நேற்றைய சந்தைகள் துவக்கம் கணக்கு படி பிளாட் தான் . ஆனால் சந்தைகள் துவக்கம் முதல் அடுத்த 5 நிமிடத்திற்குள் நிப்டி 100 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் ஆனது இந்த வர்த்தக நேரத்தில் சந்தைகளில் அதிக வர்த்தகம் இல்லாமல் சந்தைகள் உயர்த்தப்பட்டுள்ளது .
ஆனால் பங்குகளில் அந்த வளர்ச்சி இல்லை மேலும் ஆசியசந்தைகள் துவக்கத்தில் இருந்த நிலைகளில் இருந்து உயர ஆரம்பித்தன . ஆசிய சந்தைகள் முடிவில் 2 % - 3 % வரையிலான உயர்வில் முடிந்தன .
ஆசிய சந்தைகள் முடிவில் நமது சந்தைகள் 130 புள்ளிகள் உயர்வில் இருந்தன . ஆனால் முடிவில் சந்தைகள் கீழிறங்க ஆரம்பித்தன . அப்பொழுது நமது சந்தைகளில் பங்குகளின் விலைகள் வேகமாக சரிய ஆரம்பித்தன . கிட்டத்தட்ட அனேக பங்குகள் விலைகள் சரிய ஆரம்பித்தன .நமது சந்தைகள் முடிவில் 104 புள்ளிகள் உயர்ந்து முடிந்தன .
நேற்றைய அமெரிக்கா சந்தைகள் காலை பியுச்சர் சந்தைகள் துவக்கம் முதலே 1 % வரை உயர்விலேயே வர்த்தகம் ஆனது . நமது சந்தைகளும் ஆசிய சந்தைகளும் அமெரிக்கா சந்தைகள் உயரும் என்ற எதிர் பார்ப்பில் அனைத்து சந்தைகளும் உயர்ந்தன .
ஆனால் நேற்றைய அமெரிக்கா சந்தைகள் துவக்கம் சரிவில் இருந்தன . பின்னர் அங்கு வந்த மோசமான பொருளாதார அறிவிப்புகளால் சந்தைகள் சரிய ஆரம்பித்தன .மேலும் ஏற்றுமதி சரிவடைந்துள்ளது . சரிவை நோக்கி சென்ற சந்தைகள் பின்னர் முடிவில் பிளாட் நிலைகளில் முடிந்தன .
இன்றைய ஆசிய சந்தைகள் 1 % வரை சரிவடைந்து துவங்கி உள்ளன . நமது சந்தைகள் அனேகமாக ஆசிய சந்தைகளை பின்பற்றி துவங்க மற்றும் வர்த்தகம் நடக்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளன .நமது சந்தைகளில் சிறிய உயர்வுடன் கூடிய சரிவுகள் வர வாய்ப்புகள் உள்ளன .
இன்றைய சந்தைகளில் முக்கிய நிலைகளாக எதிர் நிலையாக 4670 இந்த நிலைகள் உடைபட்டு சந்தைகள் மேலே சென்றால் 4720 வரையும் மற்றும் தடை நிலையாக 4620 நிலைகள் உடைபட்டு கீழே சென்றால் 4570 வரை செல்ல வாய்ப்புகள் உள்ளன .
இன்றைய சந்தைகளில் முடிந்தவரை அமைதி @@@@@@@@@@@@@@@@
நன்றி !!!