வெள்ளி, 12 ஜூன், 2009

நேற்றைய சந்தையில் நிப்டி 25 புள்ளிகள் உயர்ந்து துவங்கின . பின்னர் சந்தைகளில் சற்று செல்லிங் அதிகரித்தது. ஆசிய சந்தைகளிலும் சற்று செல்லிங் காரணமாக சந்தைகள் நகர்வுகள் சற்று குறைவாகவே இருந்தன . நமது சந்தைகளில் முன் குறிப்பிட்ட 4670 நிலைகள் தாண்டியும் சந்தைகள் வர்த்தகம் நன்றாக வலுவாக இல்லை . ஆதலால் சந்தைகள் அந்த நிலைகளுக்கு மேல் செல்லாமல் சந்தைகள் சரிந்தன .

ஆசிய சந்தைகள் உயர்வுகளிலேயே நின்று பிளாட் நிலைகளில் வர்த்தகத்தினை முடித்து கொண்டன . மதியம் துவங்கிய ஐரோப்பிய சந்தைகளும் சற்று பிளாட் நிலைகளிலேயே துவங்கின ஆதலால் சந்தைகள் அனைத்தும் சற்று சுணக்கம் கண்டன

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் துவக்கம் சற்று அபாரமாகவே இருந்தன .ஆனால் சந்தைகள் வர்த்தகத்தின் இடையில் ஒரு பெரிய உயர்வினை காட்டியது , ஆனால் சந்தைகள் முடிவில் 1/2 % மட்டும் உயர்வில் முடிந்தன .

இன்றைய ஆசிய சந்தைகள் அனைத்தும் 1 %- 1 .1/2 % வரை உயர்வில் துவங்கி உள்ளன . நமது சந்தைகளும் சற்று உயர்வில் துவங்கலாம் . ஆனால் அந்தநிலைகளில் சந்தைகளில் சற்று செல்லிங் நேற்றைய அளவினைவிட அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன .

மேலும் நமது சந்தைகளில் நேற்றைய இன்பிலேசன் அறிவிப்பு சந்தைகளுக்கு சற்று சாதகமாகவே வந்துள்ளன மற்றும் வரவுள்ள நாட்களில் ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு அறிக்கையை வெளியிடும் என எதிர் பார்க்கப்படுகிறது .

ஆகவே சந்தைகள் சற்று உயர வாய்ப்புகள் உள்ளன . ஆனாலும் நண்பர்களே நமது சந்தைகளை பொறுத்த வரை உயர்வு இலக்கு குறைவு . ஆனால் சரிவு இலக்கு அதிகம் என்பதினை கவனத்தில் கொள்ளவும்

நன்றி !!!