சனி, 6 ஜூன், 2009

நேற்றைய சந்தைகளில் நிப்டி போக்கு சற்று முற்றிலும் மாறுபட்டு வர்த்தகம் ஆனது என்பதை யாரும் மறுக்க முடியாது . துவக்கம் ஆசிய சந்தைகளை ஒட்டி 40 புள்ளிகள் அதிகரித்து துவங்கின . ஆனால் சந்தைகளில் தொடர்ச்சியாக உயர்வுகள் வந்தன . சந்தைகள் எதிர் பார்த்த நிலைகளான " 4620 " புள்ளிகளுக்கு மேலும் சென்று 4647 நிலைகள் வரை சந்தைகள் சென்றது .

ஆனால் ஆசிய சந்தைகள் அனைத்தும் சரிவில் சென்று கொண்டு இருந்தன ஆனால் நமது சந்தைகளின் போக்கை பின்பற்றி உடன் அனைத்தும் சரிவில் இருந்து மீள துவங்கின .

ஆசிய சந்தைகள் முடிவில் நமது சந்தைகள் கலை துவங்கிய அதே நிலைகளில் வர்த்தகம் ஆனது பின்னர் நமது சந்தைகள் முடிவில் ஆசிய சந்தைகள் 1 % வரை உயர்ந்து முடிந்தன . நமது சந்தைகள் ஆசிய சந்தைகள் முடிவினை போல 14 புள்ளிகள் அதிகரித்து முடிந்தன .

வெள்ளியன்று முடிந்த அமெரிக்கா சந்தைகள் பெரிதாக எதுவும் நகர்வுகள் இல்லாமல் சந்தைகள் பிளாட் நிலைகளில் துவங்கிய பின்னர் திடீரென ஒரு பெரிய உயர்வுகள் வந்தன ஆனால் அந்த உயர்வுகளை தக்க வைக்காமல் சந்தைகள் கீழிறங்கின ..

நன்றி !!!