ஞாயிறு, 24 மே, 2009

புட் ஆப்சன் புட்டுகிச்சு ! கால் ஆப்சன் கழண்டு கிச்சு !!!


எனது ஒவ்வொரு பதிவிலும் நமது பங்கு சந்தை சகாக்களுக்கு பயன் படும் விதத்தில் மிகவும் கடினமான பணிகளுக்கு இடையிலும் பதிவெழுதி வருகிறேன் . பங்கு சந்தை ஓரு அலசலை தொடர்ந்து சந்தைகளின் அடுத்ததடுத்த விபரங்களை தொடர்ந்து கொண்டே உள்ளேன்.

தற்சமயம் சந்தைகளில் பெரிதும் வணிகர்களை பாதிக்கும் ஒரு விசயத்தினை பற்றி =====

இனி அதை பற்றி @@@@@@@@@@@@

இந்த பதிவில் ----

நமது சந்தைகளை பொறுத்த வரை தினசரி வர்த்தகம் , மற்றும் பியுச்சர் மற்றும் ஆப்சன் போன்றவற்றின் மேலோட்டமான விசயங்களை பங்கு சந்தை ஒரு அலசலும் மற்றும் பியுச்சர் அண்ட் ஆப்சன் பதிவிலும் பார்த்தோம் .

இனி ஆப்சன் பற்றி !!!

நானும் கடந்த மூன்று மாதங்களாக சந்தையில் நகர்வுகளை கவனித்து வருகிறேன் . சந்தையில் வர்த்தகத்தில் உள்ள தினசரி வர்த்தகர்களை சந்தையை விட்டே வெளியே அனுப்புவது என்ற கோணத்தில் ஆபரேட்டர்கள் சந்தைகளில் வர்த்தகம் செய்து வருகிறார்கள் .

பதிவை படிக்கும் ஒவ்வொரு வரும் பதிவு முடியும் வரை தினசரி வர்த்தகர்கள் என்ற நிலையில் இருக்கவும் ..

தற்போதைய சந்தைகளில் அதிக ஏற்ற இறக்கங்கள் காணப்படுவது யாவரும் அறிந்ததே ஆனால் இதற்க்கு ஒரு முக்கிய காரணம் என்னவென்று பார்த்தால் முன்பெல்லாம் சந்தைகளில் விற்று வாங்கும் அல்லது வாங்கி விற்கும் படலம் தான் இருக்கும் .

பயுச்சர் ஒப்பந்தம் முடிவுக்கு வரும் பொழுது சந்தைகளில் புட் ஆப்சன் அதிகம் வாங்கப்பட்டு இருந்தால் சந்தைகளை ப்ரெட் செய்து சந்தையை உயர்த்தி புட் ஆப்சனை மதிப்பில்லாம செய்வார்கள் . அதே போல எதிர் திசையாக கொண்டால் கால் ஆப்சன் அதிகம் வாங்கப்பட்டு இருந்தால் சந்தையை சரிவு அடையசெய்து கால் ஆப்சனை மதிப்பில்லாமல் செய்வார்கள் .

இது கடந்த இரண்டு வருடங்களுக்கு முந்தய வியாபார முறை ( தந்திரம் )

ஆனால் கடந்த ஒரு ஆண்டுகளாக சந்தைகளில் அதிக ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன . ஆபரேட்டர்கள் பியுச்சர் வர்த்தகம் முடிவு தேதியின் பொழுது அதிக அளவு புட் ஆப்சனும் அதிக அளவு கால் ஆப்சனும் வாங்கபட்டிருப்பின் சந்தையினை ஒரே இடத்தில அவர்கள் வாங்கும் சக்தியை பயனபடுத்தி நிலை நிறுத்தி புட் ஆப்சன் மற்றும் கால் ஆப்சன் இரண்டையும் மதிப்பில்லாமல் செய்வார்கள் .

ஆனால் கடந்த 3 - 4 மாதங்களாக சந்தைகளில் ஆபரேட்டர்களின் செல்வாக்கு மிகவும் அதிகரித்து விட்டதாக உணர்கிறேன் . முன்பு மாத இறுதி செய்த வேலைகளை இன்று நினைத்த மாத்திரத்தில் செய்து வருகின்றனர் .

உதா ; சந்தைகள் 3700 - 4000 க்குள் வர்த்தகம் நடப்பதாக கொண்டால் சந்தையை 3850 நிலைகளில் நிறுத்தி 3600 புட் ஆப்சன் மற்றும் 4100 கால் ஆப்சனை ஷாட் செல் செய்து லாபம் பார்க்கின்றனர் .

இது ஒரு வகையில் அவர்கள் எடுக்கும் ரிஸ்க்கை காட்டினாலும் நமது சந்தைகளில் உள்ள HNI'S - DII'S - எல்லாம் எங்கே சென்று விட்டார்க என்று புரியவில்லை .

மேலும் முன்பெல்லாம் அந்நிய முதலீட்டாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் எதாவது ஒரு திசையில் இருப்பார்கள் . ஆனால் அவர்கள் செய்யும் வணிகம் முழுவதும் ஹெட்சில் இருக்கும் .

நான் ஒரு மாத வர்த்தக நிலைகள் நடந்ததை வைத்து பார்க்கும் பொழுது -----

அந்நிய முதலீட்டாளர்களும் மற்றும் ஆபரேட்டர்களும் தற்சமயம் சந்தையின் அதிக ஏற்ற இரக்கங்களின் பொழுது சந்தையில் நிப்டி பியுச்சர் வாங்கி புட் ஆப்சனையும் வாங்கி கொள்கின்றனர் . இது ஒரு முறை அல்லது நிப்டி பியுச்சர் விற்று கால் ஆப்சனை வாங்குகின்றனர் .

இவ்வாறு அவர்கள் பாதுகாப்பாக இருக்க நமது சிறிய தினசரி வணிகர்கள் உலக சந்தைகளின் போக்கினை வைத்து வர்த்தகம் செய்ய சந்தைக்குள் இறங்கினால் அவர்கள் கேட்கும் விலைக்கு ஆபரேட்டர்கள் விற்கின்றனர் நமது மக்களும் குழப்பத்துடன் ஸ்டாப் லாஸ் அல்லது நஷ்டத்துடன் சந்தையை விட்டு வெளியே வருகின்றனர் .

இவ்வாறு அவர்கள் விற்றால் சந்தைகளை உயர்த்த போகிறார்கள் என்று அர்தம் பின்னர் சந்தைகளின் உயர்வின் பொழுது புட் ஆப்சனை குறைந்த விலைக்கு வாங்குவார்கள் அது போல கால் ஆப்சனை விற்றால் சந்தையை இறக்கபோகிறார்கள் என்று அர்த்தம் சரிவின் பொழுது கால் ஆப்சனை குறைந்த விலைக்கு வாங்குவார்கள் .

இது போதாதென்று சில சமயங்களில் சந்தையில் புட் ஆப்சனில் அதிக செல்லரை போட்டு வைத்தும் கால் ஆப்சனில் அதிக செல்லரை போட்டு வைத்தும் குழப்பத்தை உண்டு செய்வார்கள் .

இவ்வாறு தான் தற்போதைய சந்தைகளின் போக்கு உள்ளது

இதை புரிந்து கொண்டு தினசரி வணிகர்கள் வணிகம் செய்யுங்கள் என்று கேட்டு கொள்கிறேன் .

அன்புடன்

ரமேஷ்