வியாழன், 4 ஜூன், 2009

நேற்றைய சந்தையில் நிப்டி துவக்கம் சற்று 35 புள்ளிகள் அதிகரித்து துவங்கியது . பின்னர் ஆசிய சந்தைகளை நமது சந்தைகள் பின்பற்றவில்லை . சந்தைகளில் சிறிய சரிவுகள் வந்தன அந்த சரிவுகள் உறுதி படுத்தப்படும் வேளையில் சந்தைகளில் ஆபரேட்டர்கள் பலவந்தமாக சந்தைகளை உயர்த்தினார்கள் .

நமது சந்தைகள் நேற்று மட்டுமல்ல கடந்த 2 வாரங்களாக சந்தைகள் அதே நிலைகளில் 4200 - 4500 நிலைகளுக்கு இடையே வர்தகமாகி வருகிறது . உலக சந்தைகளில் ஏற்ப்படும் சரிவுகள் நமது சந்தைகளில் நிறுத்தப்பட்டு வருகிறது . ஆசிய சந்தைகளை பொறுத்த வரை எந்த வித ஊக்க மற்றும் நல்லதொரு அறிவிப்புகளும் இன்றி சந்தைகள் உயர்த்தப்பட்டு வருகிறது .

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் சற்று உயர்வுடன் துவங்கியது பின்னர் சந்தைகளில் வந்த வேலையில்லாதோர் பற்றிய அறிவிப்புகள் அதிகரித்ததை தொடர்ந்து சந்தைகளில் சற்று சரிவுகள் அதிகரித்தது பின்னர் சந்தைகள் முடிவில் 1 % வரை சரிவில் முடிந்தன . மேலும் நேற்று வந்த அமெரிக்கா பொருளாதார அறிவிப்புகள் சற்று மோசமடைந்து வந்தது . இது வரும் நாட்களில் சந்தைகளை பெரிய அளவில் பாதிக்க வாய்ப்பு உள்ளது .

இன்றைய ஆசிய சந்தைகள் 1 % - 2 % வரை சரிவில் துவங்கி உள்ளன . நமது சந்தைகள் ஆசிய சந்தைகள் போக்கினை பிரதிபலிக்க வாய்ப்பு இல்லை என்றே கருதுகிறேன் ஏன் என்றால் சிங்கபூர் நிப்டி 40 புள்ளிகள் மட்டும் சரிவில் துவங்கி உள்ளது . அதை வைத்து பார்க்கும் பொழுது நமது சந்தைகள் அதே அளவு தான் சரிவுகளில் துவங்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன .

நமது சந்தைகளை பொறுத்த வரை 4480 நிலைகளுக்கு கீழே சந்தைகள் செல்லாத வரை சரிவுகளுக்கு வாய்ப்பு இல்லை என்றே கருதுகிறேன் . ஆகவே நண்பர்களே முடிந்தவரை உயர்வுனைலைகளில் தங்களது குறுகியகால மற்றும் நீண்ட கால முதலீடுகளை வைத்து வேடிக்கை பார்க்கும் அருமை நண்பர்களும் சற்று சந்தையை விட்டு வெளியேறுவது நலம் ...

நன்றி !!!