நேற்றைய சந்தைகளில் நிப்டி 10 புள்ளிகள் சரிவில் துவங்கின பின்னர் சந்தைகள் ஆசிய சந்தைகளின் போக்கில் வர்த்தகம் ஆனது . நேற்றைய சந்தையில் நிப்டி முக்கிய எதிர் நிலையான " 3670 , 3705 " ஆகிய இரண்டு நிலைகளையும் கடந்து சந்தைகள் உயர்வினை கண்டன .
பின்னர் ஆசிய சந்தைகளின் வீழ்ச்சியை கண்டு நமது சந்தைகளும் சிறிது சரிந்தன . அந்த சரிவின் பொழுது சந்தைகள் முக்கிய ஆதரவு நிலையான "3650 "நிலைகளை உடைத்து கீழிறங்கின . அந்த நிலைகளில் அடுத்த முக்கிய ஆதரவு நிலையான" 3610 "மட்டும் தான் உள்ளது . ஆனால் அந்த நிலைகள் உடை படாமல் சந்தைகள்சரிவில் இருந்து மீண்டன .
ஆசிய சந்தைகளும் முடிவில் " பிளாட் " நிலைகளிலேயே வர்த்தகத்தினை முடித்து கொண்டன . நமது சந்தைகள் முடிவில் " 3635 " என்ற புள்ளிகளில் சந்தைகள்" 45 " புள்ளிகளை இழந்து முடிந்தன ..
நேற்றைய அமெரிக்கா சந்தைகள் 1 % அளவிற்கு சரிவில் துவங்கின . பின்னர் அங்கு வந்த வீடு விற்ப்பனை அறிவிப்புகள் சற்று மந்தமாக இருந்ததால் சந்தைகளில் சற்று சரிவுகள் வந்தது என தகவல் வருகிறது . மேலும் அமெரிக்கா சந்தைகள் முடிவில் 2.5 % - 3 % வரை சரிவில் முடிந்தன .
வர வர சந்தைகள் சரியான காரணங்களுக்கு உட்பட்டு வர்த்தகம் நடப்பதில்லை என்பதற்கு நேற்றைய அமெரிக்கா சந்தைகளே நல்லதொரு உதாரணம் ஆகும் . வீடு விற்ப்பனை அறிவிப்புகள் சரியில்லை என்றால் காப்பர் மற்றும் அது சம்பந்தமான் பொருளின் விலைகள் இறங்கும் . ஆனால் பங்கு சந்தைகளுக்கு சிறிது சம்பந்தம் இல்லாத இந்த அறிவிப்பினால் சந்தைகளில் சரிவு என்பது சற்று ஆச்சர்யமே .
இன்றைய ஆசிய சந்தைகள் அமெரிக்கா சந்தைகளை பின்பற்றி 2 % - 3 % வரையிலான சரிவில் துவங்கி உள்ளன . நமது சந்தைகளும் அதே போல சரிவில் 2% - 3 % துவங்கலாம் .
ஆனால் நேற்றைய சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்களின் வாங்கியது சற்று அதிகமாக உள்ளது . ஆகவே சந்தைகளில் சற்று உயர்வுகள் வரலாம் . கவனமாக வர்த்தகம் செய்யவும் . உயர்வு நிலைகளில் செல்லிங் செய்யலாம் . ( ரிஸ்க் எடுக்கும் நபர்கள் மட்டும் )
நன்றி !!!