திங்கள், 8 ஜூன், 2009

நமது சந்தைகளை பொறுத்த வரை இன்றைய தினம் பெரிதாக எதுவும் எதிர் பார்க்க இயலாது என்றே கருதுகிறேன் . இன்றைய ஆசியா சந்தைகளின் துவக்கம் பிளாட் நிலைகளில் துவங்கி உள்ளன . மேலும் அமெரிக்கா சந்தைகளின் போக்கும் சற்று நிலைப்பாடுகள் குறைவாகவே உள்ளன .


ஆசியா சந்தைகளில் பெரிதாக ஊக்க செய்திகள் எதுவும் இல்லாதது தான் சந்தைகளை நிறுத்தியும் மற்றும் சரிவடையமலும் வைத்துள்ளதாக கருதுகிறேன் .

நமது சந்தைகள் இன்றைய வர்த்தகத்தில் நிப்டி 4620 நிலைகளுக்கு மேல் முடிவடையாத அல்லது அந்த நிலைகளுக்கு மேல் வர்த்தகம் சரி வர நடக்காமல் போனால் வரும் நாட்களில் சந்தைகளில் சரிவுகள் உறுதி படுத்த படும் என நினைக்கிறேன் .

தினசரி வர்த்தகர்கள் இன்றைய சந்தைகளில் மட்டும் அல்லது இந்த வாரம் முழுவதும் மேற்கண்ட நிலைகளில் தங்களது செல்லிங் ஐ தொடரலாம் .

நன்றி !!!