நேற்றைய சந்தையில் எதிர் பார்த்தபடி நிப்டி 40 புள்ளிகள் சரிவில் துவங்கின . பின்னர் ஆசிய சந்தைகளில் வந்த செல்லிங் காரணமாக நமது சந்தைகளும் சரியத்தொடங்கின . ஆசிய சந்தைகள் அனைத்தும் 2 % வரை சரிவில் வர்தகமாகி முடிந்தன .
நமது சந்தைகள் முக்கிய ஆதரவு நிலையான 4520 முக்கிய எதிர்நிலையான 4591 ஆகிய இரண்டு நிலைகளையும் கடந்து வர்த்தகம் ஆனது குறிப்பிட தக்கது . மேலும் நேற்றைய சந்தையில் செல்லிங் அதிகரித்ததற்கான காரணம் நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்து வந்த ரிலையன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் நாச்சுரல் விவகாரம் முடிவுக்கு வந்தது .
உயர் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியதில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு நஷ்டம் மிகவும் அதிகம் என்று கணிக்கப்பட்டது . ஆதலால் சந்தைகளில் ரிலையன்ஸ் பங்குகள் சரியத் தொடங்கின . அந்த சரிவுகள் கிட்ட தட்ட 7 % வரை சென்றன . ஆனால் ரிலையன்ஸ் நேச்சுரல் நிறுவனத்திற்கு லாபம் அதிகம் என்று கணிப்பில் தெரிகிறது .
மேற்கண்ட செய்திகளால் சந்தைகளில் சரிவுகள் அதிகரித்தது . சந்தைகள் 4520 நிலைகள் உடை பட்டதும் " 4481 " வரை சந்தைகள் சென்றன பின்னர் முடிவில் சந்தைகள் 100 புள்ளிகள் சரிவடைந்து 4486 புள்ளிகளில் முடிவடைந்தன .
நேற்றைய அமெரிக்கா சந்தைகள் பியுச்சர் சந்தைகள் காலை முதலே 1 % வரை சரிவில் வர்த்தகம் நடந்து கொண்டு இருந்தது . நேற்று மதியம் துவங்கிய ஐரோப்பிய சந்தைகள் அனைத்தும் 1 1/2 % வரை சரிவில் துவங்கின
அமெரிக்கா சந்தைகளில் லாபத்தினை உறுதி செய்தல் மற்றும் பிரெஷ் செல்லிங் ஆகியவற்றின் காரணமாக சந்தைகள் அதிக சரிவினை கண்டுள்ளதாக கருதுகிறேன் . முடிவில் அமெரிக்கா சந்தைகள் 2 1/2 % - 3 % வரை சரிவில் முடிந்தன . ஐரோப்பிய சந்தைகளும் அதிக சரிவுகளில் முடிந்தன . ஐரோப்பிய சந்தைகள் முடிவில் 3 % - 4% வரை சரிவில் முடிந்தன .
இன்றைய ஆசிய சந்தைகள் 2 % வரை சரிவில் துவங்கி உள்ளன . இது உலக சந்தைகளின் போக்கினை கடை பிடிப்பதாக கருதுகிறேன் . மேலும் முந்தய பதிவில் குறிப்பிட்டது போல உலக சந்தைகளில் இந்த மற்றும் வரும் வாரங்களில் சரிவுகள் அதிகமாக இருக்கலாம் . சந்தைகளுக்கு ஆதரவான ஊக்க செய்திகள் எதுவும் இல்லை என்கின்றன நிலை .
நமது சந்தைகள் ஆசிய சந்தைகளின் போக்கினையே தொடரும் துவக்கம் 1 1/2 % - 2 % வரை சரிவில் துவங்கலாம் . மேலும் சந்தைகள் மீட்சிக்கு உலக சந்தைகளின் போக்கினை பின்பற்றும் . மற்றும் மதியம் துவங்கும் ஐரோப்பிய சந்தைகள் போக்கு நமது சந்தைகளில் பிரதி பலிக்காது என்றே கருதுகிறேன் .
முடிந்த வரை பங்குகளின் உயர்வில் பங்குகளை விற்று லாபம் பாருங்கள் . அது சிறிய உயர்வாக இருந்தாலும் வெளியேறுங்கள் . அவரேஜ் செய்ய இது சரியான தருணம் அல்ல .
நமது சந்தைகள் இன்று 4520 நிலைகளுக்கு மேல் செல்ல வாய்ப்புகள் இல்லை . 4470 நிலைகள் உடைபட்டால் சந்தைகள் பலவீனமடைவது உறுதி செய்யப்படும் என நினைக்கிறேன் . இறுதி ஆதரவு நிலையான 4450 நிலைகள் மட்டும் எஞ்சியுள்ள இறுதி நிலையாக இருக்கும் அந்த நிலைகள் உடைபட்டால் சந்தைகளில் சரிவில் வேகம் அதிகரிக்கும் .
கவனமாக இருங்கள் !!!
நன்றி !!!