வியாழன், 18 ஜூன், 2009

நேற்றைய சந்தைகள் இருநாட்களுக்கு முன்னர் உலக சந்தைகளின் சரிவுகளை நேற்று நமது சந்தைகள் சரி செய்தன . நமது சந்தைகளின் துவக்கம் சற்று சரிவுகளின் போக்கில் துவங்கியது . சரிவு 30 புள்ளிகளாக இருந்தது .

ஆசிய சந்தைகள் முழுவதும் அமெரிக்கா பியுச்சர் சந்தைகளை பார்த்தபடி வர்த்தகம் ஆனது .ஆனால் அமெரிக்கா பியுச்சர் சந்தைகள் பெரிய அளவில் ஒரு உயர்வில் வர்த்தகம் ஆகவில்லை .ஆகவே ஆசிய சந்தைகள் பிளாட் நிலைகளில் சரிவில் வர்த்தகம் ஆனது .ஜப்பானிய சந்தை மட்டும் ஓரளவு நன்றாக உயர்ந்து வர்த்தகம் ஆனது .

நமது சந்தைகளில் முந்தய தினங்களில் எதிர் பார்க்கப்பட்ட சரிவுகள் சந்தைகள் த்கதுவைக்கத்தில் வரவில்லை .மாறாக சந்தைகள் முன்தினம் உயர்வினை அடைந்தது போல நேற்றும் சற்று ஆபரேட்டர்களின் முயற்சியால் சந்தைகள் ஓரளவு உயர்விற்கு கொண்டு செல்லப்பட்டது .

அதன் பின்னர் நமது சந்தைகளில் அந்நிய முதலீட்டலார்களின் அதிக அளவு செல்லிங் காரணமாக சந்தைகளில் சரிவுகள் மேலும் மேலும் வந்தன .பின்னர் முடிந்த ஆசிய சந்தைகள் பெரிய அளவில் முந்தய சரிவின் எழுச்சி இல்லை .ஆகவே நமது சந்தைகளும் முடிவு வரை சிறிய எழுச்சியும் இல்லாமல் சரிவை நோக்கியே வர்த்தகம் ஆனது . முடிவில் நமது சந்தைகள் நிப்டி 161 புள்ளிகள் சரிவடைந்து முடிந்தன .

இந்த நேற்றைய சரிவு ஜனவரி மாதத்திற்கு பிறகு வந்த தினசரி வர்த்தகத்தின் அதிக புள்ளிகள் இழப்பாகும் என்பது குறிப்பிட தக்கது .

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் இருதினங்களாக வந்த சரிவுகள் இல்லை .ஆனால் எழுச்சியும் இல்லை . சந்தைகளில் மேலும் செல்லிங் தான் வந்துள்ளதாக தெரிகிறது . அமெரிக்கா சந்தைகள் முடிவில் பிளாட் நிலைகளில் முடிந்தன .

இன்றைய ஆசிய சந்தைகள் நேற்றைய பிளாட் வர்த்தகத்தின் காரணமாக இன்று துவக்கம் 1 % மேலாக சரிவில் துவங்கி உள்ளன . மேலும் நேற்றைய ஐரோப்பிய சந்தைகள் சற்று அதிகமாக சரிவடைந்து முடிந்தன . ஐரோப்பிய சந்தைகள் அனைத்தும் 1 1/2 % - 2 % வரை சரிவடைந்து முடிந்தன .

நமது சந்தைகள் இன்று ஆசிய சந்தைகளை பிரதிபலிக்க வாய்ப்புகள் இல்லை நமது சந்தைகளின் சரிவின் வேகம் நேற்று சற்று அதிகம் என்று கருதுகிறேன் .

நமது சந்தைகள் துவக்கம் 20 -30 புள்ளிகள் அதிகரித்து துவங்க வாய்ப்புகள் உள்ளன . சந்தைகளின் தற்போதைய நிலையை வைத்து பார்க்கும் பொழுது கடந்த இருதினங்களாக உலக சந்தைகளின் சரிவுக்கு அடுத்த மீட்சி வர நாளை வாய்ப்புகள் உள்ளன .

எதற்கும் ஸ்டாப் லாஸ் உடன் வர்த்தகம் செய்யவும் . ரிஸ்கி வர்த்தகர் மட்டும் பொசிசன் எடுக்கலாம் .

நிப்டி நிலைகள் -

ஆதரவு ---- 4325 , 4280 , 4250 .

எதிர்ப்பு ---- 4405 , 4445 , 4490 .

நன்றி !!!

கண் தானம் செய்யுங்கள் . நீங்கள் இல்லாவிட்டலும் உங்கள கண்கள் இந்த உலகை ஆளட்டும் .....