திங்கள், 1 ஜூன், 2009

வெள்ளியன்று முடிவடைந்த அமெரிக்கா சந்தைகள் சிறிது உற்சாகத்துடன் 1%வரை அதிகரித்து முடிந்தன . அங்கு சந்தைகளுக்கு ஆதரவான செய்திகள் எதுவும் இல்லை . அதனால் சந்தைகள் கிட்டத்தட்ட ஒரு மாதமாக 8000 - 8500 புள்ளிகளில் வர்தகமாகி வருகிறது .

இன்றைய ஆசியசந்தைகள் துவக்கம் சற்று மகிழ்ச்சிகரமானதாக உள்ளது . ஆசிய சந்தைகள் 1 % அளவிற்கு உயர்ந்துள்ளன . ஆசிய சந்தைகள் எந்த வித சரிவுமின்றி செல்வது குறிப்பிட தக்கது .

நமது சந்தைகள் இன்றைய துவக்கம் 1 % வரை அதிகரித்து துவங்க வாய்ப்பு உள்ளது . மேலும் கடந்த வாரத்தில் வந்த ஜி டி பி மற்றும் இன்பிலேசன் அறிவிப்புகள் சந்தையில் எந்த வித பாதகத்தினையும் ஏற்ப்படுத்த வாய்ப்புகள் இல்லை என்றே கருதுகிறேன் .

ஆனாலும் நமது சந்தைகள் பாராளுமன்ற தேர்தல் முடிவு அறிவிப்பிற்கு பின்னர் உயர்ந்த உயர்வுகளை வைத்து பார்க்கும் பொழுது சந்தைகள் சிறிய சரிவினையாவது தந்து விட்டு மேலே சென்று இருக்கலாம் . அதே போல திரும்ப திரும்ப மேலே சென்று கொண்டுள்ளது

கடந்த வாரம் மட்டும் நமது சந்தைகள் கிட்டத்தட்ட 5 % வரை உயர்ந்துள்ளது .கடந்த இரு வாரங்களில் உலக சந்தைகள் உயர்வு சாதரணமாக உள்ளது ஆனால் நமது சந்தைகளும் சீன சந்தைகளும் அதிக பட்ச உயர்வுகளை எட்டி உள்ளன . இது வரை அமெரிக்கா சந்தைகளை பின் தொடர்ந்த நமது சந்தைகள் இப்பொழுது முழுவதும் சீன சந்தைகளை பின் தொடர்கின்றன .

மேலும் இன்றைய ஜெனரல் மோட்டார் நிறுவனத்தின் திவால் அறிவிப்புகள் சந்தைகளில் எவ்வித ஏற்ப்படுத்தும் என்பது சற்று கணிக்க முடியாத விசயமாக உள்ளது .

எதற்கும் கவனமாக இருங்கள் லாங் நிலைகள் தவிர்க்கவும்

நன்றி !!!