நேற்றைய சந்தைகளில் நிப்டி துவக்கத்தில் இருந்தே அதிக பட்ச புள்ளிகளை வர்த்தகமாகி கொண்டு இருந்தது . அதன் பின்னர் இடை வேளையின் பொழுது சந்தைகள் மிக வேகமானதொரு சரிவினை கண்டது . பின்னர் சந்தைகள் திரும்ப அதன் போக்கில் வர்த்தகம் ஆனது .
ஆசிய சந்தைகள் முடிவில் 3 % - 4 % வரை உயர்வில் முடிவடைந்தன . நமது சந்தைகள் ஆசிய சந்தைகள் முடிவில் 1 % மட்டும் உயர்ந்து இருந்தன . வர்த்தகத்தின் முடிவில் சந்தைகள் 2 % வரை உயர்ந்து முடிந்தன . நாளின் உயரங்களுக்கு அருகாமையில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது .
நேற்றைக்கு பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட ஜெனரல் மோட்டார் நிறுவனம் தனது திவால் அறிக்கையை தாக்கல் செய்தது .இருப்பினும் அரசு தொடர்ந்து ஜெனரல் மோட்டார் நிறுவனத்தை நடத்த உள்ளதாக செய்தி வெளியானது . மேலும் அரசிடம் ஜெனரல் மோட்டார் நிறுவனத்தின் பங்குகள் 60 % இருப்பது குறிப்பிட தக்கது .
மேலும் ஜெனரல் மோட்டார் நிறுவனம் தனது கடன் தொகையாக குறிப்பிட்ட தொகையானது $ 172.8 பில்லியன் ஆகும் . அரசின் எதிர் கால திட்டமாக ஜெனரல் மோட்டார் நிறுவனத்தை தொடர்ந்து நடத்த போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது . அதற்க்கு 90 நாட்கள் வரை ஆகலாம் என்றும் கூறியுள்ளது .
நமது சந்தைகள் மட்டும் தான் எதிர் மறையான செயல்களுக்கு சந்தையினை உயர்த்துமா ? எங்களுக்கும் தெரியும் என நேற்றைய அமெரிக்கா சந்தைகளும் களத்தில் இறங்கி அமெரிக்கா சந்தைகள் துவக்கம் முதலே நமது சந்தைகள் போலவே உயர்ந்து துவங்கி பின்னர் உயர்விலேயே வர்த்தகம் நடந்து கொண்டு இருந்தன .அங்கு உள்ள நிபுணர்கள் கூறும் பொழுது வரும் நாட்களில் அமெரிக்கா சந்தைகள் சரிவினை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர் .
நமது சந்தைகளை பொறுத்த வரை தொடர்ந்து உயர்வுகளே இருந்து வருகிறது . சரிவுகள் என்பது மருந்துக்கும் இல்லை . இன்றும் சற்று அதிகரித்து துவங்க வாய்ப்பு உள்ளது . நண்பர்களே இன்றைய சந்தைகளை பொறுத்த வரை நுட்ப காரணிகளை வைத்து அல்லது பண்ட மண்டலான விசயங்களை வைத்து சந்தையின் போக்கினை நிர்ணயிக்க முடியவில்லை . காரணம் சந்தைகளை தங்கள் கையில் கொண்டுள்ள பரஸ்பர நிதியகங்கள் மற்றும் அந்நிய முதலீட்டாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் என அனைவரும் வரும் நாட்களில் சந்தைகளில் பங்குகளை விற்க முடியாமல் தடுமாறலாம் என நினைக்கிறேன் (அதிக விலைகளில் - தற்போதைய விலைகளில் )
எதற்கும் கவனமாக வர்த்தகம் செய்யுங்கள் தினசரி வர்த்தகர்கள் கட்டாயம் ஸ்டாப் லாஸ் உபயோக படுத்துங்கள் . நேண்ட கால முதலீட்டாளர்கள் மற்றும் குறுகிய கால முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருங்கள் சந்தைகள் ஒரு நிலைகளில் வந்து நிற்கும் அப்பொழுது உங்கள் முதலீடுகளை ஒரே சமயத்தில் வாங்காமல் சந்தைகளின் சரிவின் பொழுது சிறிது சிரிதாத வாங்குங்கள் ..
முடிந்தவரை லாங் நிலைகளில் பொசிசன் எடுத்து வைப்பதை தவிர்க்கவும் .
நன்றி !!!