புதன், 3 ஜூன், 2009

நேற்றைய சந்தைகளை வைத்து பார்த்தால் நமது சந்தைகளை ஆபரேட்டர்கள் எந்த அளவிற்கு தங்கள் கைகளில் சந்தைகளை வைத்துள்ளார்கள் என்பது புரிகிறது . இத்தனை நாளாக சீன சந்தைகளின் போக்கினை பின் தொடர்ந்த நமது சந்தைகள் நேற்றய சந்தையில் முற்றிலும் மாறுபட்டு திடீரென சற்று சரிவில் இருந்த சந்தைகள் நாளின் உயரங்களை தாண்டி வணிகம் ஆனது .

ஆசிய மற்றும் சீன சந்தைகள் முடிவில் நமது சந்தைகள் கிட்டத்தட்ட பிளாட் நிலைகளுக்கு வந்தன என்பது குறிப்பிட தக்கது . இந்த நிலைகளில் வர்த்தகம் செய்ய நமது சந்தைகளில் மக்கள் தயங்குகிறார்கள் . நமது சந்தைகள் முடிவில் உயர்வில் முடிந்தன அதுவும் உலக சந்தைகளின் வர்த்தக முறைகளுக்கு மாறாக .

நேற்றைய அமெரிக்கா சந்தைகளின் நிலைகளை பொறுத்த வரை உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தவன் கதை தான் . சந்தைகள் மேலும் உயர முடியாமலும் தடாலென வீழ முடியாமலும் திணறுகின்றன . அமெரிக்கா சந்தைகளை பொறுத்த வரை மேலும் உயர வாய்ப்புகள் இல்லை . என நிபுணர்கள் குழு கூறுகிறது .

இன்றைய ஆசிய சந்தைகள் அனைத்தும் சற்று குழப்பமான சூழலில் வர்த்தகத்தினை துவங்கி உள்ளன் . நமது சந்தைகளை பொறுத்த வரை இன்றைய சந்தையிலும் உயர்ந்து துவங்க வாய்ப்பு அதிகம் உள்ளன .

ஆசிய சந்தைகளின் தற்போதைய உயரங்கள் முன்னெப்போது இல்லாத அளவில் உயர்ந்துள்ளன . சந்தைகளில் முன்னெப்போதும் நடைமுறையில் இல்லாத நேர்மறையான விசயங்கள் இல்லாத போதும் சந்தைகள் உயர்வதும் அல்லது உயர்ந்து கொண்டே செல்வதும் சற்று ஆச்சர்யமாக உள்ளது .

நமது சந்தைகளை பொறுத்த வரை இன்றைய சந்தைகள் 4500 - 4600 நிலைகளுக்குள் வர்த்தகம் ஆகும் . இவற்றில் எந்த நிலைகள் உடை பட்டாலும் சந்தைகள் அந்த பக்கமாக செல்லலாம் .

சந்தைகளில் தற்சமயம் உள்ள சூழலை வைத்து பார்க்கும் பொழுது பட்ஜெட் அறிவிப்பிற்கு முன்னர் சந்தைகள் பெரிதாக கீழிறங்க வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது .

நன்றி !!!