நேற்றைய சந்தையில் நிப்டி 10 புள்ளிகள் சரிவில் துவங்கின . பின்னர் சந்தைகள் சில குறிப்பிட்ட புள்ளிகளுக்கு இடையில் நகர்வினை தொடர்ந்தது . நேற்றைய சந்தையில் முழுவதும் சீன சந்தையை ஒட்டியே இருந்தது . நேற்று காலை பேங்க் ஆப் அமெரிக்கா அறிவிப்பால் டவ் ப்யுச்சர் சந்தைகள் 75 புள்ளிகள் சரிவில் துவங்கின .
ஆனால் நமது சந்தைகள் அமெரிக்கா சந்தைகளை பிபத்றாமல் ஆசியா சந்தைகளை பின்பற்றி வர்த்தகம் நடந்தது . சீன சந்தைகள் கடந்த ஏழு நாட்களாக ஏறு முகமாக வர்த்தகமாகி கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது இந்த ஏழு வர்த்தக தினங்களில் 17 % சதவீதம் உயர்ந்துள்ளன . அதுவும் சிறிது சரிவின்றி ....
நேற்றய ஆசியா சந்தைகள் முடிவில் 3 % - 5 % அதிகரித்து முடிந்துள்ளன .நமது சந்தைகள் 1 % அளவிற்கு சரிவடைந்து முடிந்தன ...
நேற்றைய அமெரிக்கா சந்தைகள் சரிவில் துவங்கின பின்னர் அங்கு அறிவிக்கப்பட்ட " street strees " அறிவிப்பு சந்தைகளுக்கு சிறிய உற்சாகத்தினை அளித்தன . அதனால் சந்தைகள் சிறிதளவு உயர்ந்தன , முடிவி ல்சந்தைகள் 1 % உயர்வடைந்து முடிந்தன ..
இன்றைய ஆசியா சந்தைகள் மீண்டும் உயர்ந்து 1 % - 2 % வரை உயன்ர்ந்து துவங்கி உள்ளன . இனி வரும் நாட்களில் சந்தைகளில் சரிவு என ஒவ்வொரு பதிவிலும் குறிப்பிட்டு சலித்து விட்டது .. கவனமாக இருங்கள்
நமது சந்தைகளை பொறுத்த வரை ஆசியா சந்தைகளை பின்பற்றி 1 % வரை உயர்வில் துவங்கலாம் ... பின்னர் ஆசியா சந்தைகளின் வர்த்தகத்தினை பின்பற்றி நமது சந்தைகள் வர்த்தகமாகும் ...
மேலே கூறியது போல இனி சந்தைகளில் சரிவுகள் எதுவும் இருக்காது போல
சந்தைகள் நிறுத்தப்படும் (ஒரே நாளில் அதிக பட்ச இழப்புகளை சந்தைகள் சந்திக்கலாம் ) அளவிற்கு அந்நிய முதலீட்டாளர்களின் செயல் பாடுகளை உள்ளது . கவனமாக இருங்கள்
நன்றி !!!