சனி, 9 மே, 2009

நேற்றைய சந்தைகள் நாம் எதிர் பார்த்தபடி ஆசியசந்தைகளின் நகர்வின் ஊடே செல்லாமல் சந்தைகள் தனித்துவமாக வர்த்தகம் ஆனது . துவக்கத்தில் சந்தைகள் 20 புள்ளிகள் அதிகரித்து துவங்கின பின்னர் சந்தைகளில் முதலீட்டாளர்களிடையே சற்று லாபத்தினை உறுதி செய்யும் சூழல் உருவானது . அதனால் சந்தைகளில் சில குறிப்பிட்ட துறைகளில் பங்குகள் பெருமளவு விற்கப்பட்டன .

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சந்தைகளில் முந்தய பதிவுகளில் கூறியபடி உலக சந்தைகளில் உயர்வுகள் வரும் பொழுது நமது சந்தைகளில் சரிவுகள் வரும் என்று பதிவில் குறிப்பிட்டது போல நேற்று சரிவுகள் வந்தன .

ஆனால் ஆசிய சந்தைகள் முடிவில் .5 % - 1 % வரை உயர்ந்து முடிந்தன . ஆனால் ஆசிய சந்தைகள் சரியான ஒரு நிலைப்பாடு அல்லாமல் இவ்வாறு முடிந்துள்ளன . இதை விட ஆச்சர்யப்படும் விஷயம் என்ன வென்றால் நேற்றைய பதிவில் குறிப்பிட்டது போல சந்தைகள் மூன்று அதரவு மற்றும் எதிர் நிலைகளை கடந்து சந்தைகள் வர்த்தகம் நடந்தன . மேலும் சந்தைகள் வரும் நாட்களில் அந்நிய முதலீட்டாளர்கள் சற்று குறைந்த அளவாவது வெளியேறலாம் என கருதுகிறேன் .

நேற்றய சந்தையில் நமது சந்தைகள் முக்கிய நிலைகளான "3690 " நிலைகளை தாண்டிய போதும் சந்தைகளில் பெரிதாக எதுவும் நகர்வுகள் இல்லை . அமெரிக்கா "street strees " சம்பந்தமான அறிவிப்பு சந்தைகளுக்கு சற்று எதிர் மறையான அறிவிப்பாகவே கருதுகிறேன் .. மேலும் உலக சந்தைகளில் இந்த அறிவிப்பு சந்தைகளில் பெரிய தாக்கத்தினை எதுவும் ஏற்படுத்த வில்லை என்பது ஆச்சர்யமே . ..

நேற்றய அமெரிக்கா சந்தைகள் 1.5 % - வரை அதிகரித்து துவங்கின பின்னர் சந்தைகளில் வந்த வேலையில்லா அறிவிப்பு மீண்டும் அதிகரித்தது . அந்த அறிவிப்புக்கு பின்னர் சந்தைகள் சிறிதளவு சரிந்தன .முடிவில் கீழிறங்க வேண்டிய சந்தைகள் 1.5 % - 2.% வரை உயர்வில் முடிந்தன .

நன்றி !! !

மனிதனின் ஆசை எப்பொழுதும் குறைவதில்லை .

ஏனென்றால் அது மனதின் பசி .......................