கடந்த வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இருதினங்கள் நமது சந்தைகளுக்கு விடுமுறை . வியாழன் முடிவுற்ற ஆசிய சநதைகள் அனைத்தும் 2.5 % - 3 % வரை உயர்ந்து முடிந்தன . வியாழனன்று உறுதியாக துவங்கிய ஐரோப்பிய சந்தைகள் அனைத்தும் 3 % அளவிற்கு உயர்ந்து துவங்கின . இது உலக சந்தைகளின் தர வரிசைக்காக இருக்கலாம் .
மேலும் அன்றைய வர்த்தகத்தில் அனைத்து சந்தைகளும் சிறிதும் சரிவின்றி மேல் நோக்கி சென்று முடிவில் அதே அளவுகளில் உயர்வில் முடிந்தன .
வியாழனன்று அமெரிக்க சந்தைகள் 1 % - 2 % வரை உயர்ந்தன . சந்தைகளில் சிறிது உறசாகம் தொடக்கம் முதல் முடிவு வரை காணப்பட்டன என்றே கூறலாம் . முடிவில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள் மேற்குறிப்பிட்ட அதே உயர்வுகளில் முடிந்தது .
வெள்ளியன்று ஆசிய சந்தைகள் துவக்கம் சற்று அபாரமானதாகவே இருந்தது . 1 % - 1.5 % வரை உயர்ந்து துவங்கின . ஆனால் சீன சந்தை மட்டும் காரணமின்றி 4 % உயர்வில் துவங்கின . வியாழன் விடுமுறையில் இருந்த ஜப்பானிய சந்தை 1.5 % உயர்ந்தது உலக தர வரிசை என்று கூறலாம் .
மேலும் கடந்த மூன்று வாரங்களாக நமது சந்தைகள் முன்பு வர்த்தகம் ஆனது போல ( உலக சந்தைகளில் சரிவுகள் வரும் பொழுது நமது சந்தைகள் உயரும் ) தற்பொழுது சீன சந்தைகள் சற்று பெரிய உயர்வினை கண்டு வருகின்றன .
அதுவும் அதிகப்படியான உயர்வினை எனது கணிப்பின் படி எப்பொழுதெல்லாம் சீன சந்தைகள் அளவுக்கு அதிகமாக வேகமாக உயர்கிறதோ அதற்க்கு அடுத்த சில தினங்களில் உலக சந்தைகளில் சில சிறிய உயர்வுகள் வந்து பின்னர் மிகப்பெரிய சரிவுகள் வருகின்றன . அதை வைத்து பார்க்கும் பொழுது உலக சந்தைகள் அடுத்த வாரங்களில் சரிவுக்கு தயாராகி வருவதாக உணர்கிறேன் .
வெள்ளியன்று அமெரிக்க சந்தைகள் உற்சாகத்துடன் 1.5 % வரை உயர்வில் துவங்கின பின்னர் சந்தைகளின் வர்த்தகத்தின் இடையில் சிரிச்லேர் நிறுவனம் திவால் அறிக்கை தருவதாக அறிவித்தது . அது சந்தையில் பெரிய தாக்கத்தினை ஏற்ப்படுத்தியது .
அந்த திவால் அறிக்கை ஏற்க்க அரசு மறுத்துள்ளது என்று செய்தி வந்தது . அதன் பின்னர் சந்தைகள் "பிளாட் " நிலைக்கு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது . பின்னர் சந்தைகள் முடிவில் "பிளாட் " நிலைகளில் முடிந்தன . மேலும் இத்தனை தொடர்ந்து ஐரோப்பியசந்தைகளும் " பிளாட் " நிலைகளிலேயே வர்த்தகத்தினை முடித்து கொண்டன .
ஆனால் ஜெர்மன் மற்றும் கனடா சந்தைகள் 1.5 % - 2 % வரை உயர்வில் முடிந்தன .
மேலும் அமெரிக்க அரசு கூறிய குறிப்பில் திவால் அறிவிப்பிற்கு ஏற்க்கனவே வந்த மோட்டார் நிறுவனங்கள் மீது அரசு தனி கவனம் எடுத்து ஊக்க தொகை தந்ததில் மோட்டார் நிறுவனங்கள் முன்னுரிமை வழங்கப்பட்டது அதையும் பெற்றால் கட்டாயம் திவால் அறிவிப்பிற்கு விண்ணப்பிக்க கூடாது என ஒபாமா அரசு அறிவித்திருந்தது .
தற்போதய சூழ்நிலைகளின் படி மோட்டார் நிறுவனங்கள் திவால் அறிவிப்பிற்கு விண்ணப்பித்தே தீருவது என்ற முடிவில் உள்ளன . இவற்றை வைத்து பார்க்கும் பொழுது அமெரிக்காவில் வரும் நாட்களில் புதிது புதிதாக பிரச்சனைகள் வரலாம் என நினைக்கிறேன் .
ஆக நமது சந்தைகளை பொறுத்த வரை வரும் நாட்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும் . மேலும்தேர்தல் சம்பந்தமான செய்திகள் மற்றும் வதந்திகள் வரலாம் . சந்தைகளில் முதலீட்டாளர்கள் பயத்தின் காரணமாக அதிக அளவில் வெளியேறலாம் முடிந்த வரை சந்தையில் இருந்து ஒதுங்கி இருப்பது தான் நல்லது .
எது எப்படியாகினும் சந்தைகள் சரி வர ஒரு வர்த்தகத்தை கையாள மத்தியில் நிலையான ஒரு அரசு அமைந்து பின்னர் பட்ஜெட் சம்பந்தமான அறிக்கைகள் வெளி வர வேண்டும் அதுவும் நாட்டுக்கும் மற்றும் சந்தைகளுக்கும் சாதகமாக வந்தால தான் சந்தைகள் நிலை பெற வாய்ப்புள்ளதாக கருதுகிறேன் .
நன்றி !!!
கடமையை செய் பலனை எதிர் பார்க்காதே !!!
உனது செயல்களை உலகம் ஏற்று கொள்ளும் வரை !!!
அன்புடன் @