வெள்ளி, 5 ஜூன், 2009

நேற்றைய சந்தைகளில் நிப்டி இன் ஆபரேட்டிங் நன்றாக தெரிந்தது என்றே கூறலாம் . நமது சந்தைகள் துவக்கம் 30 புள்ளிகள் சரிவில் துவங்கின பின்னர் சந்தைகள் உடனடியாக சரிவினை சந்தித்தது பின்னர் நன்றாக சந்தைகள் உயரத் துவங்கின .

ஆசிய சந்தைகள் நேற்றைய சந்தைகளில் குழப்பமான சூழலில் தங்களது வர்த்தகத்தினை முடித்துக்கொண்டன . ஆசிய சந்தைகள் அனைத்தும் 0.5 % வரை சரிவில் முடிந்தது . ஆசிய சந்தைகள் முடிவில் நமது சந்தைகள் 1 % அளவிற்கு உயர்ந்து வர்த்தகம் ஆனது பின்னர் நமது சந்தைகள் அதே நிலைகளில் வர்த்தகத்தினை முடித்து கொண்டன .

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் பிளாட் நிலைகளில் துவங்கி பின்னர் பிளாட் நிலைகளில் முடித்து கொண்டன அங்கு எதுவும் உற்சாக அறிவிப்புகள் இல்லாததே இந்த நிலைக்கு காரணம் . நுட்ப காரணிகளை வைத்து பார்க்கும் பொழுது அமெரிக்கா சந்தைகளின் வளர்ச்சி இன்னும் சில காலண்டுகளுக்கு பெரிதாக உயர வாய்ப்புகள் இல்லை என்று கருதப்படுகிறது .

இன்றைய ஆசிய சந்தைகள் நேற்றைய சந்தைகள் போலவே பிளாட் நிலைகளில் துவங்கி உள்ளன . நமது சந்தைகளும் அதே போல பிளாட் நிலைகளில் துவங்கவே வாய்ப்புகள் உள்ளன .

நமது சந்தைகள் இன்றைய சந்தைகளில் அனேக ஷார்ட் பொசிசன் உள்ளவர்களை சந்தைகளில் இருந்து வெளியேற்ற ஆபரேட்டர்கள் முனைவார்கள் ஆகவே சந்தைகளில் தற்காலிக உயர்வுகளுக்கு வாய்ப்பு உள்ளது சந்தைகள் 4620 நிலைகள் வரை செல்லலாம் . அதையும் தாண்டி செல்லும் பட்சத்தில் சந்தைகள் 4654 - 4682 வரை செல்ல அதிக வாய்ப்புகள் அதிகம் உள்ளன .

குறிப்பாக மேற்குறிப்பிட்ட நிலைகள் வர்த்கமானதாக காட்டப்படும் சூழ்நிலைகளும் உள்ளன . அந்த நிலைகள் சந்தைகள் நின்று வர்த்தகம் ஆகுமா என்றும் இன்றைய சூழலில் கூற இயலவில்லை . ஏனென்றால் சந்தைகள் இப்போதைய சூழலில் அதிகம் வாங்கப்பட்ட இடமாக நுட்ப காரணிகளை கூறுகின்றன (over bought zone ). கவனமாக இருங்கள் ..

நன்றி !!!