புதன், 10 ஜூன், 2009

நேற்றைய சந்தைகளில் நிப்டி 4450 நிலைகளுக்கு மேல் துவங்கி பின்னர் அடுத்த எதிர் நிலைகளான 4480 - 4520 ஆகிய நிலைகளை எளிதாக கடக்க செய்தனர் . துவக்கத்தில் சந்தைகள் வேகமாக சரிந்தன . பின்னர் சந்தைகள் அதை விட வேகமாக உயர்த்தப்பட்டன .

நேற்றைய ஆசியசந்தைகள் பிளாட் ஆக முடிவடைந்தன ஆனால் சீன சந்தை மட்டும் 2 % வரை சரிவடைந்தன . ஆனால் நமது சந்தைகள் இத்தனை நாளாக பின் தொடர்ந்த சீன சந்தைகளையும் சாராமல் மற்றும் ஆசிய சந்தைகளையும் சாராமல் தனித்துவமாக உயர்ந்து கொண்டே சென்று நேற்றைய சரிவுகளை ஈடு கட்டியே தீருவது என்ற நோக்கில் சந்தைகளை உயர்த்தி கொண்டே சென்றனர் .

சந்தைகள் முடிவில் 3 % வரையிலான உயர்வுடன் 121 புள்ளிகள் அதிகரித்து முடிந்தன .

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக எந்தவித வேகமான நகர்வுகளும் இல்லாமல் சில குறிப்பிட்ட நிலைகளுக்குள் வர்த்தகம் நடந்தன . முடிவில் அமெரிக்கா சந்தைகள் பிளாட் நிலைகளில் வர்த்தகத்தினை முடித்து கொண்டன .

இன்றைய ஆசிய சந்தைகள் 1% அளவிற்கு உயர்ந்து துவங்கி உள்ளன , நமது சந்தைகளும் அதை பின்பற்றி துவங்கலாம் . 4520 நிலைகள உடைபடாத வரை சந்தைகள் அடுத்த சரிவுக்கு தயாரில்லை அதற்க்கு அடுத்து 4400 நிலைகளுக்கு கீழ் சந்தைகள் முடிவடையும் பட்சத்தில் சந்தைகளின் போக்கு சற்று மாறலாம். சந்தைகள் 4100 வரை சரிவடைய வாய்ப்புகள் உள்ளன .

மேலும் இன்றைய சந்தைகள் 4570 நிலைகளுக்கு மேல் செல்லும் பட்சத்தில் சந்தைகள் 4620 வரை செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளன .

நமது சந்தைகள் பொறுத்த வரை தற்சமயம் வலுவான நல்லதொரு காரணிகளை இல்லாமல் சந்தைகள் பட்ஜெட் அறிவிப்புகளுக்ககவே சந்தைகள் நாள் தோறும் உயர்த்தப்படுகிறது . மேலும் இந்த இடைவெளியில் அந்நிய முதலீட்டாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் நமது சந்தைகளில் ஆப்சன் பக்கமாக சென்று நமது முதலீட்டாளர்களை வீட்டுக்கு அனுபிவருகிரர்கள் .

கடந்த இரண்டு நாட்களாக சந்தைகளில் --

நேற்றைய முன் தினம் 157 புள்ளிகள் சரிவு அவர்கள் சந்தைகளில் கால் ஆப்சன் அதிகமாக வாங்கி இருந்தனர் . நேற்றைய சந்தைகள் உயர்த்தி செல்லப்பட்டு கால் ஆப்சன் - குறிப்பிட்ட அளவு விற்கப்பட்டுள்ளது . நேற்றைய சந்தைகள் உயர்வின் பொழுது அதிகமாக புட் ஆப்சன் வாங்கப்பட்டுள்ளது . இன்றைய உயர்வின் பொழுது மீதம் இருக்கும் கால் ஆப்சன் விற்கப்பட்டு பின்னர் அந்த நிலைகளில் மீண்டும் புட் ஆப்சன் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டு சந்தைகளை சரிவுக்கு கொண்டு சென்று புட் ஆப்சனை விற்று வெளியேறுகிறார்கள்

இந்த தற்போதைய வர்த்தகத்தின் நிலையை வைத்து பார்க்கும் பொழுது சந்தைகளில் தினசரி மற்றும் குறுகிய கால முதலீட்டளர்களுக்கு மட்டு சரியாக வர்த்தகம் செய்ய ஏதுவாக உள்ளது .

ஆகவே சந்தைகளில் ஆபரேட்டர்கள் மற்றும் அந்நிய முதலீட்டாளர்கள் நிமிடத்திற்க்கு நிமிடம் சந்தைகளில் தங்களது ஆப்றேட்டை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிட தக்கது .

நன்றி !!!

எல்லா செயல்களுக்கு ஒரு அர்த்தமிருக்கும் .அர்த்தமில்லாத செயல்களை செய்யும் பொழுது தான் மனிதனின் தவறுகள் வெளிப்படுகிறது ..
ரமேஷ்