நேற்றய சந்தைகள் எதிர்பார்புக்கு சற்று அதிகமாகதுவங்கின . சந்தைகள் 3 . 5 % உயர்வில் துவங்கின . பின்னர் சந்தைகள் சிறிதளவு கூட சரிவுகளின்றி அதே நிலைகளில் நின்று வர்தகமாயின .
நமது சந்தைகள் முக்கிய நிலைகளான "3550 , 3580 "ஆகிய நிலைகளுக்கு மேல் வர்த்தகம் துவங்கியதால் சந்தைகளில் "செல்லிங்" வரவில்லை மாறாக " ஷர்ட் கவரிங் " அதிக அளவில் செய்யப்பட்டுள்ளது அல்லது அந்நிய முதலீட்டாளர்கள் நமது வர்த்தகர்களை "ஷாட் கவர்" செய்ய வைத்துள்ளதாக கருதுகிறேன் .
நமது சந்தைகளை பொறுத்த வரை இந்த அளவிற்கு மேலே வருவதற்கு சரியான காரணங்கள் எதுவும் இல்லை என்றே கருதுகிறேன் . மேலும் பெரும்பாலான பங்குகள் விலை நேற்றைய சந்தையில் சிறிதளவு மட்டும் அதிகரித்து இருப்பது சற்று ஆச்சர்யத்தையே ஏற்படுத்து கிறது .
மேலும் வர இருக்கும் இறுதி கட்ட தேர்தலை எதிர் நோக்கி உள்ள சந்தைகள் அதுவும் குறிப்பாக தமிழகத்தின் தேர்தல் பின்னர் வரவுள்ள " மே 16 "இன் வெற்றி அறிவிப்புகள் ஆகிய பரபரப்பான சூழலில் சந்தைகளில் ஏற்ப்பட்டுள்ள இந்த திடீர் உயர்வு சற்று ஆபத்தானது என நினைக்கிறேன் .
நான் முந்தய பதிவில் குறிப்பிட்டது போல நமது சந்தைகள் "2 % - 2.5 % "வரையிலான உயர்வுகள் மட்டும் சரியானது . ஆனால் நேற்றைய சந்தைகள் 5. 5 % வரை உயர்வில் முடிந்துள்ளது .
நேற்றய ஆசியா சந்தைகள் முடிவிலும் உயரங்களில் முடிவடைந்துள்ளன . ஆனால் ஆசியா சந்தைகளில் சீன சந்தைகளின் உயர்வினை நமது சந்தைகள் நேற்று பின்பற்றி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது . ஆனால் சீன சந்தைகளில் இந்த அளவிற்கு உயர்வுகள் வர எதுவும் குறிப்பிடும் படியான நல்ல செய்திகள் எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும் .
நேற்றய அமெரிக்கா சந்தைகள் 1 % அளவிற்கு சாதாரணமாக துவங்கின பின்னர் சந்தைகள் முடிவில் 2.5 % உயர்வில் முடிந்துள்ளன . உலக வரிசைப்படி ஆசியா சந்தைகளில் நமது சந்தையும் மற்றும் சீன சந்தையும் தான் அதிக அளவு கிட்டத்தட்ட இரு தினங்களில் 10 % அளவிற்கு அதிகரித்துள்ளன .
இன்றைய ஆசியா சந்தைகள் (ஜப்பானிய சந்தைகள் நாளை வரை விடுமுறை ) பிளாட் நிலைகளில் வர்த்தகத்தினை துவங்கி உள்ளன . நமது சந்தைகளும் அதே போல பிளாட் நிலைகளில் துவங்கலாம் . பின்னர் சந்தைகளில் சிறிய உயர்வுடன் கூடிய பெரிய சரிவுகள் வரலாம் .
கவனமாக இருங்கள் !!! ..
நன்றி !!!