இன்றைய தேதியில் இன்னும் பொருளாதார பிரச்சனைகள் முடிவுக்கு வரவில்லை . அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் மற்றும் இங்கிலாந்து நாடுகளிலும் இந்த பிரச்சனைகள் மேலும் வலுவடைந்து வருவதாக தான் உலக வல்லுனர்கள் அனைவரும் கூறும் விஷயம் .
இது சந்தைகளில் எவ்வித தாக்த்தினையும் ஏற்படுத்தவல்லது - அதைப்பற்றிய சில விளக்கங்களை பார்க்கலாம் .
அமெரிக்காவில் வரும் ஜுன் முதல் தேதி அதாவது நாளை ஜெனரல் மோட்டார் நிறுவனம் தனது திவால் அறிவிப்பினை அரசிடம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . ஏன் என்றால் ஜெனரல் மோட்டார் நிறுவனம் ஏற்க்கனவே திவால் மனு செய்ய வரமாட்டோம் என்று கூறி மோட்டார் நிறுவனக்களுக்கு அளிக்கப்பட்ட ஊக்க தொகையில் அதிக தொகையினை பெற்ற நிறுவனம் ஆகும் .
மேலும் இந்த நிறுவனம் ஏற்க்கனவே இரண்டு முறைகள் திவால் மனு செய்ய சென்று அரசு விண்ணப்பத்தினை நிராகரித்து விட்டது . இந்த முறை அதையும் மீறி எப்படியும் திவால் மனு செய்ய்ய தயாராகிவருகிறது ஜெனரல் மோட்டார் நிறுவனம் .
தற்பொழுது அமெரிக்காவில் திவால் செய்ய இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை முப்பதாயிரத்தை தாண்டும் என ஒரு அறிக்கை கூறுகிறது (தனியார் நிறுவங்கள் உட்பட ) . அதோடு மட்டுமல்லாமல் தனி நபர்கள் இரண்டு லட்சத்துக்கு மேல் திவால் மனு செய்ய தயாராகி வருகிறர்கள் . அவர்களில் இருபது ஐந்தாயிரம் பேர் இம்மாதம் திவால் மனு செய்ய அனுமதிக்க பட்டுள்ளனர் .
மேலும் அமெரிக்காவில் திவாலாகி வரும் வங்கிகளின் எண்ணிக்கை அறுபதை நெருங்கி வருகிறது . மேலும் சில வங்கிகள் இந்த மாதத்தில் திவால் மனு செய்ய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது . இவ்வருட இறுதிக்குள் பல வங்கிகள் மீண்டும் மூடப்படும் அபாயம் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது ..
மேலும் அமெரிக்காவில் முக்கிய நிறுவனங்களான சோனி , மைக்ரோசாப்ட் , வோல்ஸ் வேகன் , ரோல்ல்ஸ் ராய் , சிட்டி வங்கி . மற்றும் பல நிறுவனங்கள் மேலும் மேலும் ஆட்குறைப்பில் இறங்கியுள்ளன . அதுவும் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட பணியாளர்கள் என்ற நோக்கத்துடன் ஆட்குறைப்பு நடந்து வருகிறது .
இதற்கிடையில் போன வாரம் நடந்த அதிபர் கருத்தரங்கில் நடை பெற்ற பொருளாதார ப்பிரச்சனைகள் பற்றிய விவாதத்தில் பேசிய திரு . ஒபமாவின்மற்றும் அவர் குழுக்களும் சேர்ந்து இனி பொருளாதார சிக்கல்களை சமாளிக்க ஊக்க தொகைகள் அதிகம் வழங்கப்பட மாட்டது என உறுதியான அறிவிப்பினை அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .
மேலும் இதில் மறு பரிசீலனை என்பது கிடையாது என்றும் ஒபாமா அரசு திட்டவட்டமாக தெளிவாக கூறியுள்ளது .
இந்த அறிவிப்புகளினால் அமெரிக்கா சந்தைகளில் முதலீடுகள் குறைய வாய்ப்பு அதிகமாக உள்ளன . மேலும் பரஸ் பர நிதி நிறுவனங்கள் இன்னும் ஆட்குறைப்பில் ஈடு படவில்லை இந்த செய்திகளினால் வரும் வாரங்களில் அவர்களும் ஆட்குறைப்பில் ஈடு படலாம் .
தற்போதைய சூழலில் அமெரிக்காவின் டாலரை முதல் அந்தஸ்தில் இருந்து இறக்கியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு சீன மற்றும் இந்தியா இன்னும் சில சர்வதேச நாடுகள் களத்தில் இறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது .
சில மாதங்களுக்கு முந்தய " G 20 " மாநாட்டில் இது பற்றிய பொதுவான ஒரு கரன்சியை கொண்டு வர விவாதம் பேச ஒபாமா அந்த பேச்சினை நிராகரித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது .
இன்றய உலக நாடுகளின் பார்வையில் அமெரிக்கா ஒரு பொருளாதார பிரச்சனைக்குரிய நாடாக கருதப்படுகிறது . அதோடு மட்டுமல்லாமல் பல நாடுகள் அமெரிக்காவின் தற்போதைய சிக்கல்களை வைத்து அமெரிக்காவை ஓரம் கட்ட முயற்சி செய்கின்றன . ஆனால் அதை எளிதாக எதிர் கொள்ள கூடிய திறமை படைத்த இங்கிலாந்து மிகவும் அமைதியாக இருந்து வருகிறது .
இங்கிலாந்திலும் தற்சமயம் அமெரிக்காவை பற்றி பேசிய அனைத்து பொருளாதார பிரச்சினைகளும் உள்ளன . ஆகா ------
அதையும் நீட்டி முழங்க வேண்டுமா உங்களுக்கு நண்பர்களே @@@@@@@
ஆக இவ்விரு வல்லரசு நாடுகளிலும் பொருளாதார பிரச்சனைகளுக்கு ஊக்க தொகைகள் வழங்கிய போதிலும் அரசு குறிப்பிட்ட அளவுக்கு மேலும் இது சம்பந்தமா சலுகைகள் வழங்கியும் பிரச்சனைகளையும் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை . பிரச்சனைகள் மேலும் மேலும் தலை தூக்கி வருகின்றன .
இந்த அனைத்து பிரச்சினைகளையும் வைத்துக்கொண்டு சீன மற்றும் நமது நாடும் மற்றும் ஜப்பானும் இது பற்றிய பேச்சுக்களில் சிறிது தயக்கம் காட்டாமல் எங்களது நாடுகளில் பொருளாதார பிரச்சனைகள் எதுவும் அதிகமாக இல்லை என்று கூறி வருகின்றன .
நிபுணர்களின் கணிப்பின் படி சீனாவில் அடுத்த வருட ஆரம்பத்தில் பொருளாதார பிரச்சனைகள் பயங்கரமாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது . நமது நாடும் அது போல தான் உள்ளது . மிக குறைவான இன்பிலேசன் மிக குறைந்த வட்டி விகிதங்கள் என பொருளாதார பிரச்சனைக்கு முன்னரே எல்லாம் குறைவாக உள்ளது .பொருளாதார பிரச்சினைகள் வந்தால் மீண்டும் உலக வங்கியில் கையேந்த வேண்டும் .
அவ்வாறு நடக்கும் சூழ்நிலையில் தற்போதைய அமெரிக்காவை எதிர்க்கும் டாலர் விஷயம் முக்கியமாக பேசப்படலாம் . அதனால் புதிய பிரச்சனைகள் நிகழலாம் .எது எப்படியாகினும் நமது நாடும் சீனாவும் மற்றும் ஜப்பானும் அமெரிக்காவை ஓரம் கட்ட நினைக்கும் எண்ணத்தினை கைவிட்டால் பரவாயில்லை .
அது தான் நமக்கும் நமது நாட்டின் எதிர் காலத்திற்கும் நல்லதொரு விசயமாக இருக்கும் . உலக நிபுணர்களின் கணிப்பின் படி அமெரிக்காவில் மிகப்பெரிய பொருளாதார சரிவின் இரண்டாம் நிலை துவங்க உள்ளது . அது கிரெடிட் கார்டு பற்றிய விஷயம் தான் . அவ்வாறு நிகழும் பட்சத்தில் உலகின் முதல் வல்லரசான அமெரிக்கா வீழும் என நினைப்பது முட்டாள் தனம் .
அவ்வாறு நிகழ்ந்தால் அது உலக நாடுகள் எல்லாவற்றையும் பாதிக்கும் என்பதை மறந்து விடவேண்டாம் .
நண்பர்களே இந்த முக்கிய பதிவின் நோக்கம் சந்தைகள் உயர்ந்து கொண்டே செல்வதர்ககவோ அல்லது நான் ஒரு சரிவின் ஆதரவாளனோ இல்லை நீங்கள் இத்தகைய பிரச்சனைகள் உள்ளதை தெரிந்து கொள்ளவே .
உச்சராக இருங்கள் !!! லாபத்தினை உறுதி செய்யுங்கள் @@@@@@@@@
நன்றி !!!
அடுத்த இது போன்ற முக்கிய விழிப்புணர்வு பதிவு தலைப்பு மட்டும் இங்கே--
--- அமெரிக்காவை சாப்பிட தயாராகும் கிரெடி கார்டு சிக்கல்கள் -----
காத்திருங்கள் நண்பர்களே @@@@@@@@@@@@@@@@@@@@