ஞாயிறு, 31 மே, 2009

விழிப்புணர்வு இடுகை 5

மே மாத சந்தைகள் பற்றிய ஒரு விழிப்புணர்வு இடுகை ,
************************************************************
கடந்த மாத சந்தைகளை பொறுத்த வரை சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்களின் ஒரு மிகப்பெரிய திட்டத்துடன் அவர்களின் வாங்கும் படலம் ஏப்ரல் மாத இறுதியிலேயே ஆரம்பித்துள்ளது . காரணம் அவர்களுக்கு அடுத்து அமையுள்ள ஆட்சி காங்கிரெஸ் என்பது அவர்களுக்கு சரியாக தெரிந்துள்ளது. நமது மக்களிடையே எலெக்சன் வரை சந்தைகள் விழாது என்ற ஊடகத்தினை மட்டும் பரப்பி விட்டு சந்தைகளை சரியானதொரு தருணத்தில் மேலே கொண்டு செல்ல ஆரம்பித்தனர் .

மேலும் சந்தைகளில் கடந்த மாதம் சிறிய பங்குகள் முதல் லார்ஜ் கேப் மற்றும் ப்ளூ சிப் கம்பெனிகளின் பங்குகள் நன்றாக உயர்த்தப்பட்டுள்ளது . அதுவும் பல பங்குகளின் விலைகள் இரண்டு மூன்று மடங்கிற்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது .

நமது சந்தைகளின் வளர்ச்சி என்பது அதிகம் வியாபாரம் இல்லாமல் சந்தைகள் உயர்வு அடைந்துள்ள அந்த வளர்ச்சி விகிதங்கள் சாதரணமாக
2 % - 5 % வரை ஆகும் .

பங்குகளின் விலைகள் அதிக அளவில் வர்த்தகம் இல்லாமல் திடீர் திடீர் உயர்வுகளை அடைய செய்துள்ளனர் .

சந்தைகளில் வர்த்தகத்தின் அளவு குறைந்து வரும் பொழுது சந்தைகள் திடீர் உயர்வுகளை சந்திக்கின்றன . ஆனால் வர்த்தகம் அதிகரிக்கும் பொழுது சந்தைகள் சிறிய அளவிலான சரிவுகளை மட்டும் சந்திக்கிறது . மேலும் அந்நிய மற்றும் ஆபரேட்டர்கள் சந்தைகளில் அடாசு பங்குகளின் விலைகளையும் , மற்றும் முதல் தரம்மான பங்குகளின் விலைகளையும் சற்று அதிகமாக உயர்த்தி உள்ளனர் .

அந்த உயர்வுகளில் தங்கள் பங்குகளை விற்று வருகிறார்கள் . மேலும் இது போன்ற செயல் சந்தைகள் பின்னாளில் பலவீனம் அடைய வாய்ப்ப்பு உள்ளதையே காட்டுகிறது .

நமது மக்களிடையே தவறான ஒரு வர்த்தக முறை உள்ளது அது பங்குகளின் விலைகள் மிகவும் சரிவடைந்து கீழே வாரும் பொழுது கையில் உள்ள பங்குகள் அனைத்தினையும் விற்று விட்டு சும்மா இருப்பார்கள் . அப்பொழுது வாங்க வேண்டும் செய்ய மாட்டார்கள் . ஆனால் இது போன்ற அதிக விலைகள் வரும் பொழுது உள்ளே புகுந்து சிறிதும் மீதமின்றி அனைத்து தொகைகளுக்கும் பங்குகளை வாங்கி போட்டு விடுவார்கள் .

இதை பொறுத்த வரை வாறன் பபெட் அவர்கள் கூறியது போல சந்தைகள் அதிகம் சரிவடையும் பொழுது நாம் சந்தைகளில் வாங்க வேண்டும் அதிகம் உயரும் பொழுது விற்று விட்டு சந்தையை விட்டு வெளியேற வேண்டும் .அதையும் மீறி நாம் விற்றதிர்க்கும் அதிகமாக செல்லும் பொழுது சந்தையை விட்டு ஒதுங்கி இருக்க வேண்டும் .

நம்து மக்கள் இது வரை மூன்று இடங்களில் கோட்டை ( முதலில் சந்தைகள் 20 % சரிவு சனவரி 2008 , அடுத்து " LIFE TIME " குறைந்த பட்ச புள்ளிகளான அக்டோபர் மாதம் 2008 , அடுத்தது சமீபத்திய உயர்வான மே 2009 ) விட்டு விட்டனர் இனியாவது சரியாக சிந்திப்பார்கள் என நம்புகிறேன் ....

மேற்குறிப்பிட்ட மூன்று நிகழ்வுகளின் பொழுதும் அந்நிய முதலீட்டாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் நமது சந்தைகளில் இருந்து நமது மக்கள் பலரை வெளியேற்றி அனுப்பி விட்டனர் .

இன்றைய சூழலில் நமது சந்தைகள் உயர்ந்துள்ள உயர்வுகளை மனதில் வைத்து உங்கள் லாபத்தினை உறுதி செய்ய தவறாதீர்கள் .

நன்றி !!!

அடுத்த இடுகையான விழிப்புணர்வு இடுகை 6 - ஐ படிக்க தவறாதீர்கள் ...