நேற்றைய சந்தைகள் எதிர் பார்த்தபடி பங்குகளின் விலைகள் மிகப் பெரிய சரிவுகளை கண்டன . இன்டெக்ஸ் இம் சேர்த்து தான் .(சரிவுகள் தொடக்கத்தின் முதல் நாள் என நினைக்கிறேன் . இதனால் தான் நண்பர்களே 4400 - 4500 நிலைகளில் லாபத்தினை உறுதி செய்ய சொல்லி இருந்தேன் .
நேற்றய சந்தைகளில் நிப்டி முக்கிய தடை நிலையான 4520 -4480 ஆகிய இரு நிலைகள் உடை பட்டு உள்ளன .
நேற்றைய ஆசிய சந்தைகள் அனைத்தும் பிளாட் நிலைகளில் துவங்கின சீன சந்தைகள் மட்டும் 2 % வரை சரிவடைந்தன . இந்த சந்தைகள் முடிவடையும் பொழுது நமது சந்தைகள் நிப்டி 100 புள்ளிகள் வரை சரிவடைந்து இருந்தன . பின்னர் சந்தைகளில் லாபத்தினை உறுதி செய்தல் மற்றும் செல்லிங் அதிகரித்ததால் சந்தைகள் மீண்டும் சரிந்தன . முடிவில் நமது சந்தைகள் 3.5 % வரை சரிவடைந்து முடிந்தன .
நேற்றைய அமெரிக்கா சந்தைகளில் துவக்கம் 1 % அளவிற்கு சரிவடைந்து துவங்கின . பின்னர் அங்கு முக்கியமாக எதிர் பார்த்த UBS இன் திவால் அறிவிப்பு சம்பந்தமான செய்திகள் எதுவும் அறிவிக்கபடாததால் சந்தைகள் நகர்வுகள் அதிகம் இன்றி பிளாட் நிலைகளில் முடிந்தன .
இன்றைய ஆசிய சந்தைகள் அனைத்தும் சரிவில் துவங்கி உள்ளன . நேற்றைய அமெரிக்காவின் UBS பற்றிய அறிவிப்பு வராதது அந்த அறிவிப்பினை வரும் நாட்களில் என்று வேண்டுமானாலும் எதிர் பார்க்கலாம் என கருதப்படுகிறது . அதனால் ஆசிய சந்தைகளின் நகர்வுகளில் சற்று குறைவாக உள்ளன .
நமது சந்தைகள் துவக்கம் சற்று சரிவில் துவங்கலாம் . பின்னர் ஆசிய சந்தைகளின் போக்கில் பிரதிபலிக்கும் . மேலும் நமது சந்தைகள் இன்று முக்கிய எதிர் நிலையான 4470 - 4440 ஆகிய எதிர் நிலைகளை தாண்டி சந்தைகள் செல்ல வாய்ப்புகள் சற்று குறைவு என்றே கருதுகிறேன் .
முடிந்த வரை லாங் நிலைகள் தவிர்க்கவும் சந்தையின் ஒவ்வொரு உயர்விலும் செல்லிங் அல்லது புட் ஆப்சனை தேர்வு செய்யலாம் .
நன்றி !!!