திங்கள், 11 மே, 2009

கடந்த வாரம் வரை சந்தைகள் உலக சந்தைகளின் வரிசையில் அனைத்து சந்தைகளும் உயர்வு விகிதத்தினை சரியாக கடை பிடித்து உயர்ந்துள்ளது . ஆனால் சீன மற்றும் கொரிய சந்தைகள் மட்டும் முறையே 12 % - 7 % உயந்துள்ளன ..

இன்றைய ஆசியா சந்தைகள் " பிளாட் " நிலைகளில் துவங்கி உள்ளன . மேலும் உலக சந்தைகள் பலவும் இது வரை அதிக பட்ச உயரங்களை அடைந்துள்ளன . நுட்ப காரணிகள் படி கூறப்பட்ட அனைத்து இலக்குகளையும் உலக சந்தைகள் அடைந்துள்ளன.

நுட்ப காரணிகளை படி கூறப்பட்ட இலக்குகள் ----
******************************************************
டவ் ஜோன்ஸ் --- 8400 - 8500 .
நிக்கே --- 9400 - 9500 .
சென்செக்ஸ் --- 12250 - 12500 .
நிப்டி ----3650 - 3750 .
hang செங் ---- 15500 - 16200 .

*******************************************************
மேற்கொண்டு சந்தைகள் இன்னும் மேலே செல்ல நல்ல வலுவான செய்திகள் தற்சமயம் எதுவும் இல்லை . மேலும் சந்தைகளில் வரும் வார மற்றும் நாட்களில் எதிர் மறையான செய்திகள் சில சந்தைகளில் சில தாக்கத்தினை ஏற்படுத்தலாம் . அந்த சிறிய தாக்கங்கள் சந்தைகளில் சரிவினை உண்டு செய்யலாம் ..


நமது சந்தைகள் இன்று" 2 0 "புள்ளிகள் உயர்வில் அல்லது " பிளாட் " நிலைகளில் துவங்கலாம் . நமது சந்தைகள் பொறுத்த வரை வெள்ளியன்று நடந்த வர்த்தகத்தில் சந்தைகள் முக்கிய ஆதரவு நிலைகளான " 3610 - 3610 " உடைபட்டு இருப்பது சந்தையின் பலவீனத்தை காட்டு கிறது

இன்றைய சந்தைகள் 3610 நிலைகளை முக்கிய அதரவு நிலையாகவும்" 3655 " முக்கிய எதிர் நிலையாகவும் இருக்கும் இருந்தாலும் சந்தையில் ஆபரேட்டர்கள் சந்தையை 3655 நிலைகளுக்கு மேலே கொண்டு செல்ல முனையலாம் .

ஆசியா சந்தைகளின் போக்கினை வைத்து பார்க்கும் பொழுது நமது சந்தைகள் இன்றைய சந்தையில் சற்று சரிவுகள் வரலாம்

நிப்டி நிலைகள் ----

அதரவு --- 3610 , 3600 , 3580 ...
எதிர்ப்பு --- 3650 , 3670 , 3700 ...

நன்றி !!!

நல்ல உறுதியுடன் உழைப்பும் இருந்தால் தான் வெற்றி எனும் கனியினை பறிக்க முடியும் .....