ஞாயிறு, 14 ஜூன், 2009

வெள்ளியன்று நமது சந்தைகள் வார இறுதி மற்றும் ஐ ஐ பி அறிவிப்புகள் ஆகியவற்றிற்காக சந்தைகள் சற்று துவக்கம் அதிகரித்து இருந்தாலும் வர்த்தகம் சற்று ஒரே நிலைகளில் வர்த்தகம் ஆனது ஆனால் உயர்வுகளில் .....

பின்னர் வந்த ஐ ஐ பி அறிவிப்புகள் சந்தைகளுக்கு சற்று நல்ல விஷயம் தான் ( ஐ ஐ பி + 1.4 vs - 0.71 )ஆனால் சந்தைகளில் சற்று செல்லிங் அதிகரித்து சந்தைகள் சரிய ஆரம்பித்தன .

ஆசியசந்தைகள் முடிவில் பொழுது 1 % - 1.5% வரை அதிகரித்து முடிந்தன .

வெள்ளியன்றைய அமெரிக்கா சந்தைகள் சற்று துவக்கம் முதலே .சரிவுகளில் வர்த்தகம் நடந்து வந்தன . பின்னர் சந்தைகளில் பெரியதொரு சரிவுகள் வந்தன சந்தைகள் வர்த்தக முடிவில் பிளாட் நிலைகளில் முடிந்தன .

நமது சந்தைகள் கடந்த 13 வாரங்களாக உயர்வில் முடிந்து இந்த வாரம் சந்தைகள் சரிவில் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது .மேலும் நான் முந்தய பதிவுகளில் குறிப்பிட்டது போல சந்தைகள் குறுகிய காலத்தில் அடைந்த தற்போதைய உயர்வுகள் சந்தைகளில் வரும் வாரங்களில் நிலை கொள்வது சற்று ஆச்சர்யமே !!!!

நுட்ப காரணிகளின் படி சந்தைகள் இப்போது உள்ள நிலையில் இருந்து (நிப்டி )கிட்டத்தட்ட 1000 புள்ளிகள் வரையிலான சரிவினை கண்டால் தான் சந்தைகள் ஒரு நல்ல உயர்வினை அடுத்த ஆண்டுகளில் எட்ட வாய்ப்புகள் உள்ளன . என்று கருதுகிறேன் நமது மக்கள் அனைவரின் கருத்தும் இதுவாக தன் உள்ளது என்ன நான் சரிவு அளவினை நுட்ப காரணிகளை படி சற்று அதிகப்படியாக கூறியுள்ளேன் .

அவ்வாறு வரும் வாரங்களில் நிகழும் பட்சத்தில் சந்தைகள் அதிக பட்ச உயர்வுகளாக அடுத்த மூன்று மாதங்களுக்கு 4820 -5000 ஆகிய இரு நிலைகள் மட்டும் இருக்கும் . ஆனால் குறைந்த பட்ச நிலைகள் என்று பார்க்கும் பொழுது 2900 வரையில் சந்தைகள் செல்ல வாய்ப்புகள் உள்ளன . இந்த சரிவுகள் ஜுன் மற்றும் ஜூலை மாதங்கள் இறுதிவரை நிகழலாம் .

நன்றி !@!!!