புதன், 13 மே, 2009

நேற்றைய சந்தையில் நிப்டி " பிளாட் " நிலைகளில் துவங்கின . பின்னர் சந்தைகளில் சிறிதளவு மேடு பள்ளங்களுடன் வர்த்தகம் நடை பெற்றது . சந்தைகள் ஐ ஐ பி அறிவிப்பிற்கு சற்று ஒரே நிலைகளில் வர்த்தகம் ஆனது . ஐ ஐ பி அறிவிப்புகள் மிகவும் மோசமாக வந்தது . ஆனால் எதிர் பார்த்ததுபோல சந்தைகள் கீழிறங்காமல்மேலே உயர்த்தி செல்லப்பட்டது .

சந்தைகளில் ஆபரேட்டர்களின் கைவண்ணம் நன்றாக தெரிந்தது .

மேலும் ஆசியசந்தைகள் இடை வேளையின் பொழுது சிறிய சரிவுகள் மீள ஆரம்பித்தது . நமது சந்தைகள் முழுவதும் ஆசிய சந்தைகளை பின்பற்றியது . நமது சந்தைகள் வர்த்தகத்தின் முடிவில் ஆசிய சந்தைகள் 2% வரை சரிவில் முடிந்தன .

ஆனால் நமது சந்தைகள் 4 % வரை உயர்ந்தன . இது சற்று அபாரமான ஒரு விஷயம் தான் ........

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் " பிளாட் " நிலைகளில் துவங்கி பின்னர் அங்கு வந்த பொருளாதார அறிவிப்புகள் சற்று மோசமாகவே வந்துள்ளது . மேலும் இப்போதைய நிலைகளுக்கு மேலே செல்ல சந்தைகளுக்கு நல்லதொரு செய்திகள் சந்தைகளுக்கு இல்லை . ஆதலால் அமெரிக்கா சந்தைகள் " பிளாட் " நிலைகளில் முடிந்தன .

இன்றைய ஆசிய சந்தைகள் " பிளாட் " துவங்கி உள்ளன . இன்றும் மற்றும் இவ்வார இறுதி வரை உலக சந்தைகள் முழுவது இது போல தான் வர்த்தகமாகும் என நினைக்கிறேன் . நமது சந்தைகளும் அதே போல தான் ஆனால் சற்று ஏற்ற இறக்க்கங்கள் அதிகமாக இருக்கலாம் .

இன்று நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலில் நமது மாநிலத்தில் குறைவான (40 % ) வாக்குகளே பதிவாகும் என கருதுகிறேன் , மேலும் மத்தியில் அமையவுள்ள ஆட்சி சற்று இழுபறியான சூழலே உருவாகும் என நினைக்கிறேன் .

எது எப்படியாகினும் இந்த மாத இறுதி வரை சந்தைக்குள் செல்லாமல் இருப்பதே நல்லது ...................


நன்றி !!!