நமது சந்தைகளை உலக சந்தைகளுடன் ஒப்பிடும் அளவிற்கு தரம் தாழ்ந்து விட்டதா !!! என உங்கள் ஆதங்க குரல் கேட்கிறது கோபப் படாதீர்கள் ???
நண்பர்களே !!!
கடந்த 2008 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் ஏற்ப்பட்ட பொருளாதார பிரச்சனைகளால் உலகமே ஸ்தம்பித்தது . அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது . உலகம் முழுவது எந்த விசயமாக பேசினாலும் இந்த வார்த்தைகளை தான் கேட்க முடிந்தது .
நாட்டின் பொருளாதார பிரச்சனைகள் என பார்க்கும் பொழுது முதலில் பாதிக்கப்படுவது பங்கு சந்தைகள் தான் . 2008 இல் ஏற்ப்பட்ட பொருளாதார பாதிப்பில் உலக சந்தைகள் எல்லாம் வலுவிழந்து பாதாளத்தை நோக்கி சரிந்தன . முதலீட்டாளர்கள் அனைவரும் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர் . நமது சந்தைகள் இதற்க்கு விதி விலக்கல்ல --
கடந்த அக்டோபர் மாதம் உலக சந்தைகள் பலவும் அதிக பட்ச இழப்புகளை சந்தித்தது அதுவும் இது வரை இல்லாத விலைகளில் பங்குகளும் குறியீடுகளும் வர்த்தகம் ஆகின .
கீழே உள்ள அட்டவணையை காணவும் ---------
இன்டெக்ஸ் -- குறைந்த விலை -- தற்போதைய விலை - உயர்வு % இல்
****************************************************************************
டவ் ஜோன்ஸ் - 6440 --- 8763 ----- 32 %
நாஸ்டாக் - 1265 --- 1834 ----- 35 %
கனடா cac - 2465 --- 3318 ----- 34 %
லண்டன் ftse - 3460 --- 4386 ----- 26 %
ஜெர்மனி dax - 3588 --- 5077 ----- 41 %
சிங்கபூர் straits - 1455 --- 2396 ----- 62 %
ஜப்பான் nikkie- 6995 --- 9768 ----- 40 %
சீனா hang seng -10676 --- 18679 ---- 76 %
கொரியாkospi- 940 ---- 1398 ---- 46 %
நிபிட்டி - 2252 ---- 4587 ---- 104 %
சென்செக்ஸ் - 7697 ---- 15103 --- 96 %
********************************************************************************
மேலே உள்ளதை பார்த்தும் நமது சந்தைகள் எப்படி எந்த நிலைகளில் வர்த்தகம் ஆகின்றன என்பதை புரிந்து கொண்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன் . உலக சந்தைகள் அனைத்தும் 30 % to 40 % வரையிலான உயர்வுகளை மட்டும் அடைந்துள்ள . நமது சந்தைகள் மட்டும் எந்த வித சரியான காரணங்களும் இல்லாமல் 100 % வரையிலான வளர்ச்சியை அடைந்து உள்ளன . அதுவும் கிட்டத்தட்ட 9 மாதங்களில் ............
நமது சந்தைகளின் இந்த வளர்ச்சி உலக சந்தைகளின் போக்கினை வைத்து பார்த்தால் திடீர் வளர்ச்சி தான் . இந்த வளர்ச்சி நிற்காது என்றே கருதுகிறேன் . உலக பொருளாதாரம் இன்னும் சிக்கலாகும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள் .
இவற்றை வைத்து பார்க்கும் பொழுது நமது சந்தைகளில் உயர்வினை வைத்து பார்த்தால் வரும் மாதங்களில் சந்தைகளில் சரிவுகள் பெரிதாக வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது .
அடுத்த காலாண்டுகளில் பொருளாதார பிரச்சனைகள் பெரிதாக வரும் பொழுது நமது சந்தைகளில் வாங்குபவர்கள் இருப்பார்கள் என்பதே சந்தேகம் தான் ..
பதிவை படித்து முடித்து விட்டு சிந்தித்து செயல் படுங்கள் எனது கருத்தை மட்டும் நான் எழுதி உள்ளேன் ..
தகவலுக்காக எனது மின் அஞ்சலில் உங்களது சந்தேகத்தினை எனக்கு மின் அஞ்சல் செய்யுங்கள் .
நன்றி !!!
உலக சந்தைகளின் கணக்கு அளித்த http://finance.yahoo.com/ தளத்திற்கு எனது நன்றி ...