வணக்கம் நண்பர்களே @@@@@@@@
நமது சந்தைகளின் இன்றைய நிலையை மனதில் வைத்து புதிய புதிய விழிப்புணர்வு பதிவுகளை தொடர்ந்து கொண்டே உள்ளேன்
வழக்கம் போல உங்கள் ஆதரவுடன் !!!
நண்பர்களே ---
இன்றைய சந்தைகள் அதுவும் நமது சந்தைகள் பொறுத்த வரை வெகு வேகமாக மிகப் பெரிய இலக்கினை அடைந்துள்ளனஅவ்வாறு வந்ததில் ஒரு நல்ல செய்தி என்னவென்றால் சந்தைகள் UPA அரசின் வெற்றிக்கு பிறகு சந்தைகள் இரு தினங்களில் வெகு வேகமாக உயர்ந்ததுடன் பங்குகளின் விலைகளும் உடன் உயர்ந்துள்ளது
நமது ஆபரேட்டர்கள் மற்றும் அந்நிய முதலீட்டாளர்கள் நமது சந்தைகளில் நான் முந்தய பதிவுகளில் குறிப்பிட்டது போல ஏப்ரல் மாத கடைசியில் இருந்து இன்று வரை வாங்கி வந்துள்ளனர் . தற்சமயம் அவர்கள் கையில் உள்ள பங்குகளின் ( அவர்கள் முதலீடு செய்த துகை ) மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட 21,800 கோடி என என் எஸ ஈ தெரிவிக்கிறது.
இதை தொடரும் முன் சில பழைய விளக்கங்கள் ---
நமது சந்தைகளில் 21000 . புள்ளிகளில் இருந்து
சந்தைகள் சிறிய சரிவாக முதலில் 18000 புள்ளிகள் வரை சந்தைகள் வந்தன . அதன் பின்னர் அங்கிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் பங்கேற்ப்பு ஆவணங்களில் சில திருத்தங்கள் என அரசு அறிவித்ததும் அவர்கள் சந்தைகளில் இருந்து வெளியேற ஆரம்பித்தனர் .
அப்பொழுது அவர்கள் விற்ற தொகை 52,847 கோடிகள் அப்பொழுது சந்தைகள் அந்த நிலைகளில் இருந்து சுமார் 8000 புள்ளிகள் வரை கீழிறங்கின . இடைப்பட்ட புள்ளிகள் சுமார் 10000 -
இப்பொழுது பழைய விளக்கங்கள் முன்பு கூறியது போல சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்கள் வாங்கிய இந்த 21,800 கோடி முதலீடுகள் சந்தைகள் 2850 - 3600 ஆகிய புள்ளிகளில் வாங்கப்பட்டது . தற்பொழுது சந்தைகளில் உள்ள விலைகள் 3600 நிலைகளில் இருந்த விலைகளை விட பல மடங்குகள் அதிகம் .
இந்த 21,800 கோடி முதலீட்டில் சந்தைகள் கிட்டத்தட்ட 7000 புள்ளிகள் வரை உயர்த்தப்பட்டுள்ளது இந்த இடைப்பட்ட காலங்களில் அவர்கள் செய்த முதலீடு புதிய முதலீடுகள் மட்டுமே ..
அடுத்ததாக நமது சந்தைகள் பொறுத்த வரை அந்நிய முதலீட்டாளர்கள் ஒரு பணம் காய்க்கும் மரமாகவே கருதுகின்றனர் ஏன் அவ்வாறு கூறுகிறேன் என்றால் நமது சந்தைகளில் சரிவுகளில் நமது முதலீட்டாளர் முதலீடு செய்வதில்லை ஆனால் அந்நிய முதலீட்டாளர்கள் எந்த நிலைகளிலும் முதலீடு செய்கிறார்கள் .
சந்தைகளின் உயர்வுகளின் பொழுது நமது முதலீட்டாளர்கள் வாங்குகிறார்கள் ஆனால் அந்நிய முதலீட்டாளர்கள் அங்கு தான் விற்பனை செய்கிறார்கள் . அந்த நிலைகள் தற்போதைய நமது சந்தைகளில் உள்ளது . அந்நிய முதலீட்டாளர்கள் சில தவறு செய்து விட்டார்களா என கருதுகிறேன் .
அளவுக்கு அதிகமாக சந்தைகளை உயர்த்தி சென்று விட்டார்களா உயர்ந்த தற்போதைய விலைகளில் பங்குகளை வாங்க நமது மக்கள் தயாராக இல்லை . நமது மக்களை பொறுத்த வரை 3600 - 3700 நிலைகளில் வாங்கவே ஆர்வமாக உள்ளனர் .
இப்படி இருக்க அந்நிய முதலீட்டாளர்கள் உடன் போட்டியிட்டு நமது உள்ளூர் பெரிய முதலீட்டாளர்கள் மற்றும் பரஸ்பர நிதியகங்கள் ஆகியவையும் சகட்டு வாங்கி தள்ளி உள்ளன . அவர்கள் அனைவரும் வாங்கியதில் சந்தைகள் உயர்வில் மாட்டி சரிவில் வங்கி அவரேஜ் செய்த நமது முதலீட்டாளர்கள் வேகமாக வெளியேறி வருகிறார்கள் .
அனேகமாக எனது கணிப்பின் படி அவர்கள் மாட்டி கொண்டு விட்டதாக கருதுகிறேன் . ஏன் என்றால் நமது சந்தைகளின் கடந்த இரு வார வர்த்தகத்தினை வைத்து பார்க்கும் பொழுது இன்டெக்ஸ் மற்றும் பங்குகள் உயர்வின் பொழுது விற்பனை அதிகரித்து வருகிறது .
இது ஒரு வகையில் ஒரு எதிர் மறையான செயலை காட்டுகிறது .மேலும் சந்தைகள் துவக்கத்தில் சரிவடைந்து பின்னர் அங்கிருந்து பெரியதொரு உயர்வினை காட்டி உயர்விலேயே முடிக்கப்படுகிறது .
இது நமது மக்களை சந்தைகளில் வாங்கும் பக்கமாக திருப்ப முயற்சி செய்கிறார்கள் என நினைக்கிறேன் . மேலும் வரும் வாரங்களில் சந்தைகள் சிறிய அளவில் சரிவடைந்தலே பங்குகள் விலைகள் பெரிதாக சரிவடைய வாய்ப்புகள் அதிகம் உள்ளன .
மேலும் அந்நிய முதலீட்டாளர்கள் மற்றும் உள்ளூர் பெரிய முதலீட்டாளர்கள் மற்றும் பரஸ்பர நிதியகங்கள் என இவர்கள் அனைவரும் விற்கும் சூழ்நிலைகள் சந்தைகளில் வந்தால் சந்தைகள் அதல பாதாளத்திற்கு செல்லும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை . அவ்வாறு வரும் பொழுது சந்தைகளில் வாங்குபவர்கள் இருக்க மாட்டார்கள் .
ஆகவே சந்தைகள் சரிவில் அவரேஜ் செய்த நண்பர்கள் வெளியேறுங்கள் நஷ்டம் 20 % வரை நஷ்டத்தில் உள்ள நபர்களும் வெளியேறி விடலாம் . நான் ஏற்க்கனவே முந்தய பதிவுகளில் இது பற்றி குறிப்பிட்டு இருந்தேன் .ஆகவே சந்தைகளில் இருந்து வெளியேறி வேடிக்கை பாருங்கள் பட்ஜெட் வருவதற்குள் சந்தைகளில் இன்னும் என்னென்னவோ நிகழப்போகிறது .
சந்தைகள் எப்பொழுதும் இருக்கும் நாம் உள்ளே இருந்தால் தான் சம்பாதிக்க முடியும் .
நன்றி !!!