ஞாயிறு, 21 ஜூன், 2009

வெள்ளியன்று சந்தைகள் துவக்கம் சற்று உயர்வாக இருந்தது . பின்னர் சந்தைகளில் வந்த அதிக செல்லிங் காரணமாக சந்தைகள் தொடர்ச்சியாக சரிந்தன .மேலும் முக்கிய தடை நிலையான 4325 - 4280 ஆகிய இரண்டு நிலைகள் உடைந்ததால் சந்தைகளில் மேலும் மேலும் செல்லிங் அதிகரித்தது .

ஆசிய சந்தைகள் 1 % வரை அதிகரித்து முடிந்தன .ஆனாலும் ஆசிய சந்தைகள் வர்த்தகத்தின் இடையில் நாளின் குறைந்த பட்ச புள்ளிகளில் வர்த்தகம் ஆனது ஆசிய சந்தைகள் முடிவில் தான் உயர்வினை அடைந்தன என்பது குறிப்பிடத் தக்கது .

வெள்ளியன்று அமெரிக்கா சந்தைகள் துவக்கம் பெரிய எதிர் பரப்பில் இருந்தது ஆனால் முந்தய மூன்று தினங்களின் சரிவுக்கு பிந்தைய மீட்சியை சந்தைகளில் காண முடியவில்லை . மேலும் அமெரிக்கா சந்தைகள் டவ் ஜோன்ஸ் 8600 நிலைகளுக்கு மேல் சந்தைகளை நிலை நிறுத்த முடிய வில்லை மேலும் சந்தைகள் கடைசி இரு தினங்கள் மேற்குறிப்பிட்ட நிலைகளுக்கு கீழே முடிவடைந்துள்ளன . அநேகமா எனது கணிப்பின் படி அமெரிக்கா சந்தைகள் திங்களன்று இந்த நிலைகளை தாண்ட விலை என்றால் 8300 வரை சந்தைகள் உடனடியா ஒரு சரிவுகள் வரலாம் என கருதுகிறேன் .

மேலும் வியாழனன்று வந்த இன்பிலேசன் அறிவிப்புகள் சற்று குழப்பத்தினை சந்தைகளில் ஏற்படுத்தி உள்ளது . ஆனால் கட்டாயம் இது டேப்லேசன் இல்லை என புரிந்து கொள்ளுங்கள் . இன்பிலேசன் - 1.61 வஸ் 0.13 என்று வந்துள்ளது .

இந்த ஒரு நெகடிவ் இன்பிலேசன் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வந்துள்ளதாக தெரிகிறது .மேலும் இது வரும் வாரங்களில் சந்தைகளில் கடும் சரிவினை கொண்டு வரலாம் .

மேலும் வெள்ளியன்று வந்துள்ள செபி இன் அறிவிப்பில் அந்நிய முதலீட்டாளர்களுக்கு கட்டணத்தில் பாதியாக குறைத்துள்ளது . மேலும் பரஸ்பர நிதியகங்கள் வசூலிக்கும் நுழைவுக்கட்டணம் முழுவதும் ரத்து செய்துள்ளது இது முதலீட்டளர்களுக்கு சற்று சந்தோசமான செய்தி தான் .

இப்படி ஒரு நல்ல மற்றும் கெட்ட செய்திகள் வந்தாலும் upa அரசு இனி மேற்க்கொள்ள இருக்கும் பட்ஜெட் அறிவிப்பிற்கும் மற்றும் இதர விசயங்கள் மற்றும் அரசு முதலீடை சிறிதளவு குறைப்பது என்ற முடிவுகள் சந்தைகளில் பின் நாளில் பெரிய தாக்கத்தினை ஏற்ப்படுத்த வாய்ப்புகள் அதிகமாக உள்ளது .

நன்றி !!