நேற்றைய சந்தைகளில் துவக்கம் சற்று வித்யாசமாகவே இருந்தது . சிங்கபூர் நிப்டி 109 புள்ளிகள் சரிவு ஆனால் நமது சந்தைகளோ துவக்கம் 60 புள்ளிகள் மட்டும் சரிவு .உயர்வுகளில் சிங்கபூர் நிப்டி ஐ கடை பிடிக்கும் நமது சந்தைகள் சரிவில் மட்டும் குறைவான சரிவுகளை காட்டுகிறது .
ஆனால் துவக்கம் முதலே நமது சந்தைகளில் சற்று மீட்சி தெரிந்தது . ஆசிய சந்தைகள் துவக்கத்தில் ஏற்ப்பட்ட சரிவினை திரும்ப மீள முடியாமல் மேலும் சரிந்தன .என்பது குறிப்பிட தக்கது .
நமது சந்தைகள் மதியம் முடிந்த வரை பங்குகளையும் மற்றும் இன்டெக்ஸ் ஐ யும் மேலே உயர்வுகளில் நிறுத்தி வைத்தனர் நமது ஆபரேட்டர்கள் . ஆசிய சந்தைகள் மேலும் மேலும் சரிந்தன .முடிவில் ஆசிய சந்தைகள் 2 1/2 % வரை சரிந்து முடிந்தன .
நமது சந்தைகள் நேற்று பங்குகள் மற்றும் இன்டெக்ஸ் அனைத்தும் ஏமாற்றப்பட்டு உயர்த்தப்பட்டதாக கருதுகிறேன் . சரிவில் வர்த்தகம் ஆனது பின்னர் வர்த்தகத்தில் வேக வேக மாக உயர்த்தப்பட்டது . இந்த உயர்விற்கு எந்த வித செய்திகளோ அல்லது ஊக்க அறிவிப்புகளோ சந்தைகளில் இல்லை என்பது குறிப்பிட தக்கது .
நேற்றைய அமெரிக்கா சந்தைகள் துவக்கம் முதலே சரிவில் வர்த்தகம் ஆனது . சந்தைகளில் முந்தய சரிவின் எழுச்சியாக ஒரு உயர்வு எதிர் பார்க்கப்பட்டது ஆனால் அங்கு வந்த பொருளாதார அறிவிப்பின் சரிவால் சந்தைகளிலும் சரிவுகள் அதிகரித்தது ஆதலால் சந்தைகளில் சரிவுகள் அதிகரித்து முடிவில் 1 1/2 % வரை சரிவடைந்து முடிந்தன .
இன்றைய ஆசிய சந்தைகள் குழப்பமான சூழலில் வர்த்தகத்தினை துவங்கி உள்ளன . 1 % - 1 1/2 % வரை சரிவில் துவங்கி உள்ளன .நமது சந்தைகளும் ஆசிய சந்தைகளின் போக்கினையே தொடர வாய்ப்புகள் உள்ளன .
நிப்டி நிலைகள் ---
அதரவு ---- 4520 ,4480 ,4450 .
எதிர்ப்பு ---- 4550 ,4591 , 4620 .
நன்றி !!!