால் நமது சந்தைகள்
2800 என்ற பழைய நிலையிலேயே வர்த்தகம் முடிந்தன ..

அமெரிக்க சந்தைகள் 2 % அளவிற்கு சரிவில் முடிந்தன ............

உலக சந்தைகள் எல்லாம் சரிவில் நமது சந்தைகள் மட்டும் மேலே

என்ன கொடுமை நண்பர்களே !!!

இனி இன்று

இன்றைய ஆசிய சந்தைகள் அபாரமாக ஏறு முகத்தில்
துவங்கி உள்ளன
வழக்கம் போல இதற்க்கு காரணம் இல்லை ..

கடந்த வார ஆசிய சந்தைகளின் நாடகம் இந்த வாரம் முடிவிற்கு வரலாம் என நினைக்கிறேன் .. நமது சந்தைகளை பொறுத்த வரை இன்று" gap up " துவக்கமாக இருக்கலாம் ...

ஆனால் இந்த நிலையில் லாபத்தினை உறுதி செய்யலாம் .. இந்த வார வியாழன் f& o முடிவு தினம் ஆகையால் சந்தையில் பெரியதாக நகர்வுகளை எதிர் பார்க்கலாம் என நினைக்கிறேன் ..

முக்கிய தடை நிலையான " 2830 " இம் அதரவு நிலையான " 2790 " இக்கும் இடையில் இன்று வர்த்தகம் நடக்கலாம் .. அதரவு நிலைகள் உடைய இன்றைய சந்தையில் வாய்ப்புகள் குறைவு என்றே நினைக்கிறேன் .. இருந்தாலும் கவனமாக இருங்கள் !!!

சுவர் இருந்தால் தன் சித்திரம் .. நாம் சந்தையில் இருந்தால் தான் நாலு காசு பார்க்க முடியும் .............

நன்றி !

அன்புடன்
ரமேஷ்

கடந்த வார சந்தைகள் @

கடந்த வார சந்தைகள் !!!
indices == wkly cls = change ( - or + )
nikkie = 7945.90 = + 376.62 .
ftse = 3842.85 = + 89.17 .
dow = 7278.38 = + 54.48 .
nasdaq = 1457.25 = + 25.77.
h. seng = 12833.50 = + 308.28.
kospi = 1170.90 = + 44.87 .
nifty = 2801 = + 82.10 .
sensex = 8966.68 = + 210.07.
*********** ********* ************ ****************

பண்டமண்டல் அனலிஸ் ஒரு அலசல்

வணக்கம் நண்பர்களே !!!

பண்ட மண்டல் அனலிஸ் என்பது சந்தையில் ஒரு நல்ல பங்கை கண்டுபிடிப்பது எப்படி என்பது தான் ...

* நிறுவனம் எந்த துறையை சார்ந்தது?
* அந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் மக்களுக்கு எந்த அளவிற்கு தேவைப்பாடு கொண்டதாக உள்ளது .. ?
* அந்த நிறுவனத்தின் அல்லது பொருளின் எதிர்கால வளர்ச்சி எப்படி உள்ளது . ?
* நிறுவனத்தின் பலம் மற்றும் பலவீனம் என்ன மற்ற போட்டி நிறுவனங்கள் எதுவும் உள்ளனவா . ?
* நிறுவனத்தின் வருமானம் எப்படி உள்ளது . எதிர் காலத்தில் வருமானம் எப்படி இருக்கும் .?
* நிறுவனத்தின் பாலன்ஸ் சீட்( வரவு செலவு கணக்கு பற்றிய குறிப்பேடு ) எப்படி உள்ளது .?
*பங்கு சம்பாத்தியம் (EPS ) எவ்வளவு .? பங்குகள் சந்தையில் எந்த விலையில் வணிகமாகின்றன . ?

இனி விபரங்கள் @

நிறுவனத்தின் துறை என்ன , நிறுவனம் தயாரிக்கும் பொருளின் தரம் மற்றும் விலைகள் மக்களுக்கு சரியான விதத்தில் உள்ளனவா , எந்த அளவிற்கு தேவைப்பாடு கொண்டதாக உள்ளது . எதிர் காலத்தில் சம்பந்தப்பட்ட நிறுவன பொருளின் தேவைப்பாடு அதிகரிக்குமா அல்லது குறையுமா அல்லது தேவை இல்லாமல் போக வாய்ப்பு உள்ளதா .

சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு போட்டி நிறுவனங்கள் பொருள் தயாரிப்பில் குறைவான விலைக்கு விற்பனை செய்து மார்க்கெட்" ஐ பிடிக்க வாய்ப்பு உள்ளனவா என்ற அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் ..

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பாலன்ஸ் சீட் எப்படி உள்ளது என பார்க்க வேண்டும் .???

பான்லன்ஸ் சீட் இல் நிறுவனத்தின் அனைத்து வரவு செலவு மற்றும் இருப்பு ,கடன் ,சொத்து மதிப்பு ,போக்குவரத்து முதலியன போன்ற அனைத்து இருக்கும் . இது ஒவ்வொரு காலாண்டுக்கும் நிறுவனத்தினரால் வெளியிடப்படும் .

இது செய்தித்தாள் மற்றும் வலைத்தளங்களில் வெளிவரும்.. நிறுவனத்திற்கு கடன் இருக்கலாம் ஆனால் அளவுக்கு அதிகமாக இருக்க கூடாது நிறுவனத்தின் சொத்து மதிப்பு அதிகமா இருந்தால் நல்லது . நமக்கு பங்கின் புத்தக மதிப்பு உயரும் ( BV .BOOK VALUE ) ..

மேலும் நிறுவனத்தின் எதிர் கால வியாபார விரிவாக்கம் மற்ற புதிய வியாபார ஒப்பந்த விபரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் . மேலும் பங்குகள் தற்போதைய சந்தை விலையை பார்க்க வேண்டும் .

அதில் (EPS . EARNING PER SAHRE ) போல எத்தனை மடங்கில் வணிகம் ஆகின்றன என்று பார்க்க வேண்டும். அதிக EPS கொண்ட பங்கினை முதலீட்டுக்கு ஏற்று கொள்ளலாம் ...

( உதா ; பங்கின் முகமதிப்பு - 10 , EPS - 2 . 50 - என்றால் முக மதிப்பில் 25 % லாபம் தரக்கூடிய பங்கு என்று தேர்வு செய்யலாம் .

PE RATIO ; PRICE RATIO ---
****************************
முன்பு கூறியது போல " EPS " வைத்து லாபத்தினை பார்த்து கணக்கிட்டு முதலீடு அது என்ன " PE " RATIO .. ??

PE என்பது ஒரு பங்கு அதன் ஆண்டு சம்பாத்தியத்தை போல எத்தனை மடங்கு அதிகமாக சந்தையில் வணிகமகின்றன என்று பார்ப்பது தான் " PE RATIO " இந்த முறை படி" PE " குறைவான பங்குகளை வாங்கலாம் . ஆனால் " PE " மட்டும் பார்த்து முடிவுக்கு வரக்கூடாது .. " EPS " இம் பார்க்க வேண்டும் . ( முன்பு கூறிய எல்லாவற்றையும் மனதில் கொண்டு ) ..

BOOK VALUE ; புத்தக மதிப்பு ----
***********************************
ஒரு நிறுவனத்தின் மொத்த சொத்து , கையிருப்பு , வர வேண்டிய தொகை , மற்றும் கடன் எல்லாம் வைத்து மொத்த பங்குகளினால் வகுத்தால் வருவது தான் புத்தக மதிப்பு . அதன் அடிப்படையில் பார்த்து முதலீடு செய்யலாம் .. புத்தக மதிப்பு அதிகமாக இருக்க வேண்டும் ..

நிறுவனத்தின் லாபம் அதிகரித்தால் காலாண்டு அல்லது ஆண்டுக்கு நிறுவனம் முதலீட்டளர்களுக்கு (அதாங்க உங்களுக்கு ) ஈவுத்தொகை மற்றும் போனஸ் வழங்க வாய்ப்பு உள்ளது . மேலும் அதிக லாபம் வர அந்த நிறுவனத்தினர் சொத்து மதிப்பு உயரும் உயர்ந்தால் புத்தக மதிப்பு உயரும் .. ஆக இதை வைத்தும் முதலீடு செய்யலாம் .

மேலும் நிறுவனம் தனது விரிவாக்க நடவடிக்கைகளுக்காக முதலீடு தேவைப்பட்டால் தனது பங்கு தாரர்களுக்கு மட்டும் உரிமை பங்குகள் வழங்கும் சந்தை விலையை காட்டிலும் குறைவாக வழங்கும் .

இவை தான் பண்ட மண்டல் அனலிஸ் என்பது பார்த்து தகவல் அறிந்து சந்தையில் முதலீடு செய்து லாபம் ஈட்ட வாழ்த்துக்கள் ,

நன்றி

அன்புடன்
ரமேஷ் ...

( மேலும் சில விசயங்கள் வியாபார முறைகள் , வியாபார நுணுக்கங்கள் பற்றி விழிப்புணர்வு இடுகை என்ற பெயரில் எனது வலை தளத்தில் தொடர்ச்சியாக இடம் பெரும் .. படித்து உங்களின் சந்தை திறனை பெருக்கி கொள்ளுங்கள் )

நன்றி !!!

கமாடிட்டி எனும் வணிக சந்தை !!!

கமாடிட்டி வணிகமும் பங்கு வணிகத்தினை போல ஒரு ஊகவணிகமே . ஆனால் பங்குகளாவது காரணமில்லாமல் தடால் என விழாது . ஆனால் கமாடிட்டி சந்தையில் பொருட்களின் வரத்து மற்றும் அதிக தயாரிப்பு தரம் குறைவு ஆகியவற்றால் உடனுக்குடன் அதிகப்படியான ஏற்றமும் இறக்கமும் சந்தையில் உருவாக்கப்பட்டு பின்னர் பழைய நிலையையே கூட கொண்டு வருவார்கள் ..

இதில் ஈடுபட கமாடிட்டி டிரேடிங் அக்கௌன்ட் ஓபன் செய்ய வேண்டும் . (பங்கு வணிகத்தில் ஈடுபட அக்கௌன்ட் ஓபன் செய்வது போன்றே இதற்க்கு பான் கார்டு , வீட்டு முகவரி சான்று , வங்கி கணக்கு சான்று , ஆகியவை தேவை .)பின்னர் வணிகத்தில் ஈடுபடலாம் .

இதில் நாம் தேசிய பங்கு சந்தையில் பியுச்சர் வணிகத்தில் எப்படி வணிகம் செய்கிறோமோ அதே போல தான் "மார்ஜின் " தொகையை மட்டும் செலுத்தி கமாடிட்டி சந்தையில் வணிகமாகும் எந்த ஒரு பொருளையும் நாம் வணிகம் செய்யலாம் . அதே போல எந்த மாத ஒப்பந்தத்தின் அடிப்படையில் பொருள் தேவையோ அந்த மாதத்தில் வாங்கலாம் விற்கலாம் .

மற்ற படி எந்த கட்டு படும் இல்லை . சந்தையில் விலை ஏற்றம் மற்றும் இறக்கம் நம்முடையது .அதற்க்கு உண்டான லாப நஷ்டம் நம்முடையது ..

நாம் எந்த மாத ஒப்பந்தத்தின் அடிப்படையில் பொருள் வாங்குகிறோமோ அந்த மாதம் முடிவு தினம் வரை வைத்து கொள்ளலாம் ( ?) இந்த கேள்விக் குறிக்கு விட கீழே .......

கமாடிட்டி வணிகத்தில் ஒப்பந்த முடிவு தேதிக்கு முன்னர் குறிப்பிட்ட சில பொருட்களுக்கு மட்டும் கட்டாய டெலிவரி எடுக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கிறது .. மேலும் அதன் மார்ஜின் தொகையை அதிகப்படுத்துவர்கள் .

( உதா ; தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றை வியாபாரம் செய்யும் பொழுது யாருக்கு டெலிவரி தர வேண்டும் .. என்ற கணக்கிற்காக இந்த முறை கடை பிடிக்க படுகிறது .)

ஏன் எனில் கடைசி வர்த்தக தினத்தன்று உள்ள பொசிசனை வைத்து தான் சந்தையில் யார் யாருக்கு டெலிவரி யார் யார் விற்பனை செய்யவார்கள் என்ற கணக்கு தெரியும் . ஆதலால் இந்த கட்டு பாடு ..

சரி நண்பர்களே !!!
சந்தை வியாபார முறை மற்றும் எப்படி உள்ளே வருவது போன்ற விபரங்களை பார்த்தோம் .. இனி இதில் உள்ள வியாபார நுணுக்கங்களை மற்றும் சிக்கல்களை பார்ப்போம் ..

கமாடிட்டி சந்தையில் " 200 " க்கு அதிகமான பொருட்கள் வர்த்தகம் ஆகின்றன . நாம் அதிகம் உபயோகப்படுத்தும் பல பொருட்கள் வணிகத்தில் உள்ளன . நாம் கடைகளில் பார்க்கிறோமே அதுபோல தான் பொருள் வரத்து அதிகரித்தால் எப்படி விலை சரியுமோ அது போல தான் இங்கும் . ஆனால் சந்தையில் சரியும் விலையை விட அதிகமா சரியும் அதேபோல பொருள் வரத்து குறையும் போதும் கடைகளை விட அதிகமாக ஏறும் . இந்த இரு நிலைகளையும் மாற்றி கூட செய்வார்கள் .. பொருள் கடைகளில் குறையும் பொழுது சந்தையில் செயற்கையாக விலையை அதிகப்படுத்துவர்கள் . அதே போல கடையில் பொருள் விலை அதிகரிக்கும் பொழுது சந்தையில் செயற்கையாக பொருள் விலை இறங்கும் .. இதுவும் நாம் பங்கு சந்தையில் கூறுவது போல ஆபரேடர் கைங்கர்யம் தான் ....

நண்பர்களே கவனமிருக்கட்டும் !!!
நாம் செய்வது பியுச்சர் வணிகம் எதிர் காலத்தை கணக்கில் கொண்டு வணிகம் செய்கிறோம் . ( பின்னாளில் பொருள் சந்தை வரத்து குறைந்தால் அல்லது அதிகரித்தல் ) . ஆதலால் கவனம் அதிகம் தேவை .
மேலும் சந்தையில் வணிகமாகும் தங்கம், வெள்ளி , காப்பர் , அலுமினியம் ,கச்சா என்னை போன்ற முக்கியமான பொருட்களும் வணிகம் ஆகின்றன இந்த பொருட்கள் எல்லாம் உலக சந்தையில் வணிகமாகும் விலையின் அடிப்படையில் இங்கு வணிகம் ஆகின்றன . ( உதா ; கச்சா என்னை , தங்கம் , வெள்ளி , போன்றவை அமெரிக்காசந்தையில் வணிகமாகும் விலையின் அடிப்படையில் தான் இங்கு வணிகமாகும் . அதே போல காப்பர் மற்றும் மெட்டல் சம்பந்தமான பொருட்கள் விலை லண்டன் மற்றும் சீன சந்தை விலைகளை பொறுத்து வணிகமகும் .

ஆகவே நமது கவனம் உலக சந்தைகளை பார்த்தபடியே இருக்க வேண்டும் ..அதுவும் கமாடிட்டி சந்தைகளை ஒவ்வொரு சந்தையின் துவக்க நேரம் தெரிந்து கொண்டு தவறாது கண்காணிக்க வேண்டும் . அப்படி கவனத்துடன் வணிகம் செய்தல் தான் கமாடிட்டி சந்தையில் லாபத்தினை ஈட்ட முடியும் ..

நமது சந்தைகளில் அதிக ஏற்ற இறக்கத்தினை தடுக்க சர்க்யுட் பில்ட்டர் உள்ளது போல கமாடிட்டி சந்தையிலும் சர்க்யுட் பில்ட்டர் உள்ளது ஆனால் நமது சந்தையில் வணிகம் நிறுத்தப்படுவது போல அங்கு வணிகம் நிறுத்த மாட்டார்கள் தொடர்ச்சியாக சர்க்யுட் பில்ட்டர் அதிகப்படுத்துவர்கள் . அதற்க்கு 15 நிமிடம் சம்பந்தப்பட்ட பொருள் வணிகம் ஆகாமல் நிறுத்தப்படும் பின்னர் தொடர்ந்து வணிகம் ஆகும் ..

நன்றி நண்பர்களே தங்கள் மேலான கருத்துக்களை அனுப்பவும் @

அன்புடன்
ரமேஷ் @

பியுச்சர் அண்ட் ஆப்சன்

வணக்கம் நண்பர்களே !!!

பங்கு சந்தை பற்றி நண்பர்கள் பலருக்கு உதவும் நோக்கில் தான் எழுத ஆரம்பித்தேன் .. பின்னர் சற்று ஒரு படி மேலே சென்று நண்பர் களின் வேண்டுகோளுக்கிணங்க அனைத்து பகுதிகளையும் எழுத முடிவெடுத்து எழுதி வருகிறேன் ..

பங்கு சந்தையில் வியாபாரம் நடைபெறும் முறைகள் அவற்றில் சில கீழே

EQUITY - CASH மார்க்கெட் ....
********************************
இது தினசரி வணிகர்களுக்கு ஏற்றது . இன்றே வாங்கி இன்றே விற்ப்பது . அல்லது முழு தொகையினை செலுத்தி பங்குகளை தங்கள்
டீமேட் கணக்கில் வைத்து கொள்ளலாம் .

TRADE FOR TRADE ( BE )
******************************
இது சந்தையில் அதிகம் வணிகம் ஆகாத பங்குகள் இருக்கும் பிரிவு .. இதில் தினசரி வணிகம் நடக்காது .. ஆதலால் வாங்கியவர் விற்கலாம் . அல்லது புதிதாக வாங்குபவர் வாங்கலாம் . ஆனால் அன்றே வாங்கி விற்க முடியாது .

FUTURE ( பியுச்சர் மார்க்கெட் )
***********************************
EQ பங்குகள் தனித்து இருக்கும் தேவைக்கு ஏற்ப வாங்கலாம் .ஆனால் இந்த முறையில் பங்குகளை " LOT " எனப்படும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் வாங்க முடியும . இந்த முறையில் வாங்க குறிப்பிட்ட மார்ஜின் தொகை அக்கௌண்டில் இருந்தால் போதும் .

இது தவிர சந்தையில் ஏற்ற இறக்கங்களுக்கு நாமே பொறுப்பு இறங்கினால் பணம் செலுத்த வேண்டும் .. ஏறினால் அவர்கள் நமது அக்கௌண்டுக்கு பணத்தினை வரவு வைப்பார்கள் . இந்த முறையில் வாங்கினால் " EQ " பங்குகளுக்கு கிடைக்கும் ஈவுத்தொகை மற்றும் போனஸ் மற்றும் உரிமை பங்குகள் கிடைக்காது ..

ஒரு லாட் எனப்படுவது குறிப்பிட்ட எண்ணிக்கையின் அடிப்படை தான் .. அது பங்குகளுக்கு பங்கு மாறுபடும் . ஒவ்வொரு கடைசி வியாழன் அன்று இந்த வணிகம் முடிவுக்கு வரும் . அவ்வாறு குறிப்பிட்ட முடிவு தேதி அறிவிக்கப்பட்ட
மூன்று மாத ஒப்பந்தம் சந்தையில் வணிகமாகும் .

நமக்கு எந்த மாத ஒப்பந்தம் தேவையோ அந்த மாத ஒப்பந்தத்தினை வாங்கலாம் அல்லது விற்கலாம் . முடிவு தினத்தன்று நாம் சந்தையில் வாங்கிய அல்லது விற்ற பங்கினை வங்கியோ அல்லது விற்ப்பனை செய்தோ நிலையை சரி செய்து விட வேண்டும் .இந்த முறையில் லாபம் மற்றும் நஷ்டத்தின் அளவு மிகவும் அதிகமாகவே இருக்கும் ..

இவ்வாறு சந்தையில் நிப்டி இன்டக்ஸ் மற்றும் சில பங்குகளை வணிகம் செய்யலாம் . இங்கு நடைபெறும் வியாபாரம் " SPOT MARKET " விலையை பொறுத்து வணிகம் நடக்கும் . " SPOT MARKET " விலையை விட சற்று அதிகமாக அல்லது குறைவாக வாங்குபவர் விற்பவர்களின் ஆர்வத்தினை பொறுத்து வணிகமாகும் ..

ஆப்சன் ------ ( OPTION ) ..

இது பியுச்சர் முறை போலவே தான் .. பியுச்சர் முறையில் குறிப்பிட்ட ஒப்பந்த அடிப்படையில் மார்ஜின் செலுத்தி வாங்க வேண்டும் . ஆனால் இம்முறையில் " LOT " அளவு அதே தான் . ஆனால் அந்த ஒப்பந்தத்தினை போலவே இதில் இந்த தொகை வந்தால் பங்கினை வங்கி கொள்கிறேன் என ஒரு ஒப்பந்த முறை இருக்கும் அதில் விற்ப்பவர்கள் இருப்பார்கள் . அவர்கள் கூறும் பிரிமியத்தை மட்டும் செலுத்தி ஒப்பந்தத்தினை வாங்கலாம் .

( உதா ; இன்போசிஸ் " 100 " பங்கினை EQ வாங்கினால் தொகை அங்கு 100 * 1300 = 13000 , அதே இன்போசிஸ் " 1 LOT " பியுச்சரில் வாங்கினால்
130000 * 25 % = 35000 , ஆப்சனில் 100 *10 TO 15 என இருக்கும் 1000 TO 1500 செலுத்தி வாங்கலாம், இந்த முறையில் லாபம் அளவில்லாதது . நஷ்டம் இந்த ( நாம் செலுத்தும் ) தொகை மட்டுமே ..

உதாரணத்திற்கு நாம் ஒரு பங்கு விலை இறங்கும் என கணித்தால் அதன் புட் ஆப்சனை வாங்கலாம் அதன் விலைகள் மேலே செல்லும் என கணித்தால் கால் ஆப்சனை வாங்க வேண்டும் . அவ்வாறு தேர்வு செய்தால் சந்தையில் " SPOT "இல் வணிகமாகும் விலைகளுக்கு நிகராக பியுச்சர் சந்தையில் வணிகமாகும் பங்குகள் மட்டும் தேர்வு செய்ய வேண்டும் .

அவ்வாறு வணிகமாகும் பொழுது பங்குகளின் தற்போதைய விலையில் இருந்து சற்று குறைந்து சற்று அதிகரித்து விலைகளில் ஆப்சன் வணிகமாகும் . அதை வாங்கி நாமும் வியாபாரம் செய்யலாம் .. அதற்க்கு நாம் சிறு தொகை செலுத்தினால் போதுமானது .. இந்த முறையில் நஷ்டத்தின் அளவு ஒரே அளவு தான் நாம் செலுத்து தொகை மட்டுமே . லாபம் எல்லை இல்லாத அளவு வரும் ..

நான் முன்பு கூறியது போல பங்குகளின் விலை அதிகரித்தால் கால் ஆப்சன் விலை அதிகரிக்கும் பங்குகளின் விலை குறைந்தால் புட் ஆப்சன் விலை அதிகரிக்கும் .. இதற்கும் பியுச்சர் முறை போலவே முடிவு தேதி அதே தான் ..
ஆனால் இம் முறைக்கு சற்று அனுபவம் அதிகம் தேவை ..

நன்றி நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை எதிபார்க்கும்

ரமேஷ் ....

டெக்னிகல் அனலிஸ் ஒரு அலசல்

டெக்னிகல் அனலிஸ் இன் தொடர்ச்சி -----------

* உயரும் போக்கு ;-----

இந்த நிலையில் சந்தையில் நம் கையில் இல்லாத பங்குகளை வாங்கலாம் . ஆனால் சரியாக கணித்து வாங்க வேண்டும் . ( உதா ; முந்தய நாட்களின் குறைந்த பட்ச விலைகளுக்கு கீழே போகாமல் இருக்கும் . மற்றும் அதிக பட்ச விலைகளுக்கு மேலே செல்லும் .. அது தான் உயரும் போக்கு ..

* வீழும் போக்கு ; ------------
இந்த நிலையில் சந்தையில் கையில் இருக்கும் ( அ) இல்லாத பங்குகளை விற்று வைக்கலாம் . ( உதா ; - இந்நிலையில் பங்குகள் முந்தய உயரங்களை தாண்ட கூடாது .. முந்தய குறைந்த பட்ச விலைகளுக்கு கீழ் வணிகமாக வேண்டும் .. )

* பக்க வாட்டு நகர்வுகள் ; ----
இந்நிலையில் சந்தைகளும் பங்குகளும் முன்பு கூறியது போல முந்தய நாட்களின் அதிக பட்ச விலைகளுக்கும் குறைந்த பட்ச விலைகளுக்கும் இடையே வர்த்தகம் நடக்கும் . இது சந்தையில் பெரியதொரு சரிவை அல்லது உயரத்தை கொண்டு வரும் .

இந்த இடைப்பட்ட பக்க வாட்டு நகர்வுகள் சில நாட்கள் ஏன் சில மாதங்கள் கூட நடக்கலாம் .. அது தெரியாமல் உள்ளே சென்று மாட்டி கொள்ள கூடாது . டெக்னிகல் அனலிஸ் தெரிந்தவர்கள் மட்டும் இம்முறையில் களமிறங்கலாம் ..
இதை தொடர்ந்து டிரென்ட் லைன் வைத்து விலை கோடுகளை பார்த்து வணிகத்தினை மேற்க்கொள்ளலாம் .

அவ்வாறு வணிகம் நடக்கும் பொழுது பங்குகள் மற்றும் சந்தையில் அதனை ஆதரிக்கும் நிலைகளும் எதிர்க்கும் நிலைகளும் இருக்கும் ..

அவை" SUPPORT " மற்றும் " RESISTANCE " ஆகும் ..
*********************************************************
SUPPORT -------- ஆதரவு -----
***********************************
இறங்கி கொண்டே போகும் வீழும் போக்கில் கிடைக்கும் ஆதரவு ..

RESISTANCE -------- எதிர்ப்பு ---------
*************************************
ஏறிக்கொண்டே செல்லும் போகும் உயரும் போக்கில் வரும் எதிர்ப்பு

SUPPORT - - - - ஆதரவு ------
*****************************
ஒரு பங்கு தொடர்ச்சியாக சரிந்து வருகிறது .. அந்த பங்குகளின் நிலை என்ன என்பதற்கு இந்த ஆதரவு நிலையை தான் டெக்னிகல் அனலிஸ்டுகள் கண்டு பிடிப்பார்கள் .. இந்த விலை வரை வரலாம் என கணித்து கூறுவார்கள் . பின்னர் அதற்க்கு கீழ் அதற்க்கு கீழ் என பல ஆதரவு நிலைகள் தோன்றும் .. ஆனால் எல்லா நிலைகளுக்கு கீழ் சென்று கொண்டே இருக்காது .

RESISTANCE ------ எதிர்ப்பு ---------
************************************
ஒரு பங்கு தொடர்ச்சியாக ஏறிக்கொண்டே செல்கிறது .. இது எதுவரை செல்லும் மற்றும் நாம் வங்கி வைத்துள்ள பங்கினை எங்கு விற்கலாம் என தெரியாத பொழுது முன்பு அதரவு நிலைகளுக்கு சொன்னது போல எதிர்ப்பு நிலைகளை அனலிஸ்டுகள் கூறுவார்கள் .. எதிர் நிலைகளை வைத்து இதற்க்கு மேல் சென்றால் இதுவரை செல்லலாம் என கணித்து கூறுவார்கள் .. ஆனால் அதற்க்காக கையில் வைத்துக் கொண்டே இருக்க கூடாது .. லாபத்தினை உறுதி செய்ய வேண்டும் ..

AVERAGE ----------- ஆவரேஜ் ---------
***************************************
ஒரு பங்கு சந்தையில் வாங்குகிறீர்கள் .அடுத்த நாள் அந்த பங்கின் விலை முந்தய விலையை விட குறைகிறது அதற்க்கு அடுத்தநாளும் குறைகிறது .. அந்த நிலையில் பங்கின் போக்கினை பார்த்து சிறிதளவு பங்குகளை நீங்கள் வாங்கலாம் . இப்பொழுது பங்கின் விலை சற்று குறைந்து வாங்கப்பட்டது பழைய பங்கின் விலை உடன் ஆவரேஜ் ஆகி விலை பாதிக்கு மேல் குறைந்து இருக்கும் இம்முறை தான் அவரேஜ் செய்வது எனப்படுவது ..

இதை போல டெக்னிகல் அனலிஸ் இல் பங்குகளின் ஆவரேஜ் என ஒன்று உண்டு பங்குகள் சந்தையில் ஒரு நாளில் ஆகும் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த ஆவரேஜ் எடுத்து கொள்ளப்படுகிறது ..

இதில் மூன்று வகைகள் உண்டு .. அவை
*******************************************
* சிம்பிள் மூவிங் ஆவரேஜ்
* வெயிட்டேஜ் மூவிங் ஆவரேஜ்
* எக்ஸ்போனன்சியல் மூவிங் ஆவரேஜ்

இதில் சிம்பிள் மூவிங் ஆவரேஜ் மட்டும் நாம் ஆவரேஜ் செய்ய எடுத்து கொள்ளும் முறை தான் .. ஆனால் பிற இரு முறைகளும் சில பார்முலாக்கள் படி கணக்கிட படுகிறது . பின்னாளில் இதைப் பற்றி பார்ப்போம் ..( ரொம்ப எழுதினால் வலை தளத்தின் சன்னலை மூட்டிட்டு போய் விடுவீர்கள் )

BOLINGER BOND --------------
முன்பு கூறியது போல சார்ட் இல் வரைந்த விலை கோடுகளின் உடன் மற்றொரு முறையை பயன்படுத்தி இன்னும் சில கோடுகளை வரைந்து கணக்கிடும் முறை இதைப்பற்றியும் பின்னாளில் ..
(ஆனால் தனி இடுகை "யாக )

மார்க்கெட் மொமண்டம் -----------
இதை வைத்து சந்தை மற்றும் பங்குகளின் விலை அதிகரிக்குமா இறங்குமா ? என்ன விகிதத்தில் என தெரிந்து கொள்ளலாம் ..

RSI------
ஒரு பங்கின் விலை எப்போது அதிகரிக்கும் எப்போது இறங்கும் என கணக்கிடும் முறை தான் ஆர் எஸ் ஐ ( என்ன சார் இது வரைக்கும் எத்தனையோ வழியை கூறி விட்டு திரும்ப அதே விசியத்தை கூறி ???? போங்க சார் ) ...

RSI - ---
ஆர் எஸ் ஐ என்பது ஒரு குறியீடு ஆகும் .. இதற்க்கு தனிப்பட்ட பார்முலாக்கள் உள்ளன ..
அந்த கணக்கில் ஆர் எஸ் ஐ 70 என்ற அளவை விலைக் கோடுகள் தொட்டால் பங்குகள் அதிகமாக வாங்கப்பட்டுள்ளது என புரிந்து கொள்ள வேண்டும் . அதிகம் வாங்கப்பட்டால் என்ன ஆகும் பங்குகள் விலை கீழிறங்கும் . .அதை பயன் படுத்திக் கொண்டு விற்று விட்டு வெளியே வரலாம் ..

இதே போல ஆர் எஸ் ஐ 30 என்ற அளவை விலை கோடுகள் தொட்டால் பங்குகள் அதிகம் விற்பனை ஆகி உள்ளன என்று புரிந்து கொண்டு அங்கு பங்கினை வாங்க வேண்டும் .. பங்கினை எங்கு வாங்க வேண்டும் எங்கு விற்க வேண்டும் என்ற எளிமையான முறை தான் ஆர் எஸ் ஐ ..

எல்லா வலைத்தளங்களிலும் விலைக்கு கீழே ஆர் எஸ் ஐ இன் இணைப்பு வரும் .
கணக்கு படி இது கணக்கிட ஒரு பார்முலா உள்ளது ஆனால் இன்றைய
வலை தளங்கள் வர்த்தகத்திற்கு உதவும் வகை யில்
எல்லா பார்முலாக்களையும் எளிமையாக புரோகிராம் செய்து சார்ட் உடன் சந்தை சம்பந்தமான அனைத்து சேவைகளும் இலவசமாக அளிக்கின்றன ....

இவை போல சந்தையில் வர்த்தகம் செய்ய இன்னும் பல டெக்னிகல் அனலிஸ் விதங்கள் உள்ளன .ஆனால் இவை எல்லா வற்றையும் வைத்து தான் வணிகம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை . சில முறைகளை பின்பற்றி சரியாக வணிகம் செய்தால் சந்தையில் லாபம் பெறலாம் ...

நன்றி

அன்புடன்
ரமேஷ்

பங்கு சந்தை ஒரு அலசல் 1

வணக்கம் நண்பர்களே !!!

பங்கு சந்தை ஒரு அலசல் தொடர்ச்சி ------

பங்கு பிரிப்பு
**************
சந்தையில் தொடர்ந்து விலை அதிகரித்து கொண்டே செல்லும் பங்குகளை மக்கள் விலை அதிகம் என வியாபாரம் செய்ய மாட்டார்கள். இந்நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வியாபாரம் அதிகமாக ஆகாத பட்சத்தில் பங்குகளின் முக மதிப்பை பிரிப்பார்கள். உதாரணம் : விலை 2500 இந்த அளவில் இருக்கும் போதுபங்கு பிரிப்பார்கள் . அவை முக மதிப்பில் 2 : 5, 1: 10, 5 : 2, ஆகிய முறைகளில் பிரிப்பர் . பங்கு பிரிப்பிற்கு பிறகு பங்குகளின் விலைகள் முறையே 500 , 250, 1250 என வந்து விடும். அனைவருக்கும் வியாபாரம் , செய்ய வசதியாக இருக்கும்.

வியாபார வகைகள் ----------
**********************
தினசரி வணிகம் -----
*******************
பங்கு சந்தையில் காலை 9 : 55 க்கு தொடங்கியதும் பின்பு இடையில் எந்த நேரத்திலும் வாங்கலாம் , விற்கலாம் . ஆனால் மாலை 3 : 30 க்குள் அனைத்து பங்குகளின் கணக்கை சரி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யா விட்டால் வாங்கி இருந்தால் உங்கள் கணக்கிற்கு டெலிவரி ஆகி விடும். அந்த பங்கிற்கு உண்டான முழு தொகையும் மறுதினம் சம்பந்தப்பட்ட தரகு அலுவலகத்திற்கு காசோலை வழங்க வேண்டும். விற்று இருந்தால் ஆக்சன் சந்தைக்கு சென்று வாங்கி விடுவார்கள். நமக்கு நஷ்டம் ஆனாலும்...

SHORT SELLING ----
*******************
இது சற்று ஆபத்தானது. பங்கு சந்தையில் பங்கு வியாபாரம் சுணக்கமாக உள்ள சூழ்நிலையில் தவறான தகவல்கள் மற்றும் சந்தையை பாதிக்கும் காரணிகளால் சந்தை இறங்கும். அல்லது பங்குகளின் விலை சரியும் என்ற ஊகத்தில் கையில் பங்குகள் இல்லாமலேயே பங்குகளை விற்று வைப்பது . அதிக விலையில் விற்று வைத்து பின்பு இறங்கி வரும் போது வாங்கி விட வேண்டும். லாபம் கிடைக்கும். அதே சமயம் மாலை 3 : 30 க்குள் லாப நஷ்டம் எது ஆனாலும், என்ன விலை ஆனாலும் வாங்கி கணக்கை சரி செய்ய தவறினால் அடுத்த நாள் "SHORT FALL " ஆகி விடும்.

பின்னர் அதற்கு அடுத்த நாள் எக்ஸ்சேஞ்சில் ஆக்சன் மார்கெட்டில் என்ன விலைக்கு விற்பவர் இருக்கிறாரோ அந்த விலைக்கு வாங்கி கணக்கை சரி செய்யும் . இதில் வரும் லாப நஷ்டம் அல்லாமல் எக்ஸ்சேஞ் அபராத தொகை விதிக்கும். இதை தங்கள் கணக்கில் இருந்து எடுத்து கொள்வார்கள். சமயத்தில் குறைவாக அபராதம் விதிக்கலாம். அல்லது இது போல இனி நடக்க கூடாது என அதிகமாகவும் அபராதம் விதிக்க வாய்ப்பு உண்டு. இது முழுவதும் எக்ஸ்சேஞ்சின் செயல்பாடு மட்டும் தான் .

டெலிவரி செல்லிங் -------
**********************
இந்த முறை மிகவும் சிறப்பானது . பங்குகளை வாங்கி உண்டான தொகையினை செலுத்தி பங்குகளை கணக்கில் வைத்து கொள்ளலாம். பங்குகளின் விலை அதிகமாகும் போது விற்று லாபம் அடையலாம்.

சந்தையை பாதிக்கும் காரணிகள் ------
************************************
* உலக நாடுகளில் நிகழும் அசம்பாவிதங்கள்.
* உலக நாடுகளின் பங்கு சந்தைகளின் போக்கு
* உள்நாட்டு அசம்பாவிதங்கள் மற்றும் அது சம்பந்தமான வதந்திகள்
* நிலையற்ற அரசியல் மற்றும் அரசியல் பிரச்சினைகள்
* ரிசர்வ் வங்கி பற்றிய அறிவிப்புகள்
* இன்பிலேசன் அதிகமாகுதல்
* ஜி டி பி மற்றும் ஐ ஐ பி டேட்டா சரியில்லாமல் போதல்.
* கச்சா என்னை விலை ஏற்றம்
* அந்நிய முதலீட்டாளர்கள் மற்றும் பரஸ்பர நிதியகங்கள் திடீரென பங்குகளை விற்பது .
* முக்கிய நிறுவனங்களின் காலாண்டு அறிக்கைகள் சரியில்லாமல் போதல்.

இதை தவிர பங்கு வர்த்தகத்தில் ஏழு விதமான வியாபாரிகள் உள்ளனர்.
*******************************************************************************
அவர்கள்,
************
* INVESTOR - இவர்கள் நிறுவனத்தின் மதிப்பறிந்து முதலீடு மட்டும் செய்வர்.
விற்பனை செய்வதை சில காலம் என்ன மாட்டார்.
* TRADER - இவர் தொழிலே இது தான். இன்று வாங்கி இன்றே விற்று லாபத்தை எடுத்து கொள்வார்.
* SPECULATOR - இவர் எல்லோரையும் (பங்கு வர்த்தகத்தில் ) ஏமாற்றுபவர். சம்பந்தம் இல்லாமல் பங்குகளின் விலைகளை வேகமாக ஏற்றுவதும் இறக்குவதும் தான் இவர்களது வேலை.இதில் தான் இவர்களுக்கு ஆதாயம். இவர்களால் சந்தை வேகமாக சரியும் மற்றும் ஏறும் வாய்ப்புகள் இருக்கும்.
* OPERATORS - இவர்கள் சில நிறுவன பங்குகளை மட்டும் வியாபாரம் செய்வர். அதிக ஏற்ற இறக்கங்களை சில பங்குகளில் மட்டும் எந்த வித செய்தியும் இல்லாமல் உண்டாக்குவார்.

இவர்கள் தவிர ,

QNI - QUALIFIED NETWORTH INDIVIDUAL INVESTOR
HNI - HIGH NETWORTH INDIVIDUAL INVESTOR
FII - FOREIGN INSTITUTIONAL INVESTOR

இவர்கள் அனைவரும் சந்தையில் அதிக ஏற்ற இரக்கத்தை கொண்டு வருவார்கள். காரணம் இவர்கள் தனிப்பட்ட முறையில் அதிக தொகையை சந்தைக்குள் கொண்டு வந்து வியாபாரம் செய்வார்கள்.

பரஸ்பர நிதியகங்கள் ------
************************
இதற்கு முன் கூறியது போல் எல்லாம் வணிகம் செய்தால் ரிஸ்க் அதிகம் என்று கருதினால் பரஸ்பர நிதியகங்களில் முதலீடு செய்யலாம். பரஸ்பர நிதியகங்கள் என்பது ஒரு பெரிய நிறுவனத்தால் நிர்வகிக்கபடுகிறது. அந்த நிறுவனங்கள் புழக்கத்தில் பரஸ்பர நிறுவனங்கள் ஆரம்பித்து மக்களிடம் பத்து ரூபாய் முக மதிப்பில் முதலீடு செய்ய சொல்வர். அதில் ஆரம்ப மற்றும் முடிவு தேதிகளை அறிவிப்பார்கள்.

மக்கள் முதலீடு செய்யும் தொகையை " FUND MANAGER " என்பவர் பங்கு சார்ந்த வியாபர திட்டங்களில் முதலீடு செய்து வரும் லாபத்தை தனது பங்கு தாரர்களுக்கு பிரித்து கொடுப்பார். அந்த லாப தொகையை பொறுத்து பரஸ்பர நிதியகங்களின் யூனிட் விலை ஏறும். அதன் விவரங்களை செய்தி தாள்கள் மூலமாகவும் வலை தளங்கள் மூலமாகவும் தினசரி பார்க்கலாம்.


முதலீட்டளர்களுக்கு கிடைக்கும் பயன்கள் ??
***********************************************
ஈவு தொகை -----
*************************
பங்குகள் முன்பு சொன்னது போல நிறுவனங்கள் முகமதிப்பில் வழங்குகின்றன. நாம் முதலீடு செய்யும் ஒவ்வொரு பத்து ரூபாய்க்கும் ஈவு தொகை கிடைக்கும். அந்த ஈவு தொகை முக மதிப்பில் எத்தனை மடங்கு என்பதை நிறுவனம் தான் முடிவு செய்யவேண்டும். நிறுவனங்களின் நிகர லாபத்தில் இருந்து குறிப்பிட்ட அளவு ஈவு தொகைகள் கிடைக்கும். அவற்றை மொத்த பங்குகளால் வகுத்து வழங்குவர்.
இலவச பங்குகள் (போனஸ்)
********************************
நிறுவனத்திற்கு அதிகபடியான லாபம் கிடைத்தால் இலவச பங்குகள் வழங்குவர். ஆனால் அந்த நிறுவனம் குறிப்பிடும் தேதியில் உங்களது டீமாட் கணக்கில் உங்கள் தேவைக்கேற்ப பங்குகள் இருக்க வேண்டும். அந்த பங்குகளின் எண்ணிக்கையின் மடங்கில் இலவச பங்குகள் வழங்கப்படும். (உதாரணம் : 1 : 1, 1:5 , 10 : 1, 5 : 2, 10 : 2......) ஆனால் இலவச பங்குகள் வழங்கியதும் பங்குகள் விலை பாதியாக குறைந்துவிடும்.
உரிமை பங்குகள் (RIGHT'S ISSUE)
************************************
உரிமை பங்குகள் என்பது ஏற்கனவே பங்கு வெளியிட்ட நிறுவனங்கள் அதன் விரிவாக்க நடவடிக்கைக்காக தன் பங்கு தாரர்களுக்கு மட்டும் சந்தை விலையை விட குறைந்தா விலையில் பங்குகள் வழங்கும். இதற்கும் இலவச பங்குகளுக்கு கூறியதை போல வைத்துள்ள பங்குகளுக்கு ஏற்ப வழங்குவார்கள்.

நன்றி !!!

பதிவு
முடிந்தது அடுத்த நல்ல பதிவில் பார்க்கலாம் .....

பங்கு சந்தை ஒரு அலசல்

வணக்கம் நண்பர்களே !!!

பங்கு சந்தை என்றால் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது -- பங்கு சந்தை பற்றி தெரிந்தவர்களுக்கு ஹர்சர் மேத்தா - தெரியாதவர்களுக்கு இது ஒரு சூதாட்டம் -- இப்படி தான் நம் மக்கள் தவறாக எல்லாவற்றையும் புரிந்து கொள்வது போல இதையும் புரிந்து வைத்துள்ளனர் . ஆனால் அப்படி அல்ல பங்கு சந்தை என்பது ஒரு ஊகவணிகம் . ஊக வணிகம் என்றால் தகவல் மற்றும் செய்திகள் அடிப்படையிலான வணிகம் ஆகும் . சந்தை மற்றும் அதன் அனைத்து விபரங்களையும் கீழே வரிசையாக பார்க்கலாம் .

முதலில் பங்குகள் என்றால் என்ன ?
**************************************

எந்த ஒரு தனியார் நிறுவனமும் தனது விரிவாக்க பணிகளுக்காக தேவைப்படும் தொகையினை மக்களிடம் பெற்று அதை கொண்டு தனது விரிவாக்க பணிகளை செய்யலாம் . அந்நிலையில் மக்களுக்கு அவர்களின் முதலீட்டுக்கு உண்டான அளவுக்கு பங்குகள் வழங்கப்படும் . இந்த பங்கு வெளியீடுக்கு அந்த நிறுவனங்கள் முறையான நிர்வாகம் மற்றும் வரவு செலவுகள் பிற செயல்பாடுகளையும் குறித்து செபிக்கு விண்ணப்பிக்க வேண்டும்..

அந்த விபரங்களை பரிசீலித்து செபி அவர்களுக்கு பங்கு வெளியீட்டுக்கு அனுமதி வழங்கும் . அந்த பங்குகள் எல்லாம் முகமதிப்பின் அடிப்படையில் வழங்கப்படும் . அவை நிறுவனத்தின் மொத்த மதிப்பில் இருந்து (இருப்பு ,சொத்து , கடன் , இதர இருப்புகள் ஆகியவற்றை கொண்டு) மொத்த மதிப்பில் இருந்து 10 ரூபாய் மதிப்பிற்கு கணக்கிட்டு பங்குகளை முகமதிப்பில் வெளியிடுவார்கள் . வெளியீட்டுக்கு பிறகு அந்த நிறுவனக்கள் பப்ளிக் லிமிடெட் நிறுவனமாக மாற்றப்படும் .

IPO ( INITIAL PUPLIC OFFER )---
***********************************
புதிய பங்கு வெளியீட்டில் இறங்கும் நிறுவனங்கள் செபி அமைப்பில் முறையான அனுமதி பெற்று பின்பு நேசனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ் , மற்றும் மும்பை ஸ்டாக் எக்ஸ்சஞ் ஆகிய எக்ஸ்செஞ்ச்களில் அறிவிப்பு செய்து பின்னர் பங்கு வெளியீட்டு விண்ணப்பங்களை மக்களுக்கு வழங்கும் அதன் விண்ணப்ப படிவங்கள் அனைத்து ஸ்டாக் புரோக்கர் மற்றும் வங்கிகளிலும் கிடைக்கும் .

அதற்க்கு குறிப்பிட்ட நாளில் விண்ணப்பிக்க வேண்டும் என்ற முடிவு தேதியும் அறிவிப்பார்கள் . விலைகள் விண்ணப்ப படிவத்தில் இருக்கும் பங்குகளின் முகமதிப்பு 10 - ஆனால் விலை சந்தையில் அதன் தொடர்புடைய நிறுவனங்களின் விலைகளை வைத்து( பிரிமியம் ) இருக்கும் . ஆனால் 10 ரூபாய்க்கு கிடைக்காது . நாம் முதலீடு செய்வது என முடிவு செய்ததும் விண்ணப்ப படிவத்தில் நமது விபரங்களை தந்து முதலீட்டு தொகைக்கான காசோலை அல்லது வங்கி டிமாண்டு டிராப்ட் தர வேண்டும் . வரப்பெற்ற மொத்த விண்ணப்பங்களையும் கொண்டு அனைவருக்கும் வழங்குவார்கள் . விண்ணப்பங்கள் அதிகமாக இருந்தால் பிரித்து வழங்குவார்கள் .

ஸ்டாக் எக்ஸ்சேஞ் ---
***************************
நமது நாட்டில் இரண்டு பங்கு சந்தைகள் நல்லமுறையில் இயங்கி வருகின்றன . இவற்றில் தினமும் பங்குகள் வாங்கி விற்று வர்த்தகம் நடை பெரும் இதற்க்கு இரண்டாம் தர சந்தை என அழைக்க படுகிறது . இவற்றில் பங்குகளை வாங்குபவர் மற்றும் விற்பவர் இடையே நடை பெரும் பரிமாற்றத்தை மட்டும் பங்கு சந்தைகள் செய்து தருகின்றன . அதனால் எக்ஸ்சேஞ் களுக்கு பரிமாற்ற கமிசன் மற்றும் நிறுவனக்கள் செலுத்தும் ஆண்டு சந்தா கிடைக்கிறது . அரசாங்கத்திற்கு வரி கிடைக்கிறது .

செபிக்கு பங்குகள் அனுமதியின் பொழுது செலுத்தும் கட்டணம் மற்றும் விதிமுறை மீறுபவர்கள் செலுத்தும் அபராதங்கள் செபிக்கு கிடைக்கிறது .

பங்குகள் அந்தந்த நிறுவனங்கள் முறைப்படி குறிப்பிட்ட அளவிலான பங்குகளை லிஸ்ட் செய்து இருப்பார்கள் அதற்க்கு எக்ஸ்சேஞ் இக்கு குறிப்பிட்ட தொகையினை செலுத்த வேண்டும் . இதற்க்கு முன்னர் கூறிய ஐ பி ஒ என்பது முதல் தர சந்தை , இது இரண்டாம் தர சந்தை புரிகிறதா நண்பர்களே . இது போல முதல் தர சந்தையில் வெளியிடப்பட்ட பங்குகள் முதல் நாளில் மட்டும் லிஸ்டிங் என்ற பெயரில் வணிகம் செய்யப்படும் . அடுத்த நாள் முதல் தொடர்ச்சியாக வர்த்தகம் சந்தையில் அந்த பங்குகளின் மீது மேற்க்கொள்ளப்படும் .

பங்கு சந்தையில் எப்படி வியாபாரத்தை ஆரம்பிப்பது ???
***********************************************************

பங்கு சந்தையில் வியாபாரம் செய்ய முதலில் சந்தை பற்றிய சிறிதளவாவது அனுபவம் தேவை . பின்னர் வருமான வரி அட்டை மற்றும் உங்களது முகவரி சான்று பாஸ்போர்ட் போட்டோ ஆகியவற்றை தந்து டிமாட் கணக்கினை உங்கள் பகுதியில் உள்ள ஸ்டாக் ஆபீஸ் இல் துவங்க வேண்டும் பின்னர் வணிகத்தில் ஈடுபடலாம் . அந்த கணக்கில் தொகையினை செலுத்தி பங்குகள் வாங்க விற்க பயன் படுத்தலாம் . கணக்கினை சம்பந்தப்பட்ட நிறுவனம் பார்த்து கொள்ளும் . கணக்கின் விபரங்களை தினமும் மின் அஞ்சல் முறையில் உங்களுக்கு வழங்கும் .

முறையீடு ----
*****************
மேற்குறிப்பிட்ட தங்களது கணக்கில் கோளாறுகள் ஏதேனும் ஏற்ப்பட்டால் நீங்கள் பங்கு சந்தையில் அதற்கென நியமிக்கப்பட்ட நபர்களிடம் மின் அஞ்சல் மற்றும் கடிதம் வாயிலாக முறையிடலாம் . சந்தைகள் பற்றி குறைபாடு என்றால் செபியில் முறையிடலாம் .

நன்றி !!!

அடுத்த பதிவில் மிச்சம் உள்ளதை கூறியுள்ளேன் ..

தொடர அடுத்த பதிவினை ---

என்னை பற்றி !!!

வணக்கம் நண்பர்களே !!!!

என்னை பற்றி .....

உண்மையாக சொன்னால் நான் ஒரு அவசர குடுக்கை (இப்படி ஆரம்பிப்பது தான் சரி )..........

எனது பெயர் பாமரன் வயது 28 தான் கடந்த ஆறுவருடங்களாக பங்கு சந்தையில் வியாபாரம் செய்து வருகிறேன் .. இந்த ஆறு வருடங்களில் எனது அனுபவம் என்ன என்று பார்த்தால் ...

நான் பங்கு சந்தையில் நுழைந்த போது இன்று உள்ளது போல் அதிக விஷயம் தெரிந்த ஆட்கள் இல்லை மற்றும் சரியான வழிகாட்டுதலும் இல்லை .. எனது ஓரிரு நண்பர்கள் பங்கு வணிகம் செய்து வந்தனர் .. அவர்களிடம் சந்தை பற்றி சில விஷயங்கள் மட்டும் கேட்டு அறிந்தேன் ..பின்னர் அனேக விஷயங்கள் புத்தகம் வாயிலாகவும் மற்றும் வலை தளங்கள் உதவியுடனும் தேடி தேடி அறிந்தேன் ..

ஆனால் அதற்குள் சின்ன சின்ன இடைவெளியில் சந்தைகள் என்னை ஆசை பட .. நானும் நம்பி உள்ளே வந்தேன் ..

வந்தவுடன் @@@@@@@@@@@@@@@@@@

தினசரி பங்கு வணிகம் , கமாடிட்டி வணிகம் , புட் மற்றும் கால் ஆப்சன் மற்றும் பியுச்சர் வணிகம் என எல்லாம் செய்து அனுபவம் தான் பெற முடிந்தது .. பல லட்சங்கள் இழந்தது தான் மிச்சம் .. பின்னர் ஒரு நாள் அதிக பட்ச இழப்பாக பல லட்சங்களில் இழந்து விட்டு யோசித்த பொழுது தான் பங்கு சந்தையில் நிதானம் பொறுமை இரண்டும் மிக அவசியம் ..

இவை இரண்டும் எனக்கு இருந்தது ஆனால் அதிகமா தேவை என்பது இழப்புக்கு பின்னால் தான் தெரிந்தது .. அதைவிட முக்கியம் தன்னம்பிக்கை .. சந்தைகள் எப்போதும் இருக்கும் ஆனால் நாம் சந்தையில் இருக்க வேண்டும் ...

சந்தை
என்பது கடல் போல கரையில் இருந்து பார்த்தால் சாதாரணமாக தான் இருக்கும் . கடல் அலை போல வந்து தங்கள் காதுகளில் சில விபரங்களை கூறி உள்ளே வர செய்யும் .............................

( மச்சான் உள்ளே போனாலே பணத்தை அள்ளிடலாம் .. சாக்கு பை தான் வேண்டும் ) உள்ளே இறங்கினால் தான் சில அல்ல பல விசயங்கள்
தெரியும் ..

நானும் ஒரு வருடம் ஆனதும் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல அலங்காரத்துடன் காலரை தூக்கிக்கொண்டேன் .. உள்ளே வேகமாக சென்று கொண்டு இருந்தேன் .. அப்பொழுது தன் தெரிந்தது வண்டியில் பிரேக் இல்லை முட்டி மோதி விழுந்து .. எழுந்து நின்றேன் ..

(நின்றேன் என்பது ஒரு வார்த்தை எழுந்து நிற்க என்பது நஷ்டத்தை வைத்து அல்ல சந்தையில் ஏற்பட்ட அடிகளை வைத்து ) பல இழப்புகளை சந்தித்தேன் ..

பின்னர் பல விசயங்களை எனது அறிவுக்கு அப்பாற்பட்டு தேட ஆரம்பித்தேன் ...

இழப்பு ஒன்று தான் மனிதனை பல விசயங்களில் சீர்படுத்தி ஒழுங்கு படுத்தும் ..

அது போல எனது இழப்புகள் என்னை சரி வர ஒழுங்கு படுத்தியது .

பின்னர் என் போல பலர் உள்ள நமது தமிழ் மண்ணில் தமிழிலேயே சந்தை பற்றி எழுதினால் அவர்களுக்கு ஒரு வழிகாட்டுதலாக இருக்குமே என்று தோன்றியது

எழுத ஆரம்பித்து ................................. எழுதினேன் ..................................

முடிந்த வரை எழுதிக்கொண்டே இருப்பேன் ....

உங்கள் ஆதரவுடன்
அன்புடன்
பாமரன்

சனி, 21 மார்ச், 2009

புதிய முதலீட்டு அறிமுகம்

புதிய முதலீட்டு அறிமுகம் !!!!

நிப்டி பீஸ் (nifty bees )...

நீண்ட கால முதலீட்டாளர்களுக்கும் , குறுகிய கால முதலீட்டாளர்களுக்கும் மற்றும் பரஸ்பர நிதியகங்களில் (mutual fund ) . சிறிய தொகையினை கொண்டு முதலீடு செய்ய முடியாமல் இருப்பவர்களுக்கும் ( mutual fund 's குறைந்தபட்ச முதலீடு 5000/- ) ஏற்ற EQ பங்கு இது ..

EQ பங்கு போலவே நிப்டி பீஸ் யையும் வாங்கி உங்களது .. " D MATE " கணக்கில் வைத்து கொள்ளலாம் ..
கால வரையறை எதுவும் கிடையாது ..
விலை ஏறும் போது விற்று லாபம் பார்க்கலாம் ..
இதுவும் மற்றபங்குகள் போலவே ஈவு தொகை ( DIVIDEND ) போனஸ் (BONUS ) யும் உண்டு ... முக மதிப்பு 10 அதன் அடிப்படையில் தான் ஈவு தொகை வழங்குவார்கள் ...

சந்தையில் நிப்டி பீஸ் வியாபாரம் ஆவது , S& P CNX NIFTY என்ற இன்டெக்ஸ் அடிப்படையில் தான் . ஆகவே இன்டெக்ஸ் மேல்முகமாக இருக்கும் போது விற்று லாபம் பார்க்கலாம் ...

கீழே வரும் போது வாங்கலாம் ..மேலும் இன்டெக்ஸ் 'இன் பாயிண்ட் யை 10 ஆல் வகுத்தால் வருவது தான் நிப்டி பீஸ் 'இன் விலை (cmp ).

சந்தையின் ஏற்ற தாழ்வுகளுக்கு ஏற்ப (ஏறு முகம் மற்றும் இறங்கு முகம் ) பிரிமியத்தில் இருக்கும் இல்லையெனில் அதே விலையில் வணிகமாகும் ..

சந்தையில் நிப்டி பீஸ் போலவே மற்ற பீஸ் களும் உள்ளன .. அவை கோல்ட் பீஸ் , ஜுனியர் பீஸ் , பேங்க் பீஸ் , psu பேங்க் பீஸ் , ஆகும் ..ஆனால் நிப்டி பீஸ் உங்கள் முதலீட்டுக்கு மிகவும் ஏற்றது ..

மற்ற பீஸ்" இல் உங்களுக்கு விருப்பம் இருந்தால் முதலீடு செய்யலாம் ...

நன்றி .!!!

விழிப்புணர்வு இடுகை


விழிப்புணர்வு இடுகை !!!
நாளுக்கு நாள் சரிவடைந்து வரும் சந்தைகள் மற்றும்பங்குகளின் விலைகள் எங்கே சென்று நிற்கும் எனநிர்ணயிக்க முடியாத சூழல் தற்சமயம் உள்ளது .நமது பங்குசந்தைகளின் தற்போதைய நிலை இது தான் .....

ஏன் ... ??????

சந்தையில் ஒரு காலத்தில் "1000" க்கு மேல் வணிகம்ஆனபங்குகள் இன்று "100 " க்கு கீழ் வணிகம் நடந்துகொண்டுள்ளது . இது இத்துடன் நின்று மேலே வருமா ( அ)இன்னும் கீழே போகுமா என்ற அச்சம் பெரும்பாலானமுதலீட்டாளர்களிடம் தற்சமயம் எழும் பெரிய கேள்வியாகஉள்ளது ..

இந்த நிலை ஏன் ... ??

அந்நிய முதலீட்டாளர்கள் பலர் நமது நாட்டில் 2003 ஆம்வருடத்தில் இருந்து தான் அதிகப்படியாக வந்தனர் . நமதுநாட்டின் பொருளாதார வளர்ச்சி, எதிர் கால வளர்ச்சி,சிறப்பான அரசியல் சூழ்நிலைகள் , மற்றும் நடவடிக்கைகள்ஆகியவற்றை கருத்தில் கொண்டு நமதுசந்தைகளில்வர்த்தகத்தை துவங்கினார்கள் ...

அவர்கள் வந்து வர்த்தகம் தொடங்கியதும் ( இயல்பாகவேவாங்கும் சக்தி அவர்களிடம் அதிகம் ) சாதாரண பங்குகள்விலையை ( இப்பொழுது தான் புரிகிறது ; உதா - HDILபங்கின் அதிக பட்ச விலை 1431 குறைந்த பட்ச விலை 62.50மட்டுமே ) ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு விலையைஉயர்த்தி அது சம்பதமான செய்திகளை மிகை படுத்திபங்குகளின் விலையை பல மடங்கு உயர்த்தப்பட்டது .

மக்களும் வாங்கினார்கள் .??

அந்தநிலையில் வந்த செய்திகள்அப்படி .. நமது மக்களும் விற்று லாபத்தினை உறுதி செய்யவில்லை . இது எப்படி சாத்தியம் என்றால் நமது அரசாங்கம்பங்கு சந்தைகளின் எதிர் கால வளர்ச்சியை கருத்தில்வைத்தும் , ஒட்டு மொத்த இந்தியாவின் வளர்ச்சியையும்கருத்தில் கொண்டு சில கட்டுப்பாடுகளை தளர்த்தி சிலஅந்நிய முதலீட்டாளர்களை சந்தைக்குள் அனுமதித்தது ..அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க சில சலுகைகளும்வழங்கப்பட்டன .. ஆனால்தற்போதைய சூழலில் பங்குசந்தை அவர்களது கைப்பாவை ஆகி விட்டது ..

அவர்கள்அதிக அளவில் லாபம் கருதி விற்பனை என்ற பெயரில்சந்தையில் அதிக ஏற்ற இறக்கங்களை உருவாக்குகின்றனர்.சந்தை அதை தங்க முடியாமல் சிறிது எழுவதும் அதிகம்வீழ்வதும் என உள்ளது .

மேலும் அதிக பொருளாதாரம்உள்ள தனி நபர் (HNI )மற்றும் பரஸ்பர நிதி நிறுவனங்கள்நீண்ட கால முதலீட்டாளர்கள் ஆகியவர்கள் இருந்துசந்தையின் சரிவின் வேகத்தை குறைக்க்க முடிந்ததே தவிரநிறுத்த முடியவில்லை ..அந்த அளவிற்கு அந்நியமுதலீட்டாளர்களின் கையில் சந்தை உள்ளது .......

@@ இடுகை ஒன்று முடிந்தது ... இடுகை இரண்டைபார்க்கவும் @@

அடமான பங்குகள்

அடமான பங்குகள் !!!

இப்போது சந்தையிலும் மற்ற இடங்களிலும் பரபரப்பாக பேசப்படும் விஷயம் இது தான் பங்குகள் அடமானம் ..

பங்குகள் அடமானம் என்றால் என்ன ?

சில நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தை நடத்த முடியாமல் (அ) செலவுகளை சமாளிக்க முடியாமல் போகும் சமயத்தில் சில மெர்சன்ட் வங்கிகளிடம் ( மெர்சன்ட் வங்கிகள் என்பது பங்குகளில் முதலீடு மற்றும் வணிகம் மேற்கொள்ளும் நிறுவனங்கள் . இது அந்தந்த வங்கிகளின் சம்பந்தமான தனி பிரிவு . உதா ; இந்தியன் வங்கி , ஐ சி ஐ சி ஐ வங்கி , பஞ்சாப் நேசனல் வங்கி , பேங்க் ஆப்இந்தியா , மற்றும் பல வங்கிகள் உள்ளன .) சில நிறுவனங்கள் பண தேவைக்காக தங்களிடம் உள்ள பிரமோட்டார் பங்குகளில் குறிப்பிட்ட அளவு (அ ) தேவைக்கு ஏற்ப பங்குகளை அடமானம் வைத்து பணம் வாங்கி செலவு செய்து பிரச்சனைகளை சரி செய்யும் . இதுவே பங்குகள் அடமானம் எனப்படுவது .

நிறுவனம் சரிவர பிரச்சனைகளை முடித்து சரி செய்து லாபம் வந்ததும் பங்குகளை திருப்பி கொள்ளும் ..ஆனால் நிலைகளை சமாளிக்க முடியாமலும் (அ ) சந்தையில் அந்த பங்குகளின் விலை திடீரென சரிந்தாலோ சம்பந்தப்பட்ட வங்கி நிறுவனங்கள் அந்த நிறுவனத்தின் பங்குகளை லாப நோக்கு அல்லாமல் சந்தை விலையில் விற்று விடும் சந்தை சரிவில் இருந்தாலும் கூட

தற்சமயம் செபிஅறிவிப்பில் இது போல அடமானம் வைக்கும் நிறுவனங்கள் எவ்வளவு பங்குகள் என்ற விவரங்களை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது .அந்த உத்தரவு மெர்சன்ட் வங்கி நிறுவனங்களுக்கும் பொருந்தும் .

செபி ஏன் இப்பொழுது இதை செயல்படுத்துகிறது என்றால் சத்யம் நிறுவன பங்குகள் இது போல தான் ( அடமான பங்குகளை) மெர்சன்ட் வங்கி நிறுவனங்கள்சரிவில் அந்த நிறுவன பங்குகளை விற்று விட்டது என்று செய்தி உள்ளது .

சமீபமாக அடமானம் வைக்கப்பட்ட பங்குகள் சில ...ஆனால் எண்ணிக்கை இல்லை ..TATA POWER , JSW STEEL , DR REDDY'S LAB ,NET WORK 18 ,UTV SOFTWARE , ABAN OFF SHORE ,ASIAN PAINT , MIND TREE. மற்றும் பலஇது தங்களின் தகவலுக்காக மட்டுமே .

 இதை வைத்து இந்த பங்குகள் சரியில்லை என எந்த முடிவும் எடுக்க வேண்டாம் ..

நன்றி !!!