இன்றைய ஆசிய சந்தைகள் 3 % - 3.5 % வரை உயர்வில் துவங்கி உள்ளன . நான் வெள்ளியன்று பதிவில் குறிப்பிட்டது போல காரணமின்றி சீன சந்தைகள் உயர்ந்துள்ளதை குறிப்பிட்டு இருந்தேன் . அதே சந்தை இன்றும் அதே அளவு மற்றொரு உயர்வினை இன்று கண்டுள்ளது .
மேலும் இனி வரும் நாட்களில் ஆசிய சந்தைகளில் சிறிய உயர்வுகளுக்கு பின்னர் மிகப்பெரிய சரிவுகள் வரும் என எதிர் பார்க்கிறேன் .
நமது சந்தைகளை பொறுத்த வரை வியாழனன்று வந்த இன்பிலேசன் மற்றும் வியாபார டிரேடு அறிக்கை சந்தைக்கு சற்று சாதகமாக இருக்க வாய்ப்பு உள்ளது . நமது சந்தைகள் இரு வர்த்தக விடுமுறை தினங்களுக்கு பிறகு துவங்க உள்ளதால் 1 % - 2 % வரை உயர்வில் துவங்க வாய்ப்பு உள்ளது .
மேற்கூறிய படி சந்தைகள் 3510 , 3550 ,3580 நிலைகளுக்கு மேல் செல்லும் பட்சத்தில் சந்தைகள் 3650 , 3690 வரை செல்லு வாய்ப்புகளை மறுப்பதிற்கில்லை .
மேலும் சந்தைகளை தேர்தல் சம்பந்தமான எதிர் மறையான செய்திகள் எதுவும் வந்தால் சந்தைகள் மளமள வென சரியும் அவ்வாறு சரிவுகள் வரும் பொழுது அந்த சரிவுகள் 3300 , 3150 , 3000 ,2925 வரையும் சரிவுகள் வரலாம் என எதிர் பார்க்கிறேன் .
கவனமாக இருங்கள் சந்தைகளின் உயர்வினை கண்டு வாங்காதீர்கள்
நிலைகள் ---
ஆதரவு --- 3460 , 3410 , 3380 .
எதிர்ப்பு --- 3500 , 3520 , 3550 ..